Bone Strength Yoga And Exercise: தற்போதைய வேகமான சூழ்நிலையில் மக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்குவதில் கவனம் செலுத்த தவறுகின்றனர். ஆரோக்கியமான உடல் நலத்திற்கு தினந்தோறும் நாம் கடைபிடிக்கும் உணவு முறை, உடற்பயிற்சி, யோகா உள்ளிட்ட பல்வேறு முறைகள் முக்கியமானதாகும். அந்த வகையில் உடலில் உள்ள எலும்புகளைப் பராமரிப்பதும் அவசியமான ஒன்றாகும். இதற்கு கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். மேலும் இத்துடன் உடற்பயிற்சி மற்றும் யோகாவை தினசரி வழக்கத்தில் சேர்க்க வேண்டும். எலும்புகளை அவ்வப்போது கவனிக்காமல் இருப்பதால், ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எலும்புகளை வலுப்படுத்த எந்த யோகா மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்து யோகா ஆசிரியர் ரஜ்னீஷ் ஷர்மா அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.
எலும்பு பலவீனமாவதற்கான காரணங்கள்
எலும்புகள் வலுவிழக்க மிகப்பெரிய காரணம், மோசமான வாழ்க்கை முறையே. இதனுடன், மோசமான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடும் காரணமாகும். இரவு நேரத்தில் அதிகம் நேரம் விழித்திருந்து, அதிகாலை வர தூங்குவதால் உடலின் செரிமான மண்டலம் சீர்குலைந்து, உடலில் உள்ள மூட்டுகளுக்கு இடையில் நச்சுக்கள் சேரத் தொடங்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga Before Sleep: உடல் எடை சட்டுனு குறைய இரவு தூங்கும் முன் செய்ய வேண்டிய யோகாசனங்கள்
செரிமான மேம்பாடு இல்லாமல், உடலுக்குப் போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும் போது எலும்புகள் பலவீனமடைய ஆரம்பிக்கும். நம் முன்னோர்களின் உணவு முறை மற்றும் கால்சியம் சத்துக்கள் நிறைந்த பால், தயிர், மோர் போன்றவற்றை அதிகம் உண்டு வந்தனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் தாவர எண்ணெய்களுக்குப் பதில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறது. இது எலும்பு பலவீனத்திற்குக் காரணமாகலாம்.
எலும்புகளை வலுப்படுத்த உடற்பயிற்சி
எலும்புகளை வலுப்படுத்த தினமும் உடற்பயிற்சி செய்வது முக்கியமாகும். தினமும் கைகள் மற்றும் கால்களின் மைக்ரோ உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது மூட்டுகளுக்கு ஆற்றல் வழங்குவதுடன், அதன் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் தினமும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க வேண்டும். இதைத் தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் எதிர்பார்த்த நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Chandra Namaskar Benefits: சந்திர நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
எலும்புகளை வலுப்படுத்த யோகா
- இன்று சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் மூட்டு வலி அல்லது எலும்பு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, எலும்பு வலிவிற்கு பிராணாயாமம் செய்யலாம்.
- பிராணாயாமம் செய்வது எலும்புகளுக்கு இடையே தேங்கியிருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
- இது தவிர, பவன்முக்தாசனம், மகரசனம், மார்கதாசனம், ஷலபாசனம் போன்றவை எலும்புகளை வலுப்படுத்த உதவும் யோகாசனங்கள் ஆகும். இந்த ஆசனங்களை செய்வதன் மூலம் எலும்புகள் வலுவடைவதுடன், எலும்பு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
- எலும்புகளை வலுப்படுத்த, எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
- உயரத்தை விட எடை அதிகமாக இருந்தால், எலும்புகள் பலவீனமாகலாம்.

எலும்புகளை வலுப்படுத்த மசாஜ் செய்வது
எலும்புகளை வலுவாக்க, எள் எண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்ய வேண்டும். இது எலும்புகளை வலுப்படுத்தும். இத்துடன் உணவு முறையைச் சரியாகக் கையாள்வதன் மூலம் எலும்பு வலிமை பெறலாம். அதன் படி, பீன்ஸ், பால், தயிர், நெய், சீஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும், உணவுகள் உண்ணும் போது நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதன் மூலம் செரிமான மேம்பாடு அடைவதுடன், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Surya Namaskar For Weight Loss: எடை குறைப்புக்கு சூர்ய நமஸ்காரம்.! எத்தனை முறை செய்யலாம்.?
Image Source: Freepik