What drink makes your bones stronger: உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். ஆனால், இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இதில் ஒன்றாக எலும்பு ஆரோக்கியமும் அடங்கும். பொதுவாக வயது முதிர்ந்தவர்களே எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளைச் சந்திப்பர். ஆனால் இன்றைய சூழ்நிலையில் சிறுவயது முதலே எலும்பு ஆரோக்கியத்தால் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், வலுவான எலும்புகள், பற்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு கால்சியம் சிறந்த தேர்வாகும். எனினும், வாழ்க்கை முறை காரணிகள், மோசமான உணவுத் தேர்வுகள் மற்றும் மருத்துவ நிலைமை காரணமாக கால்சியம் குறைபாடு ஏற்படுவது பொதுவான காரணியாக அமைகிறது. அதன் படி, சில பானங்களை அருந்துவது இயற்கையாகவே உடலில் கால்சியம் அளவை அதிகரிக்க உதவுகிறது. இவை எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்தவும், கால்சியம் குறைபாட்டை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Gut Health Drinks: குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் சூப்பர் பானங்கள்
எலும்பு வலுவாக குடிக்க வேண்டிய பானங்கள்
பால்
கால்சியம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது பால் ஆகும். அதன் படி, ஒரு கிளாஸ் அதாவது சுமார் 250 மில்லி பாலில் தோராயமாக 300 மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. பாலில் கால்சியம் மட்டுமல்லாமல், கால்சியம் உறிஞ்சுதலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்துக்களும் நிறைந்துள்ளது. லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு, லாக்டோஸ் இல்லாத பால் ஒரு சிறந்த மாற்றாகும். இதற்கு ஸ்மூத்திகள் அல்லது தானியங்களில் பால் சேர்ப்பது உணவில் இதை இணைப்பதற்கான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு அவசியமான வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் போன்ற கூடுதல் ஊட்டச்சத்துகளைப் பெற வலுவூட்டப்பட்ட பாலைத் தேர்வு செய்யலாம்.
ஆரஞ்சு சாறு
கால்சியம் ஊட்டச்சத்துக்கு புதிதாக பிழிந்த ஆரஞ்சு சாறு ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான தேர்வாகும். ஆனால், கால்சியம் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு சாறு, தினசரி கால்சியம் உட்கொள்ளலுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது. அதன் படி, ஒரு கிளாஸ் செறிவூட்டப்பட்ட ஆரஞ்சு சாறு 350 மிகி கால்சியத்தை வழங்குகிறது. பாலை விட பழச்சாறுகளை விரும்புவோர்களுக்கு இந்த ஆரஞ்சு சாறு சிறந்த தேர்வாகும். மேலும், ஆரஞ்சு சாறு இயற்கையாகவே வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உடலில் கொலாஜனை உற்பத்தி செய்ய உதவுகிறது. இது எலும்பு கட்டமைப்பின் முக்கிய அங்கமாகும். கால்சியம் உறிஞ்சுதலை அதிகரிக்க, ஆரோக்கியமான காலை உணவுடன் வலுவூட்டப்பட்ட ஆரஞ்சு சாற்றை சேர்த்து அருந்தலாம்.
எள் விதை பானம்
கால்சியத்தின் குறைவாக மதிப்பிடப்பட்ட மூலமாக எள் விதைகள் அமைகிறது. 1 டேபிள்ஸ்பூன் அளவிலான சிறிய விதைகளில் 88 மிகி கால்சியம் நிறைந்துள்ளது. இதில் எள் விதை பானம் ஒரு பாரம்பரிய கால்சியம் ஊட்டசத்துக்கள் நிறைந்த பானமாகும். இந்த எள் விதைகளை பால் அல்லது தண்ணீருடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. தாவர அடிப்படையிலான கால்சியம் மூலத்தைத் தேடுபவர்களுக்கு, எள் விதை பானம் சிறந்த தேர்வாகும். மேலும் பாஸ்பரஸ், மக்னீசியம், துத்தநாகம் போன்றவை எலும்பு ஆரோக்கியத்திற்கான தாதுக்களாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Bedtime Drinks: நைட் தூங்கும் முன் இந்த ட்ரிங்ஸ் குடிங்க! தூக்கம் வேற லெவல்ல வரும்
தயிர் கலந்த ஸ்மூத்திகள்
தயிர் என்பது கால்சியம் நிறைந்த பால் தயாரிப்பு ஆகும். மேலும் இதை ஸ்மூத்தியில் கலக்கும் போது, சுவையானதாகவும் மற்றும் ஊட்டச்சத்து நிரம்பிய பானமாக மாற்றலாம். அதன் படி, ஒரு கப் அளவிலான தயிரில் 450 மி.கி வரையிலான கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், கிரேக்க தயிரில் புரதம் மற்றும் புரோபயாடிக்குள் நிறைந்து காணப்படுகிறது. இவை குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், கால்சியம் உட்பட ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்தவும் உதவுகிறது. பெர்ரி, வாழைப்பழங்கள் அல்லது கீரை போன்ற பழங்களை தயிர் ஸ்மூத்தியில் சேர்த்து எடுத்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். எனினும், ஆரோக்கியமான பானத்திற்கு இனிக்காத அல்லது குறைந்த சர்க்கரை கொண்ட தயிரை தேர்வு செய்யலாம்.
தாவர அடிப்படையிலான பால்
சைவ உணவு உண்பவரக இருப்பவர்கள் அல்லது பால் பொருள்களைத் தவிர்த்தால், வலுவூட்டப்பட்ட தாவர அடிப்படையிலான பால் ஒரு சிறந்த மாற்றாகும். சோயா, பாதாம், ஓட்ஸ் பால் போன்றவை பசுவின் பால் ஊட்டச்சத்து மதிப்பை விட கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றால் செறிவூட்டப்படுகிறது. சோயா பாலில் புரதம் அதிகம் உள்ளது. இவை உடலின் ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Arthritis: காஃபி மற்றும் டீ மூட்டுவலியை அதிகரிக்குமா? உண்மை இங்கே!
Image Source: Freepik