Healthy drinks for strong bones: இன்று பலரும் சிறுவயது முதலே எலும்பு சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணிகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். எலும்பு சார்ந்த பிரச்சனைகளைத் தடுப்பதற்கும், எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் சீரான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும்.
எனவே அன்றாட வாழ்வில் எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் சிறுவயது முதலே எடுத்துக் கொள்ளும் இந்த உணவுகளின் உதவியுடன் வயதாகும் போது ஏற்படும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். இதில் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளைப் பராமரிக்க சரியான காலை பானங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் படி, எலும்பு வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் அதிகரிப்புடன் நாளைத் தொடங்கலாம். இதில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் அருந்தக் கூடிய சில காலை பானங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bone Health: எலும்புகளை வலிமையாக்கும் கால்சியல் நிறைந்த உணவுகள் இங்கே..
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பானங்கள்
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் சில பானங்களைக் காணலாம்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை டீ
புதிய இஞ்சி மற்றும் எலுமிச்சையுடன் தயாரிக்கப்படும் இந்த பானத்தை அருந்துவது பல வழிகளில் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானமாகும். இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இந்த பண்புகள் மூட்டு வலி மற்றும் விறைப்பைக் குறைக்க உதவுகிறது. அதே சமயம், எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த மூலமாகும். இது கொலாஜன் உற்பத்திக்கும், கால்சியம் உறிஞ்சுதலை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்நிலையில் காலையில் இஞ்சி-எலுமிச்சை தேநீர் குடிப்பது வீக்கத்தைக் குறைக்கவும், எலும்புகளின் ஒட்டுமொத்த வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.
புதிய ஆரஞ்சு சாறு
ஆரஞ்சு சாறு வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறந்த மூலமாகும். இந்த சாறு அருந்துவது எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும் முக்கியமான புரதமான கொலாஜனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு சாற்றில் வைட்டமின் சி உடன் கால்சியம் மற்றும் வைட்டமின் டி போன்றவை எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமானவையாகும். எனவே காலையில் ஒரு கிளாஸ் புதிய ஆரஞ்சு சாறு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கால்சியத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. இது எலும்புகளை பராமரிக்க ஒரு ஆரோக்கியமான பானமாக அமைகிறது.
கீரை ஸ்மூத்தி
கேல், கீரை மற்றும் பாதாம் பால் போன்றவற்றைச் சேர்த்து தயாரிக்கப்படும் பச்சை ஸ்மூத்தி எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் முக்கியமான பானமாகும். காலேவில் வைட்டமின் கே, கால்சியம், மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. இவை அனைத்தும் எலும்பு வலிமைக்கு முக்கியமாகும். கீரையில் வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கொலாஜன் உருவாவதற்கு முக்கியமாகும். இந்த இலை கீரைகளை பாதாம் பாலுடன் சேர்ப்பது எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், எலும்புகளை வலுவாகவும் மீள்தன்மையுடனும் வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Banana for joint pain: அடடே! மூட்டு வலி காணாம போக இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதுமா?
மஞ்சள் பால்
பல்வேறு நோய்களுக்கு ஒரு பாரம்பரிய மருந்தாக சூடான மஞ்சள் பால் அருந்துவது அடங்கும். ஏனெனில் மஞ்சளில் உள்ள குர்குமின் கலவைகள் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். இதை கால்சியத்தின் வளமான மூலமாக விளங்கும் பாலுடன் இணைப்பது எலும்பு அடர்த்தியை ஆதரிக்க உதவுகிறது. மேலும் மஞ்சள் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் ஒரு சிறந்த தேர்வாகும். எனவே காலையில் மஞ்சள் பால் குடிப்பதன் மூலம் வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், வலுவான எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களைப் பெறலாம்.
பாதாம் பால் ஸ்மூத்தி
பாதாம் பாலில் இயற்கையாகவே வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். வைட்டமின் கே நிறைந்த பெர்ரி பழங்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழங்களுடன் பாதாம் பாலை சேர்ப்பது ஒரு சுவையான மற்றும் சத்தான ஸ்மூத்தியை உருவாக்குகிறது. இந்த பானத்தை அருந்துவது எலும்புகளை வலுப்படுத்தவும் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இது கள் மற்றும் தாதுக்களின் கலவையை வழங்குகிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பானங்களை அருந்துவதன் மூலம் எலும்பை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம். எனினும், வேறு சில உடல்நல பிரச்சனைகளைக் கொண்டவர்கள் இந்த பானங்களை அருந்துவதற்கு முன்பாக நிபுணரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: இரும்பு போல வலுவான எலும்பு வேணுமா? மருத்துவர் சொல்லும் குறிப்புகள் இதோ!
Image Source: Freepik