மழை என்பது இயற்கையின் ஓர் அழகு. ஆனால், அந்த அழகான மழை நம் உடலுக்கு எச்சரிக்கையும் ஏற்படுத்தும். குறிப்பாக, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூக்கடைப்பு, வைரல் தாக்கங்கள் போன்றவை மழைக்காலத்தில் அதிகமாக பரவும். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். இந்த பதிவில், மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள், அவற்றுக்கான வீட்டிலேயே செய்யக்கூடிய நாட்டு வைத்தியங்கள் மற்றும் எளிய முன்னெச்சரிக்கை வழிகளை விரிவாக பார்க்கப்போகிறோம்.
மழைக்காலத்தில் நோய்கள் ஏற்பட காரணம்
மழைக்காலத்தில் சுற்றுப்புறங்களில் ஈரப்பதம் அதிகரிப்பதால், பல்வேறு சுகாதார பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இதனால்..
* வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் பரவல் வேகமாக வளரக்கூடிய நிலை ஏற்படுகிறது.
* உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைகிறது.
* மழையில் நனைந்து குளிக்காமல் இருப்பது மற்றும் மழைநீர் தேங்கி இருக்கும் இடங்களில் நடப்பது உடல்நலத்திற்கு கேடு ஏற்படுத்தலாம்.
* அதிகமாக சுற்றும் கொசுக்களால் டெங்கு, சிக்கன் குன்யா போன்ற தொற்றுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
* கூடுதலான குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் காரணமாக மூக்கடைப்பு, இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.
இதனால், மழைக்காலத்தில் சுகாதாரத்தை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.
முன்னெச்சரிக்கை
* மழையில் நனைய வேண்டிய சூழ்நிலை இருந்தால் உடனே குளித்து, உலர்ந்த ஆடைகளை மாற்ற வேண்டும்.
* முடியை உலர்த்தாமல் வைத்தால் தலைவலி, சளி ஏற்படும்.
* வீடு மற்றும் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்க வேண்டும்.
* தண்ணீர் தேங்கி இருக்கவைக்கக் கூடாது. இது கொசு இனப்பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.
* கொதிக்க வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்.
* வெளியே ஜூஸ் மற்றும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* காய்கறிகள், பழங்கள், நெய், மிளகு, சுக்கு போன்றவை உணவில் சேர்க்க வேண்டும்.
* சூடான உணவுகளை உண்பது நல்லது. குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் தவிர்க்க வேண்டும்.
* சிறந்த தூக்கம் அவசியம்.
மழைக்கால நோய்களை தடுக்கும் வீட்டு வைத்தியம்
இஞ்சி மற்றும் தேன்
1 கிளாஸ் தண்ணீரில், 1 சின்ன துண்டு இஞ்சியை நச்சுப் போட்டு, அதில் ஒரு ஸ்பூன் தேனில் கலந்து தினமும் காலை சாப்பாட்டுக்கு முன்னால் குடிக்கலாம். இது இருமல் மற்றும் தொண்டை வலியை குறைக்கும்.
சுக்கு காஷயம்
சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம், கிராம்பு சேர்த்து 1 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளவும். காலை மற்றும் மாலை ஒரு பாதி கிளாஸ் குடிக்கலாம்.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் தினமும் இந்த ஒரு பழத்தை சாப்பிடுங்க... நோய்களை விலக்கி வையுங்க...!
துளசி இலை டீ
துளசி இலைகள், இஞ்சி, சிறிது தேன் சேர்த்து டீ போல் தயாரிக்கலாம். இது சளி, இருமல், மூக்கடைப்புக்கு நிவாரணம் அளிக்கும்.
மிளகு ரசம்
சளி, மூக்கடைப்பு ஏற்பட்டால் வெப்பமான மிளகு ரசம் அருந்துவது மிகச்சிறந்தது.
மஞ்சள் பால்
ஒரு கிளாஸ் வெந்நீர் பசும் பாலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம். இது உடலை உள்ளிருந்து வெப்பமூட்டும்.
குழந்தைகளுக்கான டிப்ஸ்
மழைக்காலத்தில் குழந்தைகள் அதிகமாக நோய்ப்படுவார்கள். அவர்களுக்காக சிறப்பு கவனம் தேவை.
* தினமும் இரவு தூங்குவதற்கு முன் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
* இரவில் மஞ்சள் பால் கொடுக்க வேண்டும்.
* ஜவ்வரிசி கஞ்சி, வெந்தய கஞ்சி போன்ற உணவுகள் ஏற்றது.
* தூங்கும் அறை அமைதியானதாக இருக்க வேண்டும்.
எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?
* இரண்டு நாள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால்
* மூச்சுத்திணறல் இருந்தால்
* குழந்தைகளுக்கு பசிக்குறைவு, தூக்கமின்மை இருந்தால்
* இருமல், சளி அதிகமாக அதிகரித்தால்
குறிப்பு
மழைக்காலம் அழகானது, ஆனால் சிறு கவனக்குறைவால் அது நோய்களின் காலமாக மாறிவிடும். இங்கே கூறப்பட்ட வழிமுறைகள், வீட்டு வைத்தியங்கள் மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால், உங்கள் குடும்பம் முழுவதும் இந்த மழைக்காலத்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க முடியும்.