Sat Sep 12, 2026 | 12:46 AM IST

குழந்தைகளை ஏன் வெளியில் விளையாடச் சொல்கிறார்கள் தெரியுமா?

How important is playing outside: இன்றைய நவீன உலகத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போனை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தாக்கம், குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதையும் நிறுத்தி, திரையில் கவனம் செலுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இது குழந்தைகளின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நவீன தொழில்நுட்பம் பல்வேறு நன்மைகளைத் தந்தாலும், சில பக்கவிளைவுகளைத் தருவதாகவும் அமைகிறது. இதில் குழந்தைகள் வெளிப்புறத்தில் விளையாடுவதன் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Summer Care For Children: கோடை வெயிலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க இந்த டிப்ஸை பின்பற்றுங்க!

வெளிப்புற விளையாட்டைத் தவிர்ப்பது

பல ஆண்டுகளாகவே குழந்தைகள் மத்தியில் வெளிப்புற விளையாட்டிற்கான தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்கள், வீடியோ கேம்கள் மற்றும் உட்புற பொழுதுபோக்கின் வசதி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக அமைகிறது. அதே சமயம் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி சாத்தியமான அபாயங்களைக் குறைக்க அவர்கள் உள்ளேயே வைக்க விரும்புகின்றனர்.

வெளியில் விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்

குழந்தைகள் வெளியில் விளையாடுவது அவர்கள் உடல் ஆரோக்கிய மேம்பாட்டைத் தாண்டி பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

  • இது உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக அமைகிறது. மேலும் கற்பனை, படைப்பாற்றல் மற்றும் சமூக திறன்களை வளர்ப்பதற்கு ஏதுவாக அமைகிறது.
  • வெளியில் சென்று விளையாடுவது குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான காரணியாக அமைகிறது.
  • குழந்தைகள் வெளியில் சென்று விளையாடும் போது சூரிய ஒளியிலிருந்து வைட்டமின் டி சத்துக்கள் பெறப்படுகிறது. இது எலும்புகள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Child Phone Addiction: உங்க குழந்தை அதிகம் மொபைல் யூஸ் பண்றாங்களா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

ஆரோக்கியமான உணவுமுறை

வெளியில் விளையாடுவதை ஊக்குவிப்பதுடன், சில நல்ல, ஆரோக்கியமான, சமநிலையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், அறிவாற்றல் மேம்பாட்டிற்கும், மன ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

சரியான ஊட்டச்சத்து மிக்க உணவுகளைக் குழந்தைகளுக்கு அளிப்பது அவர்களின் உயரம், உடலமைப்பில் பங்களிக்கிறது.

வெளியில் விளையாடாததால் ஏற்படும் விளைவுகள்

உட்புற வாழ்க்கையை நோக்கியே இந்த விளைவுகள் அமைகிறது. வெளிப்புறத்தில் சென்று விளையாடாமல் இருப்பது மற்றும் உட்புறத்தில் ஓரிடத்திலான உடல் செயல்பாடு உடல் பருமன், மன அழுத்தம், உடல் தகுதி குறைதல் போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். மேலும் இது இயற்கை மட்டுமே வழங்கக் கூடிய அத்தியாவசிய ஆற்றல் அனுபவங்களை இழக்க நேரிடலாம்.

எனவே குழந்தைகளுக்கு அவர்களின் திறனை மேம்படுத்தவும், இன்னும் பல உடல் மற்றும் மன ஆரோக்கியம் கிடைக்க வெளிப்புற விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களின் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு பங்களிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Toothbrush For Children: உங்க குழந்தைக்கு டூத் பிரஸ் யூஸ் பண்றாங்களா? எப்படி தேர்வு செய்யணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Child Phone Addiction: உங்க குழந்தை அதிகம் மொபைல் யூஸ் பண்றாங்களா? இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content