Monsoon Yoga Asanas: இந்த குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்க நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்

  • SHARE
  • FOLLOW
Monsoon Yoga Asanas: இந்த குளிர்காலத்தில் உடலை சூடாக வைக்க நீங்க செய்ய வேண்டிய யோகாசனங்கள்

குளிர்ந்த காலநிலையில் உடல் வெப்பம் அடிப்படையாகக் குறைந்து கொண்டே வரும். இந்த காலகட்டத்தில் இந்த வகை யோகாசனங்களை மேற்கொள்வது உடல் நீண்ட நேரம் சூடாக வைப்பதுடன், உடலுக்குத் தேவையான அளவு வெப்பத்தை அளிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Brain Health Yoga: உங்க மூளைத் திறன் அதிகரிக்க, இந்த யோகாசனம் எல்லாம் டிரை பண்ணுங்க

உடலை சூடாக வைக்க உதவும் யோகாசனங்கள்

குளிர்காலத்தில் உடலில் வைரஸ் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் குறைவாக இருக்கும். எனினும், உடலை சூடாக வைத்திருப்பதன் மூலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். குளிர்காலத்தில் உடலை சூடாக மற்றும் வலுவாக வைத்திருக்க உதவும் யோகாசனங்களைக் கானலாம்.

பாதஹஸ்தாசனம்

  • இந்த ஆசனம் செய்யும் போது முதலில் கைகளை பக்கவாட்டிற்கு கொண்டு வந்து தலைக்கு மேல் வைக்க வேண்டும்.
  • பின் காதுகளை ஒட்டியவாறு கைகளை மடிக்காமல் மேலே நீட்ட வேண்டும்.
  • மூச்சை வெளியே விடும் போது, மெதுவாக முன்னால் குனிந்து பாதத்திற்கு மேல் இருக்கும் காலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் பழைய நிலைக்கு மெதுவாக மீண்டும் வருவதற்கு முன், முழுமையான மூச்சை முடிக்கவும். உயரமாக நிற்கும் போது, கைகளைப் பின்னால் இழுத்து, இடுப்பில் ஓய்வெடுக்கவும்.

ஹலாசனா

யோகாசனங்களில் ஹலாசனா சற்று கடினமான ஆசனம். மேலும், இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக் கூடிய ஆசனமாகும்.

  • இந்த ஆசனத்திற்கு முதலில் முதுகில் படுத்துக் கொண்டு, பின் மூச்சை உள்ளிழுத்த படி, கால்கள் இரண்டையும் ஒன்றாக மேலே உயர்த்த வேண்டும்.
  • இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்திருக்க வேண்டும்.
  • அதன் பின் கால்களை மெதுவாக தலைக்கு மேல் உயர்த்தி, முதுகை வளைத்து பின் பாதங்களை தலைக்கு பின்புறத்தில் உள்ள தரையைத் தொட முயற்சிக்கவும்.
  • இந்த நிலையில், மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, வெளியிட வேண்டும்.
  • பின் மெதுவாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.
  • இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Belly Fat Exercises: தொப்பை வேகமாகக் குறைய தினமும் இந்த யோகாசனங்களை செய்யுங்க

உஸ்ட்ராசனா

  • இது ஒட்டக போஸ் ஆகும். இந்த ஆசனத்தில் முதலில் நேராக நின்று கொண்டு, மெதுவாக இரு மூட்டுகளையும் தரைவிரிப்பில் ஊன்றி, இரு கால்களையும் பின் புறமாக நீட்ட வேண்டும்.
  • பின் வயிறு, மார்பு மற்றும் தலை போன்ற உறுப்புகளை பின்புறம் வளைத்து இரு கைகளாலும், இரு கணுக்கால்களையும் பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இயல்பு நிலைக்குத் திரும்பி இரண்டு, மூன்று முறை செய்யலாம்.

புஜங்காசனா

  • இந்த ஆசனத்தில் முதலில் குப்புறப் படுத்துக் கொள்ள வேண்டும். பின் கால்களை ஒன்றாக இணைத்து வைக்க வேண்டும்.
  • பின் கைகளை மடக்கி, உள்ளங்கைகளை மார்புக்கு அருகில் இருபுறமும் வைக்க வேண்டும்.
  • இந்நிலையில் தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதியை மேலே உயர்த்தி, பின்னோக்கி வளைத்து மூச்சை உள்ளிழுக்கவும்.
  • இந்த யோகா பயிற்சியை செய்வது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வதுடன், முழு உடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவும். இவை குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: யோகா செய்வதற்கு முன்னும் பின்னும் நீங்க சாப்பிட வேண்டியது இது தான்!

Image Source: Freepik

Read Next

யோகா செய்வதற்கு முன்னும் பின்னும் நீங்க சாப்பிட வேண்டியது இது தான்!

Disclaimer