இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், அதிக நொறுக்குத் தீனிகள், உடல் செயல்பாடு குறைவு ஆகியவை பல நோய்களுக்கு வழிவகுக்கின்றன. அதில் முக்கியமானதும், கவனிக்கப்பட வேண்டியதுமாக இருப்பது கொழுப்பு கல்லீரல் (Fatty Liver).
ஆரம்பத்தில் எந்த வெளிப்பட்ட அறிகுறிகளும் தெரியாததால், இந்த பிரச்சனை எளிதில் புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் சரியான சிகிச்சை இல்லையெனில், இது படிப்படியாக கடுமையான நோய்களை உருவாக்கும் என்று டெல்லி தர்மஷிலா நாராயணா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த Gastroenterologist டாக்டர் மகேஷ் குப்தா எச்சரிக்கிறார்.
Fatty Liver ஏற்படுத்தும் முக்கிய நோய்கள்
கல்லீரல் சிரோசிஸ் (Liver Cirrhosis)
Fatty Liver நீண்டகாலம் சிகிச்சை பெறாமல் விட்டால், கல்லீரல் செல்கள் சேதமடைந்து, அவற்றின் இடத்தில் வடு திசுக்கள் (Scarring) உருவாகும். இதனால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்படும். இது பசியின்மை, சோர்வு, எடை குறைவு, வயிற்றில் நீர் தேக்கம், மஞ்சள் காமாலை போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
கல்லீரல் புற்றுநோய் (Liver Cancer)
கொழுப்பு கல்லீரலால் ஏற்படும் அலர்ஜி காரணமாக, செல்களில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோயாக மாறும் அபாயம் அதிகம். இதன் ஆரம்ப அறிகுறிகள் மிகவும் சாதாரணமானவை என்பதால், கண்டறிதல் கடினம். இந்தியாவில் Liver Cancer அதிகரித்து வருவதற்கு Fatty Liver ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: லிவர் ஆரோக்கியமாக இருக்க நிபுணர் சொன்ன இந்த எளிய விஷயங்களை கண்டிப்பா செய்யுங்க
இதய நோய் (Heart Disease)
Fatty Liver உள்ளவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, மாரடைப்பு அபாயம் இருமடங்கு அதிகம். கல்லீரல் சரியாக செயல்படாததால், இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்ந்து அடைப்பை உருவாக்கும். இதனால் இதய நோய் அபாயம் அதிகரிக்கும்.
டைப்-2 நீரிழிவு (Type-2 Diabetes)
Fatty Liver மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஒன்றோடொன்று தொடர்புடையவை. கல்லீரலில் கொழுப்பு சேரும்போது, இன்சுலின் செயல்பாடு குறைகிறது. இதன் விளைவாக இரத்த சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோயாக மாறும். நீரிழிவு பிற உறுப்புகளையும் (கண்கள், சிறுநீரகம், நரம்புகள்) பாதிக்கும்.
இறுதியாக..
கொழுப்பு கல்லீரல் சாதாரண பிரச்சனையல்ல; இது உடலுக்கு பல்வேறு ஆபத்தான நோய்களை வரவழைக்கும் மறைமுக எதிரி. சரியான உணவு பழக்கம், உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வழக்கமான பரிசோதனைகள் மூலம் Fatty Liver-ஐக் கட்டுப்படுத்தி, ஆபத்தான நோய்களைத் தவிர்க்கலாம் என மருத்துவர் பரிந்துரைக்கிறார்.