How To Cure Thyroid By Yoga: தற்போது தைராய்டு பிரச்சனை இன்று பலரும் சந்திக்கக் கூடிய பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. பெரும்பாலான பெண்கள் இந்த நோயுடன் போராடி வருகின்றனர். தைராய்டு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் கழுத்தில் உள்ள சுரப்பி போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்யாததே ஆகும். இதன் காரணமாக உடல் பருமன், உடல் பலவீனம், உடல் வலி, மூட்டு வலி, குழந்தையின்மை போன்ற உடல்நலப் பிரச்சனைகள் எழலாம்.
ஆனால், இந்த தைராய்டு பிரச்சனைக்கு நிரந்தர சிகிச்சை இல்லை. அதே சமயம் இந்த தைராய்டு பிரச்சனையை அதிகரிக்காமல் தடுக்க சில யோகாசனங்கள் உதவுகின்றன. இதில் தைராய்டு பிரச்சனையைக் குறைக்க உதவும் யோகா குறித்து யோகா நிபுணர், உடல்நலம் மற்றும் கருவுறுதல் பயிற்சியாளர், மேஹக் கன்னா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Eyesight Yoga: கண்ணில் அடிக்கடி பிரச்சனையா? இந்த யோகாசனங்களை டிரை பண்ணுங்க
தைராய்டு பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற யோகா
தைராய்டுக்கான புஜங்காசனம்
இந்த புஜங்காசனம் கோப்ரா போஸ் என அழைக்கப்படுகிறது. இது தைராய்டு சுரப்பியைத் தூண்டி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான உடல் தோரணையை ஊக்குவித்து, தைராய்டு ஆரோக்கியத்திற்குப் பலனளிக்கிறது. இந்த யோகாசனம் செய்வது உடலில் ஒட்டுமொத்த ஹார்மோன் சமநிலைகு உதவுகிறது.
தைராய்டுக்கான ஹலாசனா
கலப்பை போஸ் என அழைக்கப்படும் இந்த யோகாசனம், தைராய்டு சுரப்பிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தைராய்டு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது கழுத்து மற்றும் தோள்களில் ஹார்மோனைத் தூண்டி, தைராய்டு பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
தைராய்டுக்கான ஷஷாங்காசனா
இந்த ஆசனத்தில் கழுத்தைத் தளர்த்தி செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இவை தைராய்டு ஆரோக்கியத்திற்கு பயனளிக்கிறது. இந்நிலையில் முன்னோக்கி சாய்வது தைராய்டு சுரப்பியைத் தூண்ட உதவுகிறது.
தைராய்டுக்கான சர்வாங்காசனம்
இது தோள்பட்டை நிலை எனவும் அழைக்கப்படுகிறது. தைராய்டு சுரப்பியைத் தூண்டி, தைராய்டு ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. இவை கழுத்தில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, தைராய்டு பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Exercises: தொப்பை வேகமாகக் குறைய தினமும் இந்த யோகாசனங்களை செய்யுங்க
தைராய்டுக்கான உஸ்ட்ராசனம்
ஒட்டக போஸ் அல்லது உஸ்ட்ராசனம், கழுத்தில் மென்மையான அழுத்தத்தைப் பயன்படுத்துகிறது. இது தைராய்டு சுரப்பியைத் தூண்டுவதன் மூலம், தைராய்டு ஆரோக்கியத்தில் பயனளிக்கிறது. இந்த ஆசனம் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், உடலின் ஒட்டுமொத்த நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.
தைராய்டுக்கான பாலம் பந்தாசனா
பிரிட்ஸ் போஸ் அல்லது சேதுபந்தாசனம் என்பது கழுத்தை நீட்டிப்பதை குறிக்கிறது. இந்த யோகாசனம் தைராய்டு சுரப்பியைத் தூண்டுவதன் மூலம் தைராய்டு ஆரோக்கியத்திற்கு பயனளிக்கிறது. இந்த ஆசனம் செய்வது முதுகை பலப்படுத்தி, தோரணையை மேம்படுத்துகிறது.
தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்படுத்த, இந்த யோகாசனங்களைப் பின்பற்றலாம். எனினும், மருத்துவ ஆலோசனையின் படி மட்டுமே இந்த யோகாசனங்களை வழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Morning Meditation Benefits: காலையில் தியானம் செய்பவரா நீங்கள்? அப்ப இத நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.
Image Source: Freepik