World liver day 2025: கல்லீரல் எந்த பிரச்சனையும் இல்லாம ஹெல்த்தியா இருக்க நீங்க சாப்பிடக்கூடிய, சாப்பிடக்கூடாத உணவுகள்

Best and worst foods for liver health: உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கான குறிப்புகள் குறித்து பலரும் அறிய வேணிய ஒன்றாகும். இதில் கல்லீரலை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள நாம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத சில உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
World liver day 2025: கல்லீரல் எந்த பிரச்சனையும் இல்லாம ஹெல்த்தியா இருக்க நீங்க சாப்பிடக்கூடிய, சாப்பிடக்கூடாத உணவுகள்


What are the best and worst foods for liver health: ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் நாள் உலக கல்லீரல் தினமான அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தின் முக்கியத்துவமாக, கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அமையும். மேலும், ஒவ்வொருவரும் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், கல்லீரல் நோய்களைத் தடுக்கவும் மேற்கொள்ள வேண்டிய சில ஆரோக்கியமான வாழ்க்கை முறைத் தேர்வுகளை தனிநபர்கள் மேற்கொள்ள வேண்டும். உலகளவில் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருவதால், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு பயனுள்ள தேர்வாகவே உலக கல்லீரல் தினம் செயல்படுகிறது.

உலக கல்லீரல் தினம் 2025 தீம்

2025 ஆம் ஆண்டு உலக கல்லீரல் தினத்திற்கான கருப்பொருள் 'உணவே மருந்து' என்பதைக் குறிக்கிறது. இந்த ஆண்டு கருப்பொருள், கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சமச்சீர் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகும். இந்த தினத்தில் சத்தான உணவுகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், மலிவு விலையிலும் கிடைக்கச் செய்ய உதவும் கொள்கைகளை உருவாக்க அதிகாரிகளை ஊக்குவிக்கவும் இது அனுசரிக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Liver Detox Drinks: இரண்டே வாரங்களில் கல்லீரல் கொழுப்பை துடைச்சி எடுக்க... இந்த பானங்களைக் குடியுங்கள்...!

கல்லீரல் ஆரோக்கியத்தில் உணவுமுறை எவ்வாறு உதவுகிறது?

நன்கு சமநிலையான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையானது கல்லீரல் செயல்பாடுகளை ஆதரிக்கிறது. இவை கல்லீரல் தொடர்பான நோய்கள் உருவாவதைத் தடுக்கவும் வழிவகுக்கிறது. அதன் படி, காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதம் நிறைந்த உணவு போன்றவை கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்க உதவுகிறது.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த உணவுகள்

கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளைப் போக்கவும், கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் அன்றாட உணவில் இந்த உணவுகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

  • அவுரிநெல்லிகள்
  • பீட்ரூட் சாறு
  • காபி
  • திராட்சை
  • முட்டைக்கோஸ்
  • காலிஃபிளவர்
  • ப்ரோக்கோலி
  • காலே
  • ஆலிவ் எண்ணெய்
  • பச்சை தேயிலை
  • கீரை

இவை அனைத்துமே கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கக்கூடிய சிறந்த உணவுகளாகும். அதே சமயம், சில உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியமாகக் கருதப்படுகிறது.

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்

  • சர்க்கரை
  • மது
  • சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்
  • பேக் செய்யப்பட்ட சிற்றுண்டிகள்
  • அதிகப்படியான உப்பு
  • கொழுப்பு நிறைந்த உணவுகள்

இந்த உணவுகள் அனைத்தும் கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக் கூடிய உணவு வகைகளாகும். எனவே இவற்றைத் தவிர்ப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: லிவர் ஆரோக்கியமாக இருக்க நிபுணர் சொன்ன இந்த எளிய விஷயங்களை கண்டிப்பா செய்யுங்க

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில குறிப்புகள்

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கலாம். இவை கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

நீரேற்றத்தில் கவனம் செலுத்துவது

கல்லீரலை சரியாக செயல்பட வைப்பதற்கு உடலுக்குப் போதுமான தண்ணீர் குடிப்பது அவசியமாகும்.

தடுப்பூசி போடுவது

ஹெபடைடிஸ் ஏ மற்றும் பி-க்கான தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது கல்லீரலை வைரஸ் தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

தேவையற்ற மருந்துகளைத் தவிர்ப்பது

மருந்துகளை அதிகமாக உட்கொள்வது, அதிலும் குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யப்படும் மாத்திரைகளைப் பயன்படுத்துவதால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவது

அதிகப்படியான மது அருந்துவதன் காரணமாக கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே மிதமான அளவு முக்கியமானதாகும்.

வழக்கமான பரிசோதனை

கல்லீரல் நோய்கள் பெரும்பாலும் முற்றிய நிலைகளை அடையும் வரை அடையாளம் காணப்படாமல் போய் விடலாம். எனவே வழக்கமான மருத்துவ பரிசோதனைகளின் உதவியுடன் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க உதவுகிறது.

இந்த உலக கல்லீரல் தினத்தில் கல்லீரலை சரியாக செயல்பட அனுமதிக்கலாம். மேலும், கல்லீரல் நோய்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் ஒட்டுமொத்த கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: World Liver Day 2025: உலக கல்லீரல் தினம் கொண்டாடப்பட இது தான் காரணம்

Image Source: Freepik

Read Next

சுகர் இல்லாம பிளாக் காபி குடிச்சா கொழுப்பு கல்லீரலுக்கு ஏதாவது யூஸ் இருக்கா.?

Disclaimer