$
How To Strengthen Children's Bones: குழந்தைகளைப் பொறுத்த வரை பெற்றோருக்கு கூடுதல் அக்கறை அவசியமாகும். அதன் படி, குழந்தைகளின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உரித்தான ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குவது எலும்பு ஆரோக்கியம் ஆகும். குழந்தைகளுக்கு பால் மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ்கள் அடிக்கடி வழங்கப்பட்டாலும், அவர்களின் வலுவான எலும்புகளுக்கு குறிப்பிடத்தக்க பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளைக் கையாள்வது அவசியமாகும். இதில் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் சிலவற்றைக் காணலாம்.
குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த பின்பற்ற வேண்டிய பழக்க வழக்கங்கள்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்க சில பழக்க வழக்கங்களைக் கையாள வேண்டும்.
பாரம்பரிய உணவுகளைச் சேர்ப்பது
உணவுகளைக் கொண்டு குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்தலாம். அதன் படி, பல்வேறு உணவுகளில் ராகி சிறந்த பிரதானமாக உள்ளது. ஏனெனில் மற்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில் ராகி பத்து மடங்கு அதிகமான கால்சியம் சத்துக்களைக் கொண்டுள்ளது. மேலும் முருங்கை இலையிலும் கால்சியம் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு தாதுக்களும் நிறைந்து காணப்படுகிறது. இந்த வகையான உணவுகளை குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவர்களின் எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான இயற்கையான மற்றும் சத்தான ஊக்கத்தை அளிக்கலாம். இது அவர்களின் வளர்ச்சியை ஆதரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Toothbrush For Children: உங்க குழந்தைக்கு டூத் பிரஸ் யூஸ் பண்றாங்களா? எப்படி தேர்வு செய்யணும் தெரியுமா?
வெளியில் வெயிலில் விளையாடுவது
பொதுவாக சூரிய ஒளி வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இயற்கையான வளமான மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் இயற்கையாக குழந்தைகளுக்குக் கிடைக்க அனுமதிக்க வேண்டும். அதன்படி, குழந்தைகளை பெற்றோர்கள் வெளியில் விளையாட ஊக்குவிப்பதன் மூலம், சூரியனின் கதிர்களை உறிஞ்சுவதற்கு அவர்களை அனுமதிக்கிறது. அதிலும் குறிப்பாக, புற ஊதாக் கதிர்வீச்சு குறைவாக இருக்கும் அதிகாலையில் அல்லது பிற்பகலில் குழந்தைகளை விளையாட வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆய்வு ஒன்றில், வழக்கமான சூரிய ஒளியின் உதவியுடன் வைட்டமின் டி அளவை கணிசமாக அதிகரிக்கலாம். இதன் மூலம் எலும்பு நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

எள் விதைகள்
எள் விதைகளில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது எலும்பு உருவாக்கம் மற்றும் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதன் படி, ஒரு தேக்கரண்டி எள் விதைகளை குழந்தைகளுக்கு அளிப்பதன் மூலம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கணிசமான அளவை வழங்க முடியும். இவ்வாறு எள் விதைகளை தொடர்ந்து உட்கொள்வது குழந்தைகளின் எலும்பு அடர்த்தியை மேம்படுத்த உதவுகிறது. குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த எள் விதைகளை உணவில் தூவுவது அல்லது சிற்றுண்டிகளில் சேர்ப்பது போன்றவை எளிதான மற்றும் பயனுள்ள வழியாகக் கருதப்படுகிறது.
எடை தாங்கும் பயிற்சிகளுடன் உடல் செயல்பாடு
குழந்தைகளை குதித்தல், ஓடுதல் மற்றும் ஏறுதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வைப்பது, எலும்புகளை உருவாக்கும் செல்களைத் தூண்டுவதன் மூலம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. அந்த வகையில் எடை தாங்கும் பயிற்சிகள் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இந்த பயிற்சி ஈர்ப்பு விசைக்கு எதிராக எலும்புகளை வேலை செய்ய வைக்கிறது. இதன் மூலம் எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அதன் படி, குழந்தைகளில் ஆரோக்கியமான எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்க இந்த பயிற்சிகள் உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: பெற்றோர்களே கவனம்! உங்க குழந்தைக்கு விளையாட்டு ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?
யோகா செய்ய வைப்பது
யோகா என்பது ஒரு பழங்கால நடைமுறையாகும். யோகா செய்வது உடலில் நெகிழ்வுத்தன்மை மற்றும் சமநிலையை அதிகரிப்பதுடன், எடை தாங்கும் தோரணைகளின் உதவியுடன் எலும்புகளை வலுப்படுத்தலாம். அதன் படி, ட்ரீ போஸ் மற்றும் வாரியர் போஸ் போன்ற யோகா போஸ்கள் எலும்புகளின் மீது மென்மையான அழுத்தத்தை செலுத்தி எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமையைத் தூண்டுகிறது. எனவே வழக்கமான யோகா பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகளின் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தலாம்.

மசாலா மற்றும் மூலிகைகளைப் பயன்படுத்துதல்
பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயம் மற்றும் மஞ்சள் போன்ற மூலிகைகள், மசாலா பொருள்களின் உதவியுடன் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்தலாம். மஞ்சளில் உள்ள குர்குமின் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் எலும்பின் அடர்த்தியை பராமரிக்க உதவுகிறது. இவற்றின் உதவியுடன் குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்தலாம்.
பெற்றோர்கள் இந்த பழக்க வழக்கங்களைக் கையாள்வதன் மூலம் தங்கள் குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், வலுப்படுத்தவும் முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைங்க School-ல இருந்து வந்துட்டாங்களா? இத அவங்ககிட்ட கேளுங்க.!
Image Source: Freepik