Winter yoga asanas: குளிர்கால சோம்பலை எதிர்த்துப் போராட தினமும் காலையில் இந்த யோகாசனங்களை செய்யுங்க

Yoga asanas for winter: குளிர்காலத்தில் சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் கடினமான ஒன்று தான். எனினும், இந்த காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க சில யோகாசனங்களை மேற்கொள்ளலாம். குளிர்ந்த காலநிலையில் யோகாசனங்களை மேற்கொள்வது உடலை உற்சாகமாக வைக்க உதவுகிறது. மேலும், இது மனநிலை மேம்பாட்டிற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் குளிர்ந்த காலத்தில் செய்ய வேண்டிய யோகாசனங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Winter yoga asanas: குளிர்கால சோம்பலை எதிர்த்துப் போராட தினமும் காலையில் இந்த யோகாசனங்களை செய்யுங்க

Yoga asanas for winter stiffness: குளிர்ந்த காலநிலையின் மத்தியில் வசதியான பார்வைகள், நீண்ட நேரம் படுக்கையில் இருப்பது மற்றும் ஆடம்பரமான குளிர்கால விருந்துகள் போன்ற பலவும் நம்மை ஈர்க்கிறது. இந்த நேரத்தில் தான் நாம் பெரும்பாலும் சோம்பேறித் தனமாகவும், குறைந்த ஆற்றலையும் உணர்கிறோம். பொதுவாக குளிர்ச்சியான காலகட்டத்தில் தினமும் காலையில் படுக்கையை விட்டு வெளியே செல்வதைச் சவாலாக மாற்றுகிறது.

அதிலும் குறிப்பாக, உடற்பயிற்சி செய்வதற்கும் மிகவும் கடினமாக இருக்கலாம். எனவே தான் இந்த சூழ்நிலை சோம்பலைக் கையாள்வதற்கான நிலையாக அமைகிறது. இந்நிலையில் குளிர்காலத்தில் சோம்பலை எதிர்கொள்வதற்கு புத்துணர்ச்சியைக் கையாள வேண்டும். இதைத் தவிர்க்கவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் குளிர்காலத்தில் யோகா பாதுகாப்புக் கவசமாக அமைகிறது. மேலும், இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடலை ஆற்றல்மிக்கதாக மாற்றுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Yoga for Cortisol: மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்

குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்க உதவும் யோகா

குளிர்கால சூழ்நிலையில், படுக்கையில் சில கூடுதல் நிமிடங்களைச் செலவழிப்பது எவ்வளவு கவர்ச்சியாக இருப்பினும், குளிர்கால காலை யோகாவுடன் தொடங்குவது உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. யோகா செய்வது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. குளிர்காலத்தில் அடிக்கடி மூட்டு வலி மற்றும் தசைகளில் விறைப்பு போன்ற பொதுவான பிரச்சனைகளிலிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. மேலும், சூரிய நமஸ்காரம் மற்றும் அடிப்படை வார்ம்-அப் யோகாசனங்களைப் பயிற்சி செய்வது குளிர்கால குளிர்ச்சியை வெல்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

குளிர்காலத்தில் செய்ய வேண்டிய யோகாசனங்கள்

அதோ முக ஸ்வனாசனா

அதோ முக ஸ்வனாசனா என்றழைக்கப்படும் கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாய் போஸ் ஒரு உன்னதமான யோகாசனமாகும். இது முழு உடலையும் நீட்டக்கூடிய ஆசனம் ஆகும். மேலும், இந்த யோகாசனத்தில் கைகள், கால்கள் மற்றும் உடலின் மையப்பகுதியை பலப்படுத்துகிறது. அதே சமயம் தொடை எலும்புகள் மற்றும் முதுகெலும்புகளை நீட்டுகிறது. இதை ஆரம்பத்தில் செய்யும் போது சவாலாக இருக்கலாம். ஆனால், பயிற்சியுடன் செய்யும் போது எளிதாகவும் வசதியாகவும் அமைகிறது. இந்த யோகாசனம் சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனங்களின் ஒரு பகுதியாகும்.

இந்த ஆசனம் செய்ய, முதலில் கைகள் மற்றும் முழங்கால்களில் தொடங்கலாம். பிறகு இடுப்பை மேலே உயர்த்தி, கைகள் மற்றும் கால்களை நேராக்க வேண்டும். பின் தலை மற்றும் கழுத்தை நிதானமாக வைத்து, ஆழமாக சுவாசிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Indoor Yoga Asanas: மழைக்காலத்தில் வீட்டிலேயே செய்யக் கூடிய யோகாசனங்கள்!

வீரபத்ராசனம் 2

இந்த ஆசனம் செய்வது உடலை, குறிப்பாக கால்கள் மற்றும் மையத்தை வலுப்படுத்த உதவும் சிறந்த யோகாசனம் ஆகும். இந்த போஸ் ஆனது சமநிலை மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது. மேலும், இது மார்பு மற்றும் இடுப்புகளைத் திறக்கிறது. இதை குளிர்காலத்தில் செய்வது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

வீரபத்ராசனம் செய்வதற்கு பாயின் முன்புறத்தில் நின்று, பிறகு இடது பாதத்தை 90 டிகிரி கோணத்தில் திருப்ப வேண்டும். பிறகு வலது முழங்காலை வளைத்து, கைகளைத் தரையில் இணையாக பக்கங்களுக்கு வெளியே கொண்டுவரலாம். பிறகு இடுப்பை முன்னோக்கி வைத்து, வலது கையைப் பார்க்க வேண்டும். இந்நிலையில் 5-10 சுவாசங்கள் செய்து, மீண்டும் பக்கங்களை மாற்றலாம்.

புஜங்காசனம்

கோப்ரா போஸ் என்றழைக்கப்படும் புஜங்காசனம் செய்வது முதுகு மற்றும் மையப்பகுதியை வலுப்படுத்தவும், மார்பு மற்றும் தோள்களை நீட்டவும் உதவும் யோகாசனம் ஆகும். இந்த ஆசனம் தோரணையை மேம்படுத்தவும், மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றை போக்கவும் உதவுகிறது. இது குளிர்காலத்தில் ஏற்படும் மன ஆரோக்கிய பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.

இந்த ஆசனம் செய்ய, முதலில் குப்புற படுத்துக் கொள்ள வேண்டும். பிறகு கால்களை ஒன்றாக இணைத்து வைக்க வேண்டும். பின் கைகளை மடக்கி, உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இரு புறமும் வைத்துக் கொள்ளலாம். பின்பு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே, தலை, கழுத்து மற்றும் மார்பு பகுதியை மேலே உயர்த்தி பின்னோக்கி வளைய வேண்டும். பிறகு பழைய நிலைக்கு வந்து மீண்டும் இந்த ஆசனத்தைத் திரும்ப செய்யலாம்.

திரிகோனாசனம்

முக்கோண போஸ் என்றழைக்கப்படும் திரிகோனாசனம் உடலின் பக்கங்களையும், கால்கள் மற்றும் இடுப்புகளையும் நீட்டுவதற்கான ஒரு சிறந்த யோகாசனமாகும். இது நிலைத்தன்மை மற்றும் சமநிலையை மேம்படுத்தவும், மையத்தை பலப்படுத்தவும் உதவுகிறது.

திரிகோனாசனம் செய்வதற்கு முதலில் இரண்டு கால்களையும் இரண்டு அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பிறகு, இரண்டு கைகளையும் பக்கவாட்டில் உயர்த்தி, தோள்பட்டைக்கு இணையாக நேராக நீட்டி கொள்ளலாம். அதன் பின், மூச்சை வெளியே விட்டுக் கொண்டு இடது பக்கம் வளைந்து இடது கையால் இடது பாதத்தின் வெளிப்புறத்தை தொட வேண்டும்.

இந்த வகை யோகாசனங்களை மேற்கொள்வது குளிர்கால சோம்பலை எதிர்த்துப் போராடவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Yoga Asanas: இந்த குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்க நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்

Image Source: Freepik

Read Next

Yoga for heel pain: தீராத குதிகால் வலியிலிருந்து விடுபட இந்த யோகாசனங்களை செய்யுங்க

Disclaimer