Yoga For Asthma: உங்களுக்கு ஆஸ்துமா இருக்கா? இந்த யோகாசனங்களை செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Yoga For Asthma: உங்களுக்கு ஆஸ்துமா இருக்கா? இந்த யோகாசனங்களை செய்யுங்க


Which yoga is best for asthma: ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை உலக ஆஸ்துமா தினமாகக் கருதப்படுகிறது. ஆஸ்துமா என்பது ஒரு தீவிரமான மருத்துவ நிலையாகும். இதில் மூச்சுக்குழாய்கள் சுருங்கி வீக்கமடைகிறது. இதனால் சளி குவிந்து சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. உலக ஆஸ்துமா தினமானது ஆஸ்துமா குறித்தும், அதன் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது.

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் தங்களது உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இதில் வழக்கமான ஒன்றாக தினந்தோறும் யோகாசனங்களை மேற்கொள்ள வேண்டும். இந்த யோகாசனங்கள் செய்வது ஆஸ்துமா பிரச்சனையைக் குறைப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இதில் ஆஸ்துமா நோயாளிகள் செய்ய வேண்டிய யோகாசனங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mind Relaxation Yoga: மனதை ரிலாக்ஸாக வைக்க இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க

ஆஸ்துமா நோயாளிகளுக்கான யோகாசனங்கள்

எந்தவொரு பக்க விளைவுகளும் இல்லாமல் ஆஸ்துமா அறிகுறிகளை நிர்வகிக்க உதவும் சிறந்த வழிகளில் ஒன்று யோகாசனம் ஆகும். இந்த யோகாசனங்கள் செய்வது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

சுகாசனா (Sukhasana - Easy Pose)

  • இது எளிதான போஸ் அமைப்பைக் கொண்ட யோகாசனம் ஆகும்.
  • இதில் முதுகுத் தண்டை நேராக வைத்து உட்கார்ந்து, இடது காலை மடக்கி இடது பாதத்தை வலது தொடையின் கீழும், வலது காலை வளைத்து, வலது பாதத்தை இடது தொடையின் கீழும் வைக்க வேண்டும்.
  • பின் கைகளை முழங்கால்கள் அல்லது தொடைகளில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த ஆசனம் செய்வது மன அழுத்தத்தை குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
  • மேலும், நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தி ஆஸ்துமா அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

உஸ்ட்ராசனா (Ustrasana - Camel Pose)

  • ஒட்டக தோரணை என்றழைக்கப்படும் இந்த யோகாசனம் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
  • இதில், முதலில் மேல் உடலை செங்குத்தாக வைத்து தொடைகளால் மண்டியிட வேண்டும்.
  • கால்விரல்களை தரையில் மெதுவாக அழுத்தி வைத்து கால்களை பின்புறமாக வைக்க வேண்டும்.
  • பின், மூச்சை உள்ளிழுத்து, இடுப்பு முதல் தலை வரை பின்னோக்கி நீட்ட வேண்டும்.
  • மூச்சை வெளிவிட்டு, வலது கையை பின்னால் எடுத்து குதிகாலைப் பிடிக்க வேண்டும்.
  • இதில் கழுத்தை அதிகபட்ச நீளத்திற்கு நீட்டி சுவாசத்தை ஆழமாகவும், மெதுவாகவும் இருக்க வேண்டும்.

புஜங்காசனம் (Bhujangasana - Cobra Pose)

  • இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் குப்புற படுத்துக் கொண்டு. கால்களை ஒன்றாக இணைத்து வைத்திருக்க வேண்டும்.
  • பின் கைகளை மடக்கி, உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இரு புறமும் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதியை மேலே உயர்த்த வேண்டும்.
  • இந்நிலையிலேயே பின்னோக்கி வளைய வேண்டும். இதில் அடிவயிறு தரையில் ஒட்டியிருக்க வேண்டும்.
  • இவ்வாறு செய்வது ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகுந்த பலனளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Thyroid: தைராய்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த யோகாசனங்கள்

சேது பந்தாசனா (Setu Bandhasana - Bridge Pose)

  • சேது பந்தாசனா செய்வதற்கு முழங்கால்களை வளைத்து கால்களுக்கு இடையில் குறைந்தபட்சம் இடுப்பு அகல இடைவெளி விட்டு வைத்திருக்க வேண்டும்.
  • இந்நிலையில், கால்களை தரையில் இருந்து உயர்த்த வேண்டாம். பின், கைகளை உடலின் அருகில் வைத்து, உள்ளங்கைகளை தரையில் தட்டையாக வைக்க வேண்டும்.
  • இதில் ஆழ்ந்த மூச்சை எடுத்து மெதுவாக முதுகை உயர்த்த வேண்டும். தோள்கள் மட்டும் தரையைத் தொடும் வரை அதை உயர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.
  • இந்நிலையில் கைகள், தோள்கள் மற்றும் கால்களில் உடலை ஆதரிக்குமாறு வைக்க வேண்டும்.
  • இந்நிலையில் சாதாரணமாகவும் மெதுவாகவும் சுவாசித்து, 30-60 விநாடிகள் இருந்து, பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பலாம்.

பிராணயாமா (Pranayama - Breathing Exercises)

  • இது சுவாசப் பயிற்சிகளின் தொகுப்பாகும்.
  • ஆஸ்துமாவிற்கான ஒரு பயனுள்ள பிராணயாமா கபால்பதி சுவாசம் ஆகும்.
  • இந்த ஆசனம் மூக்கின் வழியாக விரைவான சுவாசத்தை உள்ளடக்கியதாகும்.
  • இதில் மூச்சை உள்ளிழுப்பது மெதுவாகவும், ஆழமாகவும் வைத்திருக்க வேண்டும்.

இந்த யோகாசனங்கள் செய்வது ஆஸ்துமா பிரச்சனைக்குத் தீர்வாக அமைகிறது. எனினும், ஆஸ்துமாவிற்கான மருத்துவ சிகிச்சைக்கு யோகா மாற்று அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் ஆஸ்துமா அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை கொண்டவர்கள், எந்தவொரு புதிய உடற்பயிற்சி முறையைத் தொடங்கும் முன்பாக சுகாதார நிபுணரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga for asthma: நீங்க ஆஸ்துமா நோயாளியா? அப்போ தினமும் இந்த ஆசனத்தை செய்யுங்க!

Image Source: Freepik

Read Next

Yoga for constipation: மலச்சிக்கலில் இருந்து உடனே நிவாரணம் பெற இந்த ஒரு யோகாசனம் போதும்!

Disclaimer