Doctor Verified

குழந்தைகளுக்கு Fatty Liver வருவதற்கு Junk Food மட்டும் தான் காரணமா.? வேறு காரணங்கள் இருக்கிறதா.? மருத்துவரிடம் இருந்து தெரிந்துக் கொள்ளுங்கள்..

இன்றைய குழந்தைகளில் அதிகரித்து வரும் Fatty Liver பிரச்சனைக்கு ஜங்க் உணவுகள் மட்டும் காரணமில்லை. மரபு, மெட்டபாலிசம், வெளிப்புற விளையாட்டு குறைவு ஆகியவையும் முக்கிய காரணங்கள் என்று மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • SHARE
  • FOLLOW
குழந்தைகளுக்கு Fatty Liver வருவதற்கு Junk Food மட்டும் தான் காரணமா.? வேறு காரணங்கள் இருக்கிறதா.? மருத்துவரிடம் இருந்து தெரிந்துக் கொள்ளுங்கள்..


இன்றைய காலத்தில் குழந்தைகள் பல்வேறு உடல் நல பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள். அதில் கவலைக்கிடமான ஒன்று Fatty Liver. பெரியவர்களுக்கே ஏற்படும் பிரச்சனை என்று நினைக்கப்படும் இந்த நோய், தற்போது சிறிய குழந்தைகளிடமும் அதிகமாகக் காணப்படுகிறது என்று ரேடியாலஜிஸ்ட் டாக்டர் முபாரக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜங்க் உணவுகள் முக்கிய காரணம்.. ஆனால் ஒரே காரணமல்ல..

ஸ்கேன் செய்தபோது பல குழந்தைகளுக்கு Fatty Liver இருப்பது தெரியவருகிறது. அதற்கு முக்கியமான காரணமாக ஜங்க் உணவு கூறப்படுகிறது. சிப்ஸ், பீட்சா, பாஸ்ட் புட்ஸ், கார்போனேற்ற பானங்கள் போன்றவை கல்லீரலில் கொழுப்புச் சேர்க்கும். ஆனால், மருத்துவர் விளக்கமளித்தபடி, ஜங்க் உணவு மட்டும் காரணமல்ல, இது சுமார் 50% மட்டுமே காரணமாகிறது.

பிற காரணிகள் என்னென்ன?

* மரபு காரணிகள் (Genetic causes): குடும்ப மரபில் கல்லீரல் பிரச்சனைகள் இருந்தால், குழந்தைகளுக்கும் ஏற்படும் அபாயம் அதிகம்.

* மெட்டபாலிசம் பிரச்சனைகள் (Metabolic causes): உடலின் ஹார்மோன் செயல்பாடு, கொழுப்பு சிதைவு குறைபாடு போன்றவை கல்லீரலில் கொழுப்பு சேர்க்கும்.

* வெளிப்புற விளையாட்டு குறைவு (Lack of outdoor play): இன்றைய குழந்தைகள் அதிக நேரம் மொபைல், டிவி, டேப்லெட்டில் செலவழிக்கிறார்கள். வெளியில் விளையாடாமல் இருப்பது உடல் எடையையும், கல்லீரல் பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஃபேட்டி லிவரை மோசமாக்கும் 3 உணவுகள் இதோ.. நீங்க இத கட்டாயம் தவிர்க்கணும்

அறிகுறிகள் – சத்தமில்லா பிரச்சனை

Fatty Liver குழந்தைகளில் பெரும்பாலும் அறிகுறிகள் தெரியாமல் அமைதியாகவே இருக்கும்.

* சோர்வு

* சிறிய வயிற்று பெரிதாகுதல்

* எடை அதிகரித்தல்

இவை தவிர, ஆரம்பத்தில் பெரிய மாற்றங்கள் தெரியாது. ஆனால், அதை கவனிக்காமல் விட்டால், வளர்ந்த பின் லிவர் சேதம், நீரிழிவு, ஹார்மோன் பிரச்சனைகள் போன்றவை உருவாகும் அபாயம் அதிகம்.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

* வெளியில் விளையாட ஊக்குவிக்கவும்: மருத்துவர் சொல்வதுபோல், பிள்ளைகளுக்கு புத்தகத்தை மட்டும் கொடுக்காதீர்கள், பேட், பந்தையும் கொடுக்கவும். வெளியில் ஓடிப் விளையாடச் செய்யுங்கள்.

* ஸ்க்ரீன் டைம் குறைக்கவும்: மொபைல், டிவி, வீடியோ கேம்ஸ் நேரத்தை கட்டுப்படுத்துங்கள்.

* ஆரோக்கியமான உணவு கொடுக்கவும்: பழம், காய்கறி, புரோட்டீன் நிறைந்த உணவுகளை அளிக்கவும்.

* ஜங்க் உணவு குறைக்கவும்: வாரத்திற்கு ஒருமுறை என்றாலும் பரவாயில்லை, ஆனால் தினசரி ஜங்க் உணவு கொடுக்க வேண்டாம்.

* மருத்துவர் பரிசோதனை: குழந்தைகளை முறையான இடைவெளியில் டாக்டரிடம் அழைத்துச் சென்று சோதனை செய்யுங்கள்.

View this post on Instagram

A post shared by Dr Mubarak (@drmubarakofficial)

மருத்துவரின் எச்சரிக்கை

ஜங்க் உணவு மட்டுமல்ல, மரபு, மெட்டபாலிசம், விளையாட்டு குறைவு போன்ற பல காரணிகள் ஃபாட்டி லிவருக்குக் காரணமாகின்றன. சிறு வயதிலேயே கவனம் செலுத்தினால், எதிர்காலத்தில் பெரிய பிரச்சனைகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கலாம் என்று டாக்டர் முபாரக் கூறுகிறார்.

இறுதியாக..

குழந்தைகளின் ஆரோக்கியம் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது. ஜங்க் உணவு பழக்கத்தை குறைப்பதோடு, வெளியில் விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி, ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றச் செய்வது பெற்றோரின் பொறுப்பு. இதனுடன், அடிக்கடி மருத்துவரிடம் பரிசோதனை செய்தால், Fatty Liver போன்ற பிரச்சனைகளை தடுப்பது எளிதாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. குழந்தைகளின் உடல் நல பிரச்சனைகள் தொடர்பாக, மருத்துவரின் நேரடி ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

குழந்தைகளில் இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் என்னென்ன தெரியுமா?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 23, 2025 12:34 IST

    Published By : Ishvarya Gurumurthy