How to reduce your risk of hepatitis: ஆண்டுதோறும் ஜூலை மாதம் 28 ஆம் நாள் உலக ஹெபடைடிஸ் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் 325 மில்லியன் கணக்கான மக்கள் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் ஒரு வருடத்தில் 1.4 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. காசநோய்க்குப் பிறகு இரண்டாவது பெரிய கொலையாளி தொற்று நோயாக ஹெபடைடிஸ் அமைகிறது. எச்.ஐ.வி-யை விட 9 மடங்கு மக்கள் ஹெபடைடிஸால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
உலக ஹெபடைடிஸ் தினத்தில், ஹெபடைடிஸ் நோயைக் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். ஹெபடைடிஸ் தடுக்கக்கூடியது மற்றும் சிகிச்சையளிக்கக்கூடியது என்ற உண்மையைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் ஹெபடைடிஸ் சி உண்மையில் குணப்படுத்தக்கூடியது.
இந்த பதிவும் உதவலாம்: Liver Health:கல்லீரல் ஆரோக்கியத்தை நகத்தின் நிறத்தை வைச்சி தெரிஞ்சிக்கலாம் வாங்க... இந்த 5 அறிகுறிகள் ஆபத்தானது!
ஹெபடைடிஸ் என்றால் என்ன?
ஹெபடைடிஸ் என்பது கல்லீரலின் அழற்சி நிலையைக் குறிக்கிறது. பொதுவாக, இது வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. இது மருந்துகள், நச்சுகள், ஆல்கஹால் மற்றும் சில மருந்துகளின் இரண்டாம் நிலை விளைவாகவும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இதில் ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸையும் பெறலாம்.
ஹெபடைடிஸ் ஆனது உடல் கல்லீரல் திசுக்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும் போது ஏற்படும் ஒரு நோயாகும். கல்லீரல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய நோயான ஹெபடைடிஸ் பல வகைகளைக் கொண்டுள்ளது. இந்த நோய்க்கான காரணங்களைப் புரிந்துகொள்வது இந்த நோய்களைப் பிடிக்கும் அபாயத்தைக் குறைக்கலாம்.
ஹெபடைடிஸ் நோய்க்கான ஆபத்து காரணிகள்
ஹெபடைடிஸ் ஏற்படுவதற்கான காரணங்களைப் புரிந்துகொள்வதுடன், இந்த நோய்க்கான அபாயத்தைக் குறைக்கும் பல்வேறு வழிகளையும் நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். இதில் ஹெபடைடிஸை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளையும், ஹெபடைடிஸ் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் எளிய வழிகளையும் காணலாம்.
ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி மற்றும் இ அனைத்துமே ஒருவருக்கொருவர் ஒப்பிடுகையில் வேறுபடுகிறது. இந்த வகைகளில் ஹெபடைடிஸ் காரணங்கள் மற்றும் அபாயங்களும் வேறுபடுகிறது. இதில் ஹெபடைடிஸ் நோய்க்கான மிகவும் பொதுவான காரணங்களைக் காணலாம்.
மோசமான சுகாதாரம்
சரியான சுகாராத்தைக் கையாளாமல் இருப்பதும், மோசமான சுகாதாரத்தைக் கையாள்வதும் ஹெபடைடிஸை ஏற்படுத்தும் வைரஸ்களால் பாதிக்கப்பட வைக்கிறது. இது ஹெபடைடிஸ் நோயை ஏற்படுத்துகிறது.
ஹெபடைடிஸ் உள்ள ஒருவரைத் தொடர்பு கொள்வது
ஹெபடைடிஸ் பிரச்சனை உள்ள ஒருவருடன் நேரடித் தொடர்பு கொள்வதன் காரணமாக, அவர்களுக்கும் ஹெபடைடிஸ் வருவதற்கான அபாயம் அதிவேகமாக அதிகரிக்கக்கூடும்.
இந்த பதிவும் உதவலாம்: கல்லீரலில் வீக்கம் ஹெபடைடிஸின் அறிகுறியாக இருக்கலாம்.. அதைத் தடுப்பதற்கான பயனுள்ள வழிகள் இங்கே..
மாசுபட்ட உணவு
மாசுபட்ட உணவு வகைகளில் ஹெபடைடிஸுக்கு காரணமான வைரஸ்கள் காணப்படலாம். எனவே, பழைய அல்லது கெட்டுப்போன உணவுகளைத் தவிர்ப்பது அவசியமாகும். அதே சமயம், உணவை குளிர்ந்த மற்றும் சுத்தமான சூழலில் சேமிக்க வேண்டும்.
அழுக்கு நீர்
மாசுபட்ட உணவைப் போலவே, அழுக்கு நீரிலும் ஹெபடைடிஸை ஏற்படுத்தும் வைரஸ்கள் காணப்படலாம். இதை குடிப்பது அல்லது அழுக்கு நீர் நிலைகள் உள்ள இடங்களில் வசிப்பது போன்றவை அபாயத்தை அதிகரிக்கலாம்.
மாசுபட்ட இரத்தம்
பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச்களைப் பயன்படுத்துவதன் காரணமாகவும், ஹெபடைடிஸ் உள்ள ஒருவரின் இரத்தத்துடன் தொடர்பு கொண்டு ஹெபடைடிஸ் தொற்றுக்கு வழிவகுக்கிறது.
பச்சை குத்துதல்
மாசுபட்ட ஊசிகளுடன் தொடர்பு கொள்வது ஹெபடைடிஸை ஏற்படுத்துகிறது. எனவே அவர்களின் உபகரணங்களுடன் உரிய கவனத்துடன் பின்தொடரும் நம்பகமான இடங்களிலிருந்து இந்த சேவைகளைப் பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தனிப்பட்ட பொருட்களைப் பகிர்வது
ஹெபடைடிஸ் உள்ள ஒருவருடன் துண்டுகள், தூரிகைகள் போன்ற தனிப்பட்ட பொருட்களைப் பகிர்வதன் காரணமாக ஹெபடைடிஸ் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
ஹெபடைடிஸ் அபாயத்தை எவ்வாறு குறைப்பது?
- பல்வேறு வகையான ஹெபடைடிஸுக்கு உள்ள பல்வேறு தடுப்பூசிகளை மருத்துவரின் பரிந்துரையில் செலுத்த வேண்டும்.
- சரியான தனிப்பட்ட சுகாதாரத்தைப் பராமரிப்பதன் மூலம் ஹெபடைடிஸ் அபாயத்தை அதிகரிக்கும் வைரஸ்களிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.
- எப்போதும் தனிப்பட்ட பொருட்களை, தனித்தனியாக வைத்திருப்பது அவசியமாகும். இவை ஹெபடைடிஸ் தவிர பல்வேறு நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உண்டாக்கலாம்.
- எப்போதும் சுத்தமான தண்ணீரை உட்கொள்ள வேண்டும். சுத்தமான நீர் கிடைக்காத இடத்திற்குப் பயணம் செய்பவர்கள், புதிய மற்றும் சுத்தமான தண்ணீரை எடுத்துச் செல்ல வேண்டும்.
- ஆபத்தை அதிகரிக்கக்கூடிய இடங்கள் மற்றும் பொருட்களுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பு எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அபாயங்களைப் புரிந்துகொள்வதன் மூலம் ஹெபடைடிஸை சிறப்பாகத் தடுக்கலாம். இந்த குறிப்புகளைத் தவிர, கல்லீரலின் நல்ல ஆரோக்கியத்தைப் பராமரிக்க கல்லீரலுக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: ஆபத்து அறிகுறிகள்.. தடுப்பு.. ஹெபடைடிஸ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளும் நாள்.!
Image Source: Freepik