மழைக்காலம் மகிழ்ச்சி, குளிர்ச்சி, நிம்மதி ஆகியவற்றை அளித்தாலும், அதே சமயம் சளி, இருமல், சைனஸ், ஒவ்வாமை காய்ச்சல் போன்ற தொற்றுகள் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது.
பல ஆராய்ச்சிகளும், ஆயுர்வேத சாஸ்திரங்களும், மழைக்காலத்தில் வாதம், பித்தம், கபம் ஆகிய தோஷங்கள் சீர்குலையும் என்று எச்சரிக்கின்றன. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது மிக முக்கியம். இது போன்ற சூழ்நிலையில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்வது அவசியம்.
மழைக்கால நோய்களுக்கும் எதிராக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் உட்கொள்ளக்கூடிய உணவுகளை, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு நிபுணரான டிம்பிள் ஜங்டா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்படி என்ன உணவுகள் அவை. இது குறித்து அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்
சூப் – உடலுக்கு சூடு தரும் மருந்து
* பருவகால காய்கறிகளால் தயாரிக்கப்படும் சூடான சூப், செரிமான நெருப்பைத் தூண்டி, உடலை சுறுசுறுப்பாக்கும்.
* இஞ்சி, கருப்பு மிளகு சேர்த்தால் சளி, இருமல், சைனஸ் பிரச்சனைகள் குறையும்.
* மஞ்சள், சீரகம் சேர்த்தால் வீக்கம் குறையும், ஜீரணம் மேம்படும்.
காய்கறிகள் – செரிமானத்திற்கு எளிதானவை
* சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணிக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகள் விரைவாக ஜீரணமாகும்.
* இவை உடலுக்கு லேசான உணர்வை தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் தூண்டுகின்றன.
மூலிகை தேநீர் – இயற்கையின் காப்பாளர்
* துளசி, இஞ்சி, இலவங்கப்பட்டையால் தயாரிக்கும் ஹெர்பல் டீ, நீரிழிவு கட்டுப்பாடு, உடல் வீக்கம் குறைப்பு, சளி, இருமல் தடுப்பு ஆகியவற்றில் உதவுகிறது.
* உணவுக்குப் பிறகு ஒரு கப் ஹெர்பல் டீ உட்கொள்வது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நிபுணர் கூறுகிறார்.
பாசி பருப்பு – எளிதில் ஜீரணமாகும் சூப்பர்ஃபுட்
* பாசி பருப்பு, புரதம் மற்றும் மினரல்களின் வளமான மூலமாகும்.
* குடல் பணிச்சுமை குறைத்தல், செரிமானத்தை சீராக்குதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என பல நன்மைகளை அளிக்கிறது.
மோர் – எல்லா உடல் வகைக்கும் ஏற்றது
* தயிரை விட மோர் சிறந்த தேர்வு.
* தயிர் கபத்தை அதிகரிக்கக்கூடும், ஆனால் மோர் உயிரியல் தீயைத் தூண்டும்.
* சீரகம், பெருஞ்சீரகம், கொத்தமல்லி விதைகள், இஞ்சி போன்ற மசாலாக்களுடன் மோர் குடிப்பது, உடலுக்கு சீரான சமநிலையை தரும்.
View this post on Instagram
எச்சரிக்கை
“மழைக்காலத்தில் தவறான உணவு பழக்கவழக்கங்கள், உடல் பலவீனம் மற்றும் தொற்றுகளை அதிகரிக்கும். சூடான, எளிதில் ஜீரணமாகும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளைச் சாப்பிடுவது மிக அவசியம்” என்று டிம்பிள் ஜங்டா வலியுறுத்துகிறார்.
இறுதியாக..
மழைக்காலம் ஒரு அழகான பருவம். ஆனால், உடல்நலத்தை புறக்கணித்தால் அதே காலம் நோய் பருவமாகவும் மாறிவிடும். சூப், காய்கறிகள், மூலிகை தேநீர், பாசி பருப்பு, மோர் போன்ற உணவுகளைச் சேர்த்து உட்கொள்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, மழைக்காலத்தை ஆரோக்கியமாக அனுபவிக்கலாம்.