$
உடல் வலிமையை அதிகரிப்பதுடன் களைப்படையாத ஆற்றலையும் பெறுவது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். உயிர்ச்சக்தியை மேம்பட அதிகரிக்கும் சில யோகாசனங்களைக் காண்போம்.
அன்றாட வாழ்வில் நாம் நமது சக்தியின் தேவையை அதிகரிப்பது முக முக்கியமான ஒன்றாகும். அதிகப்படியான வேலைப்பளு காரணமாக உடலில் ஆற்றல் முற்றிலும் இழக்கப்படுகிறது. எனவே தினந்தோறும் நாம் செய்து முடிப்பதற்கான வேலை அதிகரிக்க உடலில் ஸ்டாமினாவை அதிகரிப்பது அவசியம். இவ்வாறு ஸ்டாமினாவை அதிகரிப்பதன் மூலம் உடலைப் புத்துணர்ச்சியுடன் களைப்படையாமல் வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அன்றாட வாழ்வில் உள்ள பணிகளைச் சிறப்பாக செய்து முடிக்க தேவைப்படும் ஸ்டாமினாவை அதிகரிக்க சில யோகாசனங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றைப் பற்றி இங்குக் காண்போம்.
ஸ்டாமினாவை அதிகரிக்க உதவும் யோகாசனங்கள்
இந்த யோகாசனங்களின் மூலம் உடலில் ஸ்டாமினாவை அதிகரிக்க முடியும்.
வீரபத்ராசனா I
இந்த வகை ஆசனம் செய்யும் போது உடலில் ஸ்டாமினா அதிகரிப்பதுடன் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும். இந்த யோகாசனத்தில் இடுப்பு, தொடைகள், மார்புப் பகுதி ஆகியவை நீட்டப்பட்டு தசைகளை வலுப்படுத்துகிறது. இது ஆற்றல் ஓட்டத்தைத் தூண்டுகிறது.
அதோ முக ஸ்வானாசனா
அதோ முக ஸ்வானாசனம் கீழ் நோக்கிய நாய் போஸ் அமைப்பைக் கொண்டுள்ளது. இது உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமளிக்கும் வகையில் அமைகிறது. மேலும், இது உடலுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதாக அமைகிறது. உடலில் தசைகளை நீட்டி ஆற்றலை ஊக்குவிக்கிறது.
நவாசனம்
இது மனதை சமநிலையில் வைப்பதுடன் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. இது முக்கிய தசைகளை நீட்டி உடலின் சமநிலையையும், நிலைத்தன்மையையும் அதிகரிக்கிறது. இது நுரையீரல் திறனை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்
உட்கட்டாசனம்
நாற்காலி அமைப்பிலான ஆசன வகையைச் சேர்ந்தது உட்கடாசனம் ஆகும். இதில் கால்கள், மையப்பகுதி மற்றும் முதுகின் தசைகளை ஈடுபடுத்தக்கூடிய சக்தி வாய்ந்த யோகாசனம் ஆகும். நாற்காலி போஸ் கொண்ட இந்த ஆசனத்தின் மூலம் மனதை நிலைநிறுத்தி, மன உறுதியை வளர்க்கவும் முடியும்.
புஜங்காசனா
புஜங்காசனா என்பது கோப்ரா அமைப்பிலான வடிவத்தைக் கொண்ட யோகாசனம் ஆகும். இதில், முதுகெலும்பைத் தூண்டி முதுகு மற்றும் அடிவயிற்றில் உள்ள தசைகளை வலுப்படுத்துவதாக அமைகிறது.
சூரிய நமஸ்காரம்
உடலின் பல்வேறு வகை பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைவது சூரிய நமஸ்காரம் ஆகும். இது இதயத்துடிப்பை உயர்த்தி, தசைகளை நீட்டி, ஸ்டாமினாவை அதிகரிக்கிறது. மேலும், சுவாச நுரையீரல் திறனை இந்த யோகாசனத்தின் மூலம் அதிகரிக்கலாம்.
திரிகோணாசனம்
முழு உடலும் புத்துணர்ச்சி பெற திரிகோனாசனம் உதவுகிறது. குறிப்பாக, இடுப்பு பகுதிகள், தொடை எலும்புகள், முதுகெலும்புகளை நீட்டி சுவாசனம் செய்யும் போது ஸ்டாமினாவை அதிகரிக்க இயலும்.

இந்த பதிவும் உதவலாம்: Trikonasana Benefits: திரிகோணாசனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன?
Image Source: Freepik