Yoga For Thyroid: தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த யோகாசனங்கள்

  • SHARE
  • FOLLOW
Yoga For Thyroid: தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த யோகாசனங்கள்

ஹைப்போ தைராய்டிசம் என்றால் என்ன?

உலகளவில் பெரும்பாலானோர் ஹைப்போ தைராய்டிசத்தால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவான தைராய்டு என்பது தொண்டையில் இருக்கும் ஹார்மோன்களை சுரக்கும் சிறிய சுரப்பி ஆகும். இது உடலின் வெப்பநிலை, வளர்ச்சிதை மாற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் பொறுப்பாகும். இந்த தைராய்டு சுரப்பி போதுமான தைராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய முடியாததே ஹைப்போ தைராய்டிசம் எனப்படுகிறது.

இது குளிர் உணர்திறன், சோர்வு, வறண்ட தோல், விவரிக்க முடியாத உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளை உண்டாக்குகிறது. இந்த தைராய்டு பிரச்சனையைச் சரி செய்ய சில யோகாசனங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த யோகாசனங்கள் தைராய்டு சுரப்பிகளை ஆரோக்கியமாக வைப்பதுடன், வளர்ச்சிதை மாற்றத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் தைராய்டுக்கு பயனுள்ள ஐந்து யோகாசனங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Thyroid: தைராய்டு பிரச்னை தீர இந்த ஆசனங்களை முயற்சிக்கவும்…

தைராய்டு பிரச்சனைக்கு உதவும் யோகாசனங்கள்

நவாசனம்

  • படகு போஸ் என்றழைக்கப்படும் இந்த யோகாசனத்தில் முதலில் தரையில் உட்கார்ந்து கால்களை முன்னால் நீட்டி, கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின், மெதுவாக மேல் உடலை சற்று முதுகில் சாய்க்க வேண்டும். இதில் முதுகுத்தண்டை நேராக வைத்து, முகத்தை மார்பை நோக்கி இழுக்க வேண்டும்.
  • முழங்கால்களை வளைத்து உட்கார்ந்திருக்கும் போது, உடல் எடை சமநிலைப்படுத்தப்படுகிறது. இரு கால்களையும் மெதுவாக காற்றில் உயர்த்த வேண்டும். இதில் கால்விரல்கள் தரையிலிருந்து உயரத்திலும், உடல் V -வடிவத்திலும் இருக்க வேண்டும்.
  • பிறகு உள்ளங்கைகள் ஒன்றையொன்று எதிர்கொள்ளும் வகையில் கைகளை தரைக்கு இணையாக வைத்து முன்னால் நீட்ட வேண்டும்.
  • இந்த அமைப்பில் மூச்சை உள்ளுழுக்கும் மற்றும் வெளிவிடும் போது முக்கிய தசைகள் செயல்படுகிறது.

சர்வாங்காசனம்

  • தோள்பட்டை நிலை என்றழைக்கப்படும் சர்வாங்காசனத்தில், முதலில் முதுகில் படுத்து, கைகளை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • உடல் ஆதரவுக்காக, கைகள் மற்றும் தோள்பட்டையை தரையில் உறுதியாக அழுத்திக் கொள்ளலாம். பின் மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக கால்களை 90 டிகிரி அளவு உயர்த்த வேண்டும்.
  • மூச்சை வெளியே இழுக்கும் போது, இடுப்பை தரையில் இருந்து உயர்த்த வேண்டும். இதில் இடுப்பை ஆதரவாக வைக்க கைகளை கீழ் முதுகில் அழுத்த வேண்டும்.
  • உடலையும், கால்களையும் தோள்பட்டையிலிருந்து நேர்க்கோட்டில் இருக்குமாறு வைக்க வேண்டும். எனினும், கழுத்து மற்றும் தலையின் மூலம் உடல் எடையை ஆதரிக்கக் கூடாது.
  • இந்நிலையில் 4 முதல் 5 வினாடிகள் இருந்து மூச்சை உள்ளிழுத்து வெளியே விட, பின் மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Joint Pain Yoga: மூட்டு வலி சீக்கிரம் குறையணுமா? இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க

ஹலாசனம்

  • இது கலப்பை போஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தில் கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் மூச்சை உள்ளிழுத்து வயிற்று தசைகளைஈடுபடுத்தி, கால்களை 90 டிகிரி வரை உயர்த்தலாம்.
  • இதில் தோள்பட்டை தரையில் அழுத்திய பிறகு முதுகை ஆதரவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு இடுப்பை தரையில் இருந்து உயர்த்துவதற்கு கைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பிறகு, முதுகு தரையில் செங்குத்தாக இருக்கும் வகையில், தலைக்குப் பின்னால் கால்விரல்கள் தரையைத் தொடும் வரை தள்ள வேண்டும்.
  • சில 4 முதல் 5 முறை மூச்சின் நிலையைப் பிடித்து, பின் ஆரம்ப நிலைக்குத் திரும்பலாம்.

ஷவாசனா

  • ஷவாசனா சடல போஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இதில், கைகள் மற்றும் கால்களை பக்கவாட்டில் வைத்து முதுகில் வசதியாக படுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் கண்களை மூடிக் கொண்டு மனதை அமைதியாக வைக்க முயற்சிக்கவும்.
  • இந்நிலையில் நாசி வழியாக, மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக் கொள்வதுடன், கால்விரல்களில் தொடங்கி உடலின் ஒவ்வொரு பகுதியிலும் கவனத்தை செலுத்தலாம்.
  • அதன் பிறகு மூச்சை வெளியே விட்டு, உடலை நிதானமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் 10 நிமிடங்கள் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.

விபரீத கரணி

  • Leg up the Wall எனப்படும் இந்த யோகாசனத்தில் ஒருவர் சுவருக்கு அருகில் முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் கால்களை 90 டிகிரி கோணத்தில் சுவரின் மீது சாய்த்து கைகளை மார்புக்கு அருகில் வைத்துக் கொள்ளலாம்.
  • இதில் தலை மற்றும் உடல் தரையில் இருக்கும். மேலும், தோள்பட்டை, இடுப்பு வரிசையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
  • இந்நிலையில் நிதானமாக ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும். 10 நிமிடங்களுப் பிறகு, கால்களை மார்பின் பக்கத்தில் மடித்து சிறிது நேரம் வைத்து ஆரம்ப நிலைக்குத் திரும்பி விடலாம்.

இந்த யோகாசனங்கள் தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த நன்மையைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Dry Eyes: கண்கள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த யோகாவை தினமும் செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Yoga For Thyroid: தைராய்டு பிரச்னை தீர இந்த ஆசனங்களை முயற்சிக்கவும்…

Disclaimer