Best Foods To Eat Before And After Yoga: காலை எழுந்ததும் யோகா செய்பவர்களா நீங்கள். அப்போ, உங்கள் யோகாசனங்களத் திறம்பட செய்ய சில உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். யோகாவிற்கு முன்னும் பினனும் சில உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. அதே சமயம், சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதும் அவசியமாகும்.
எனினும், யோகா செய்பவர்களுக்கு யோகா செய்வதற்கு முன் மற்றும் பின் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்வது என்பதில் சந்தேகம் இருக்கும். மேலும், யோகா செய்யும் முன் உணவை எடுத்துக் கொள்வது என்பது உணவு எடுத்துக் கொண 45 நிமிடங்களுக்குப் பின் யோகா செய்வதைத் தொடங்கலாம். இதில், யோகா செய்வதற்கு முன் மற்றும் பின்னே சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Premature Birth Prevention: முன்கூட்டிய பிரசவத்தைத் தவிர்க்க இந்த யோகாசனங்களைச் செய்யுங்க.
யோகா செய்வதற்கு முன் சாப்பிட வேண்டியவை
சிலர் காலை, மாலை என இரு வேளைகளிலும் யோகா செய்யும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர். இந்த இருநேரங்களிலும் என்ன வகையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
காலை யோகா பயிற்சி செய்ய விரும்புபவர்கள், வாழைப்பழம், பெர்ரி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும், தயிர் மற்றும் உலர்ந்த பழங்கள், முட்டை, வீட்டில் தயாரிக்கப்பட்ட புரோட்டீன் ஷேக்குகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளுடன் யோகா செய்யலாம்.
மாலை நேரங்களில் யோகா செய்பவர்கள், யோகா செய்வதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே லேசான சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்ளலாம். இது உடற்பயிற்சி செய்ய போதுமான ஆற்றல் தருவதாக அமைகிறது. மேலும், உணவில் சாலட்கள், வேக வைத்த காய்கறிகள் அல்லது நட்ஸ் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.
யோகா செய்த பிறகு சாப்பிட வேண்டியவை
பொதுவாக, யோகா செய்த 30 நிமிடங்களுக்குப் பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும். யோகா செய்த பின் தண்ணீர் குடிப்பதன் மூலம், யோகா செய்யும் போது இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீண்டும் பெறலாம். இது உடலில் பிடிப்பை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம்: Bone Strength Tips: எலும்புகளை வலுவாக்க இந்த யோகா அல்லது உடற்பயிற்சி செய்யுங்க
யோகா செய்த பிறகு சத்தான ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் படி, கிண்ணம் ஒன்றில் புதிய பழங்கள், காய்கறி சாலட்கள், நட்ஸ் மற்றும் தானியங்களுடன் கூடிய தயிர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
யோகா செய்யும் முன் மற்றும் பின் சாப்பிடக் கூடாதவை
யோகா பயிற்சியை மேற்கொள்ளும் முன் மற்றும் பின் என்னென்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல, எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளும் உள்ளன.
அதன் படி, யோகா செய்வதற்கு முன் அதிகளவு உணவு அல்லது எண்ணெய் மற்றும் வறுத்த பொருள்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடக் கூடாது. மேலும் செரிமானத்தைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
அதே போல, காலையில் மாலையிலும் யோகா செய்த பிறகு தண்ணீர், தேங்காய் தண்ணீர், அல்லது எலுமிச்சை நீர் போன்றவற்றைக் குடித்து, நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதைச் சரியாக கவனிக்காமல் இருப்பது நீரிழிவு பிரச்சனையை உண்டாக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga During Periods: மாதவிடாயின் போது யோகா செய்வதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
Image Source: Freepik