
$
Importance Of Playing With Your Child: குழந்தை வளர்ப்பு என்பது இன்று பல பெற்றோர்களுக்கும் சவாலான ஒன்று தான். முந்தையை காலத்தில் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதில் கூட, வெளியில் சென்று விளையாட வைத்து கொடுப்பதையே வழக்கமாக்கி வைத்திருந்தனர். ஆனால், இன்றைய நவீன காலகட்டத்தில் பெற்றோர்கள் சமாளிக்க முடியாமல் குழந்தைகள் உணவு உண்பதற்காக டிவி, கணினி, செல்போன் போன்றவற்றைத் தந்து பார்க்க வைத்து சமாளிக்கின்றனர். இதனால் எதற்கு எடுத்தாலும் குழந்தைகள் செல்போன் பார்ப்பதையே பழக்கமாக்கிக் கொள்கின்றனர்.
ஆனால், இந்த பழக்க வழக்கங்கள் அவர்களின் உடல் மற்றும் மனநிலை இரண்டையும் பாதிக்கும் என்பதை பல பெற்றோர்கள் கவனிப்பதில்லை. ஆம். குழந்தைகளை நல்ல மனநிலையுடன் இருக்க வைப்பது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகக் கருதப்படுகிறது. அதே சமயம் குழந்தைகள் என்றாலே பெரும்பாலும் விளையாட்டில் தான் ஆர்வம் காண்பர். அவர்களுக்கு விளையாட்டு பொழுதுபோக்கான ஒன்றாக இருப்பினும், அது அவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையில் சாதகமான விளைவுகளைத் தருகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைங்க School-ல இருந்து வந்துட்டாங்களா? இத அவங்ககிட்ட கேளுங்க.!
குழந்தைகளுக்கு விளையாட்டு ஏன் முக்கியம்
விளையாட்டானது சிறு குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் புரிந்து கொள்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. இந்நிலையில் அவர்களின் மனநிலை உற்சாகம் பெற்று அறிவாற்றல், சமூக மற்றும் உணர்ச்சித் திறன்களை உருவாக்குதல் போன்ற அவர்களின் வளர்ச்சியின் முக்கியமான பகுதிகளில் வேலை செய்கின்றனர். ஆனால், விளையாட்டின் ஆற்றல் ஆரம்பக் கற்றலுக்கு அப்பாற்பட்டதாகும். இது குழந்தையின் மன ஆரோக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிலும் குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கி விளையாடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

விளையாடுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன ஆரோக்கியம்
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தவறாமல் விளையாடுவது குழந்தைகளின் கவலை மற்றும் மனச்சோர்வு நீங்கும் எனக் கூறப்படுகிறது.
குழந்தைக்கும், பெற்றோருக்குமான பிணைப்பு வலுப்படுவது
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கற்றலானது அவர்களை நெருக்கமாக பிணைக்க வைக்கிறது. இது குழந்தைகளுக்கு முதல் விளையாட்டு நண்பனாக பெற்றோர்கள் ஆகின்றனர். இதன் மூலம் வீட்டிலேயே கற்றல் மற்றும் இணைப்புக்கான வாய்ப்புகளை வழங்கும் திறன் பெற்றோர்களுக்கு அமைகிறது. அதே போல, ஒன்றாக விளையாடும்போது, குழந்தையின் பார்வையில் உலகைப் பார்க்க முடியும் எனக் கூறுவர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடும் போது குழந்தைக்கு அன்பு, ஆறுதல் மற்றும் கவனத்தை வழங்குவர். இது அவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் எதிர்கால நல்வாழ்வை ஆதரிக்கும் சிறந்த அடித்தளமாக அமைகிறது.
குழந்தைகள் கடினமான உணர்ச்சிகளைச் செயல்படுத்துதல்
குழந்தைகள் சிக்கலான உணர்ச்சிப் பிரச்சினைகளைக் கையாள்கின்றனர் எனில், அது அவர்களின் விளையாட்டில் அடிக்கடி வெளிப்படும். குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு இடம் கொடுப்பதன் மூலம் வலி, பயம் அல்லது இழப்பு போன்ற உணர்வுகளின் மூலம் அவர்கள் இன்னும் குழந்தையாக செயல்படுவர். இதனை விளக்க முழுமையான வார்த்தைகள் இல்லாததால், அவர்கள் போராடும் விஷயங்களை வெளிப்படுத்த விளையாட்டு அவர்களுக்கு ஒரு வழியாக அமைகிறது. அதாவது கற்பனை நாடகத்தின் மூலம் குழந்தைகள் தங்களது லிமிகுந்த நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் உருவாக்குவதன் மூலம், என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக, உங்கள் குழந்தை கண் முன்னே, இரண்டு பெரியவர்கள் சண்டையிடுவதைக் கண்டால், குழந்தைகள் அதைத் தெரிவிக்க தங்கள் பொம்மைகளுடன் இந்த மோதலை மீண்டும் உருவாக்குவர்.
இந்த பதிவும் உதவலாம்: பெற்றோர்களே கேட்டுகோங்க… குழந்தைகள் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை நிறுத்த சூப்பர் ஐடியா இதோ!!
குழந்தைகளின் மன அழுத்தத்தைக் குறைக்க
விளையாட்டு, நடனம் மற்றும் பாடுவது போன்ற அனைத்துமே குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் கிடைத்த மன அழுத்தத்தைப் போக்குவதற்கான சிறந்த வழிகளாகும். குழந்தைகள் விளையாடும் போது, வேடிக்கையான தருணங்களை அனுபவித்து மகிழ்ச்சி அடைவர். இது அவர்களின் உடலில் என்டோர்பின்களை வெளியிட்டு நல்வாழ்வை ஊக்குவிக்கிறது. இது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மன அழுத்தத்தைக் கவனித்துக் கொள்ள உதவும் சக்திவாய்ந்த நினைவூட்டலாக செயல்படுகிறது. பெற்றோர்களும் வேலை அல்லது பிற கடமைகளின் மீதான மன அழுத்தத்தை மறந்து விடுகின்றனர். எனவே விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குவது, குழந்தைகள் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், எதிர்மறையான தாக்கங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் குழந்தைகளின் நீண்ட கால மன அழுத்தம் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

குழந்தைகளின் நம்பிக்கையை மேம்படுத்த
குழந்தைகள் விளையாடும் போதோ அல்லது புதிருக்கு விடை தேடும் போதோ, சிக்கல்களைத் தீர்ப்பது மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கொண்டு வருவது என அவர்களின் திறமை உணர்வைத் தூண்டுகிறது. இதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்கும்போது, அவர்கள் மதிப்புமிக்கவர்களாகவும், வேடிக்கையாகவும் இருப்பதை குழந்தை கற்றுக் கொள்கிறது. அதே சமயம் பெற்றோர்கள், குழந்தைகள் விளையாடும் நேரத்தில் உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவது மற்றும் ஒன்றாக விளையாடும் விளையாட்டில் இணைவது போன்றவை அடங்கும். இவ்வாறு ஒன்றாக அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் குழந்தைகள் பெற்றோர்களை முக்கியமானவராகவும், நேசிக்கப்படுபவராகவும் எடுத்துக் கொள்கின்றனர்.
இந்த காலகட்டத்தில் செல்போன், டிவி, கணினி உபயோகத்தை பழக்கமாக்கிக் கொண்டுள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் மீதும், அவர்களின் மனநிலையின் மீதும் அக்கறை கொண்டு அவர்கள் விளையாட அனுமதிக்க வேண்டும். அதே சமயம், பெற்றோர்களும் அதில் பங்கு கொண்டு அவர்களுடன் நேரம் ஒதுக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: குழந்தைகளை ஏன் வெளியில் விளையாடச் சொல்கிறார்கள் தெரியுமா?
Image Source: Freepik
Read Next
Baby Weight Gain Tips: ஃபார்முலா பால் குழந்தைகளின் எடையை அதிகரிக்குமா? டாக்டர்கள் கூறுவது இங்கே!
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version