ஜூலை 28 , உலக ஹெபடைடிஸ் தினம், கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் ஹெபடைடிஸ் வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் அழற்சி நிலை. இது வைரஸ்கள், ஆல்கஹால் பழக்கம், மருந்துகள் அல்லது ஆட்டோஇம்யூன் காரணங்களால் ஏற்படலாம். இதனை சளி, காய்ச்சல் போல எடுத்துக்கொள்வது ஆபத்தானது, ஏனெனில் இது பெரும்பாலும் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகளை காட்டாமல் மெதுவாக கல்லீரலை பாதிக்கக்கூடும். ஹெபடைடிஸ் உணர்த்தும் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து உங்கே விரிவாக காண்போம்.
வைரஸ் வகைகள்
* ஹெபடைடிஸ் A – உணவுப்பாதை மூலம் பரவுகிறது. குறைந்த சுத்தம் உள்ள இடங்களில் அதிகம் காணப்படும்.
* ஹெபடைடிஸ் B – இரத்தம், மலம், இன்பெக்ஷனான ஊசி, பாலியல் உறவுகள் மூலம் பரவுகிறது.
* ஹெபடைடிஸ் C – பெரும்பாலும் இரத்தம் மற்றும் ஊசி பகிர்வு மூலம்.
* ஹெபடைடிஸ் D, E – D என்பது B வைரஸோடு சேர்ந்து மட்டுமே நடக்கும். E உணவுப்பாதை வழியாக பரவுகிறது, குறிப்பாக கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டியவை.
முக்கியமான அறிகுறிகள்
* கணிசமான தளர்ச்சி மற்றும் சோர்வு
* வயிற்று வலி
* வாந்தி
* முகம் மற்றும் கண்களில் மஞ்சள் நிறம்
* சிறுநீர் அடர்த்தியான பழுப்பு நிறமாக மாறுதல்
* பசி குறைதல்
* மலத்தின்மேல் நிறம் மாற்றம்
* உடல் வெப்பம்
* தலைவலி
பரிசோதனை
* லிவர் ஃபங்ஷன் டெஸ்ட் (LFT)
* லிவர் ஃபங்ஷன் டெஸ்ட் (LFT)
* யூ.எஸ்.ஜி Abdomen
* ஹெபடைடிஸ் பி சுரப்பி, ஆன்டிபாடி டெஸ்ட்
தடுப்பதற்கான வழிகள்
* ஹெபடைடிஸ் A மற்றும் Bக்கு தடுப்பூசி உள்ளது. குழந்தை பிறந்தவுடன் B தடுப்பூசி கட்டாயம்.
* சுத்தமான தண்ணீர் மட்டுமே குடிக்கவும்.
* ஹைஜீனான உணவு சாப்பிடவும்.
* பொதுவான ஊசிகளை பகிர வேண்டாம்.
* பாலியல் உறவுகளில் பாதுகாப்பு இருக்க வேண்டும்.
* இரத்தம் கொடுக்கும் முன் பரிசோதனை அவசியம்.
* சுத்தமான சுகாதார பழக்கங்கள் கடைபிடிக்க வேண்டும்.
இயற்கை பாதுகாப்பு வழிகள்
* மஞ்சள் ஆன்டி வைரல் தன்மை கொண்டது. தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
* நெல்லிக்காய் லிவருக்கு சிறந்தது.
* தேன் கலந்த துளசி நீர் கல்லீரல் சுத்திகரிப்புக்கு சிறந்தது.
* கறிவேப்பிலை, வெந்தயம் கல்லீரல் பாதுகாப்பிற்கு நல்லவை.
* நீர் அதிகம் குடிக்கவும். டாக்ஸின்கள் வெளியேற உதவுகிறது.
வாழ்க்கை முறையில் மாற்றங்கள்
* நாள்தோறும் 30 நிமிடம் நடைபயிற்சி, யோகா செய்யுங்கள்.
* மது மற்றும் புகையை நிறுத்துங்கள்.
* சரியான நேரத்தில் உணவு, தூக்கம் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.
* விரும்பும் உணவுகள் என்றாலும் சுத்தம் இல்லாத இடங்களில் சாப்பிட வேண்டாம்.
விழிப்புணர்வு ஏன் அவசியம்?
உலகம் முழுவதும் கல்லீரல் நோய்கள் அதிகரித்து வருகிறது. உலக ஹெபடைடிஸ் தினமான ஜூலை 28ம் தேதி, இதைப்பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த நாளாகும். மனிதர்கள், குறிப்பாக இளம் தலைமுறை, ஹெபடைடிஸ் வைரஸின் ஆபத்தையும், தடுப்பு முறைகளையும் தெரிந்துகொள்வது அவசியம். இதற்கு பள்ளிகள், மருத்துவமனைகள், ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஹெபடைடிஸ் ஒரு பெரும் அச்சுறுத்தல் என்றாலும், விழிப்புணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் அதைத் தடுக்க முடியும். உங்கள் கல்லீரலை கவனியுங்கள். ஹெபடைடிஸ் பற்றிய புரிதலை மற்றவர்களுக்கும் பரப்புங்கள்.