Leg Strengthening Yoga: உங்க கால்கள் எப்போதும் வலுவாக இருக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க.

  • SHARE
  • FOLLOW
Leg Strengthening Yoga: உங்க கால்கள் எப்போதும் வலுவாக இருக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க.


சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வழக்கமான யோகா பயிற்சி உடலில் பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த தேர்வாக அமையும். பல்வேறு வகையான யோகாசனங்கள் உள்ளன. இவை கால்களின் தசைகளை வலுப்படுத்துவதுடன், இலகுவாக உணர வைக்கிறது. மேலும் இது கால் வலியைக் குறைக்க உதவுகிறது. இந்த வகையான யோகாசனங்கள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga Before Sleep: உடல் எடை சட்டுனு குறைய இரவு தூங்கும் முன் செய்ய வேண்டிய யோகாசனங்கள்

கால்களை வலுவாக்க உதவும் யோகாசனங்கள்

உத்தனாசனம்

இந்த யோகாசனம், கால்களில் வலி மற்றும் விறைப்பு பிரச்சனையில் இருந்து விடுபட பயனுள்ளதாக அமையும்.

இந்த யோகாசனம் செய்ய, முழங்கால்களை நேராக வைத்து, பின் கால்களை இடுப்பு அகலத்தில் வைத்து, முன்னோக்கி வளைய வேண்டும். இப்போது கால்களின் பின்புறத்தைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த யோகாசனம் முதுகுத் தண்டு மற்றும் இடுப்புக்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது.

சேதுபந்தாசனம்

சேதுபந்தாசனம் அல்லது பாலம் போஸ் யோகாசனங்கள் கால்களில் ஏற்படும் வலியை குறைப்பதுடன், முதுகு வலியைக் குணப்படுத்தவும் பயனுள்ளதாக அமைகிறது. கால் தசைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இந்த ஆசனங்கள் வலி ஏற்படுவதற்கான காரணிகளைக் குறைக்க உதவுகிறது.

இந்த யோகாசனம் செய்ய முதுகில் படுத்துக் கொள்ள வேண்டும். பின் கால்களை தோள்பட்ட அகலத்தை விட சற்று அகலமாக விரித்து, முழங்கால்களை வளைக்க வேண்டும். பிறகு, உள்ளங்கைகளைத் திறந்து கைகளை நேராக தரையில் வைக்கவும். இப்போது மூச்சை உள்ளிழுக்கும் போது, இடுப்பை மேல்நோக்கி உயர்த்தி, தோள்பட்டை மற்றும் தலையை தட்டையான தரையில் வைக்கவும். மூச்சை வெளியேற்றி முந்தைய நிலைக்கு வரலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Chandra Namaskar Benefits: சந்திர நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

பாலாசனம்

கால்வலி பிரச்சனையில் இருந்து விடுபட பாலாசனம் அல்லது குழந்தை போஸ் உதவுகிறது. இதைத் தொடர்ந்து பயிற்சி செய்வது சிறந்த பயனைத் தரும்.

இந்த யோகாவை செய்ய, முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுக்கும் போது இரு கைகளையும் தலைக்கு நேராக உயர்த்த வேண்டும். மூச்சை வெளியேற்றும் போது, முன்னோக்கி குனிந்து உள்ளங்கைகளையும், தலையையும் தரையில் ஊன்ற வேண்டும். இதில் நீண்ட மூச்சை உள்ளிழுத்து வெளியே விட வேண்டும். இரு கைகளின் விரல்களையும் ஒன்றாக இணைத்து, தலையை இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையே மெதுவாக வைக்க வேண்டும்.

விபரீதகரணி யோகா

விபரீதகரணி யோகா கால் வலியிலிருந்து நிவாரணம் தருவதில் பயனுள்ளதாக அமைகிறது. இந்த யோகாவை அடிக்கடி வலி மற்றும் கால் தசைகளில் விறைப்பு உள்ளவர்கள் செய்யலாம்.

இதில் முதலில் தரையில் படுத்து, கால்களை 90 டிகிரி கோணத்தில் சுவரின் ஆதரவுடன் அமைக்க வேண்டும். இந்நிலையில் சில நிமிடங்கள் இருந்து பிறகு மீண்டும் முந்தைய நிலைக்கு வரலாம். மாதவிடாய் அல்லது கர்ப்பமாக இருந்தால், இந்த ஆசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Surya Namaskar For Weight Loss: எடை குறைப்புக்கு சூர்ய நமஸ்காரம்.! எத்தனை முறை செய்யலாம்.?

Image Source: Freepik

Read Next

Weight loss: ஒரே வாரத்தில் தொப்பை மற்றும் இடுப்பு கொழுப்பை குறைக்க உதவும் 5 யோகாசனம்!

Disclaimer

குறிச்சொற்கள்