How to keep your liver healthy naturally: உடலில் உள்ள பல்வேறு முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் அடங்கும். இது உடலில் பல்வேறு வகையான பணிகளைச் செய்கிறது. இரத்தத்தை வடிகட்டுதல், நச்சுகளை நீக்குதல், ஊட்டச்சத்துக்களை வளர்சிதைமாற்றம் செய்தல், பித்தத்தை உற்பத்தி செய்தல், வைட்டமின்களை சேமித்து வைத்தல், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அவ்வாறு, கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்க அன்றாட வாழ்வில் சில ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறைகளைக் கையாள்வது அவசியமாகும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் நிபுணர் பிரதிமா அவர்கள் சமீபத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். இதில் கல்லீரலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள நிபுணர் பரிந்துரைத்த சில ஆரோக்கியமான குறிப்புகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Cleanse Liver: அழுக்கு படிந்த கல்லீரலின் பாக்டீரியாக்களை மொத்தமாக வெளியேற்றுவது எப்படி?
கல்லீரல் ஆரோக்கியம்
ஊட்டச்சத்து நிபுணர் பிரதிமா நாகராஜ் அவர்களின் கூற்றுப்படி,”வயிறு உப்புசமாக, ”சோம்பலாக, எடை குறைக்க முடியாமல் அல்லது PMS, ஹார்மோன் பிரச்சினைகள், மாதவிடாய் முறைகேடுகள், முகப்பரு, மனநிலை ஊசலாட்டம், நார்த்திசுக்கட்டிகள், நீர்க்கட்டிகள் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆதிக்கத்தின் பிற அறிகுறிகளுடன் போராடுபவர்களாக இருந்தால், அது கல்லீரல் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது” என்று கூறியுள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நிபுணர் தரும் குறிப்புகள்
கல்லீரலுக்கு உகந்த மூலிகைகளை சாப்பிடுவது
டேன்டேலியன், மஞ்சள், அதிமதுரம் போன்ற மருத்துவ மூலிகைகளின் உதவியுடன், கல்லீரலின் நச்சு நீக்கத்தை ஆதரிக்கலாம். இதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம்.
கல்லீரல் அழுத்தங்களைத் தவிர்ப்பது
காஃபின், ஆல்கஹால், சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குப்பை உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் கல்லீரலை அதிகம் வேலை செய்ய வைக்கிறது. இது உடலிலிருந்து நச்சு நீக்கத்தை மெதுவாக்கி வீக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்படலாம். எனவே, இது போன்ற கல்லீரலுக்கு அதிக அழுத்தங்களைக் கொடுக்கும் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் நாளைத் தொடங்குவது
காலை நேரத்தில் வெதுவெதுப்பான எலுமிச்சை நீரில் நாளைத் தொடங்குவது கல்லீரல் செயல்பாட்டை மெதுவாகத் தூண்டுகிறது. இது செரிமானத்தை ஆதரிக்கிறது. இவை உடலை இயற்கையாகவே நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
சிலுவை காய்கறிகளை சாப்பிடுவது
சிலுவை காய்கறிகளான முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, காலே போன்ற காய்கறிகள் சல்பர் சேர்மங்கள் நிறைந்ததாகும். இவை கல்லீரல் நச்சு நீக்கத்திற்கும், ஈஸ்ட்ரோஜன் வளர்சிதை மாற்றத்தையும் ஆதரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் செயல்பாட்டை மஞ்சள் மேம்படுத்துமா.?
நச்சுகளைக் குறைப்பது
சுற்றுச்சூழல் நச்சுக்களால் கல்லீரல் சுமை அதிகரிக்கக் கூடும். எனவே கல்லீரலின் சுமையைக் குறைப்பதற்கு கரிம உணவுகள், இயற்கை சுத்தம் செய்தல் மற்றும் தோல் பராமரிப்புப் பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
நீரேற்றமாக இருப்பது
உடலுக்குத் தேவையான போதுமான நீரேற்றம் பெறுவதன் மூலம் உடலிலிருந்து நச்சுக்களை திறம்பட வெளியேற்ற உதவுகிறது. எனவே தினமும் 2–3 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது கல்லீரலை சிறப்பாக செயல்பட வைக்கிறது.
இரவு நேர உண்ணாவிரதம்
இரவு முழுவதும் குறைந்தது 12 மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது கல்லீரலை ஓய்வெடுக்கவும், மீளுருவாக்கம் செய்யவும் வழிவகுக்கிறது. இது உடலை திறமையாக நச்சு நீக்கவும் அனுமதிக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
வியர்வை வெளியேறுவது
உடற்பயிற்சி அல்லது வேறு சில முறைகளின் உதவியுடன் வியர்வையை வெளியேற்றுவது உடலிலிருந்து நச்சுக்களை நீக்க ஆதரிக்கிறது. இது சருமத்தின் வழியாக நச்சுகளை அகற்ற உதவுகிறது.
ஆமணக்கு எண்ணெய் பயன்பாடு
நச்சு நீக்கத்தை ஆதரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், கல்லீரல் செயல்பாட்டை வளர்க்கவும் ஆமணக்கு எண்ணெய் பேக்குகளைப் பயன்படுத்தலாம்.
நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது
பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகளிலிருந்து கிடைக்கும் நார்ச்சத்துக்களை எடுத்துக் கொள்வது நச்சுகள் மற்றும் ஹார்மோன்களைப் பிணைத்து, குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இவை குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும், நச்சுகளை எளிதாக நீக்கவும் வழிவகுக்கிறது. இதன் மூலம் கல்லீரலின் வேலைப்பளுவைக் குறைக்கலாம்.
கல்லீரலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெறுவது
வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ, தாமிரம், இரும்புச்சத்துக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. எனவே கல்லீரல் செல்களைப் பாதுகாக்கவும், உகந்த கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கவும், நச்சு நீக்கத்தை அதிகரிக்கவும் சிட்ரஸ் பழங்கள், முட்டைகள், நட்ஸ், விதைகள் மற்றும் இலைக் கீரைகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரலில் இருந்து கொழுப்பை இயற்கையாகவே குறைக்க நீங்க குடிக்க வேண்டிய ட்ரிங்ஸ்
Image Source: Freepik