Lifestyle factors that can negatively impact your liver health: ஆண்டுதோறும் ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. இவை கல்லீரல் தொடர்பான நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளவில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் அனுசரிக்கப்படுவதாகும். இந்த தினத்தின் முக்கியத்துவம் பற்றி மக்கள் அறிந்து கொண்டு, கல்லீரல் நோய் எதனால் ஏற்படுகிறது, கல்லீரல் நோய்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது குறித்தும், ஆரம்ப கால கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஆதரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நோக்கமாகக் கொண்டுள்ளது. உடலில் உள்ள மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாக விளங்கும் கல்லீரலை ஆரோக்கியமாக பாதுகாப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
இந்த ஆண்டு, உலக கல்லீரல் தினத்தின் கருப்பொருளானது, “விழிப்புடன் இருப்பது, தொடர்ந்து கல்லீரல் பரிசோதனை செய்து கொள்வது, கொழுப்பு கல்லீரல் நோய்களைத் தடுப்பது” என்பது அடங்கும். இந்த கருப்பொருள் ஆரம்ப கட்டத்திலேயே கல்லீரல் பிரச்சினைகளைக் கண்டறிந்து தடுப்பதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது. குறிப்பாக கொழுப்பு கல்லீரல் நோயால் ஏற்படும் அதிகரித்து வரும் சுகாதார அச்சுறுத்தலில் கவனம் செலுத்துகிறது. உலக கல்லீரல் தினத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உலகளவில் கல்லீரல் நோய்களின் சுமையைக் குறைக்கவும் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கல்வி நிகழ்வுகள் மற்றும் சுகாதார பரிசோதனைகளில் பங்கேற்கின்றன. இதில் கல்லீரலின் ஆரோக்கியத்தை மோசமாக்கும் காரணிகளின் பட்டியலைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: World liver day 2025: கல்லீரல் எந்த பிரச்சனையும் இல்லாம ஹெல்த்தியா இருக்க நீங்க சாப்பிடக்கூடிய, சாப்பிடக்கூடாத உணவுகள்
கல்லீரல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கக்கூடிய காரணிகள்
ஆரோக்கியமற்ற உணவுமுறை
நிறைவுற்ற கொழுப்புகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், மற்றும் சர்க்கரைகள் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது இன்சுலின் எதிர்ப்பு, உடல் பருமன் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கலாம். இதற்கு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெல்லிய புரதங்கள் நிறைந்த சமச்சீரான உணவைப் பின்பற்றலாம். அதே சமயத்தில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் சர்க்கரைகள் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
உடல் பருமன்
அதிக உடல் எடை காரணமாக, கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது கல்லீரல் வீக்கம் மற்றும் வடுக்கள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில், ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் உடல் எடையிழப்பது ஆபத்தை குறைக்கிறது.
வைரஸ் ஹெபடைடிஸ் தொற்றுகள்
ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற வைரஸ்கள் கல்லீரலில் வீக்கம் மற்றும் சேதத்தை ஏற்படுத்தலாம். இது நாள்பட்ட கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கலாம். ஹெபடைடிஸ் பி தொற்றைத் தடுப்பதற்கு ஆன்டிவைரல் மருந்துகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில், தடுப்பூசி போடுவதன் மூலம் அதைத் தடுக்கலாம்.
மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்
கல்லீரலில் கொழுப்பு சேர்வது மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கலாம். இது பெரும்பாலும் உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி போன்றவற்றுடன் தொடர்புடையதாகும்.
பாதுகாப்பற்ற ஊசி நடைமுறைகள்
பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டிற்கான ஊசிகளைப் பகிர்ந்து கொள்வது போன்ற பல்வேறு நடைமுறைகள் ஹெபடைடிஸ் பி மற்றும் சி தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். இது கல்லீரலை சேதப்படுத்தும் அபாயம் ஏற்படலாம்.
இந்த பதிவும் உதவலாம்: World Liver Day 2025: கல்லீரலை பத்திரமா பாதுகாக்க இந்த 5 மூலிகைகள் கைகொடுக்கும்...!
அதிகப்படியான மது அருந்துவது
மது அருந்துவது கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கலாம். இதன் காரணமாக வீக்கம், கொழுப்பு படிவுகள் மற்றும் கல்லீரலில் வடுக்கள் போன்றவை ஏற்படலாம். எனவே, மது அருந்துவதைத் தவிர்ப்பதும், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவ உதவியை நாடுவதும் அவசியமானதாக இருக்கும்.
புகைபிடித்தல்
புகை பிடிப்பதால் வெளிவரும் புகையில் உள்ள தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கல்லீரல் வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்டவற்றிற்கு வழிவகுக்கலாம்.
நச்சுகள் மற்றும் மாசுபடுத்திகளுக்கு வெளிப்பாடு
மாசுபடுத்திகள், இரசாயன நச்சுக்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் போன்றவை கல்லீரல் செல்களை சேதப்படுத்தி காலப்போக்கில் கல்லீரல் செயல்பாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது. சிகிச்சையில் நச்சுகளுக்கு வெளிப்படுவதைக் குறைப்பது, பணியிடத்தில் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது மற்றும் நல்ல சுற்றுச்சூழல் சுகாதாரத்தைப் பராமரிப்பது போன்றவை அடங்கும்.
மருந்து பயன்பாடு
சில மருந்துகளைப் பயன்படுத்துவது குறிப்பாக, மருந்துச்சீட்டு இல்லாமல் கிடைக்கக்கூடிய வலி நிவாரணிகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் பொழுதுபோக்கு பொருட்கள் போன்றவை கல்லீரலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம்.
ஒட்டுமொத்தமாக, தீங்கு விளைவிக்கும் பொருள்களைத் தவிர்ப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பது, ஹெபடைடிஸுக்கு எதிராக தடுப்பூசி போடுவது மற்றும் லீரல் தொடர்பான நிலைமைகளுக்கு ஆரம்பகால மருத்துவ தலையீட்டை நாடுதல் போன்றவை கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் அவசியமாகும். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளின் உதவியுடன் கல்லீரல் பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறியலாம். இது சரியான நேரத்தில் சிகிச்சையை அனுமதிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் மக்களே... எக்காரணம் கொண்டும் இந்த 6 அறிகுறிகள அலட்சியப்படுத்தாதீங்க!
Image Source: Freepik