Fri Sep 11, 2026 | 10:48 PM IST

Expert

தொடரும் மழையால் வரும் நோய் அபாயங்கள்.. இம்யூனிட்டியை அதிகரிக்க இந்த 5 உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க

மழைக்காலம் தொடங்கிய இந்த காலநிலையில் உடலை ஆரோக்கியமாகவும், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதும் அவசியமாகக் கருதப்படுகிறது. இதில் மழைக்காலத்தில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பது குறித்து காணலாம்.

மழைக்காலத்திலேயே பல்வேறு நோய்கள் மற்றும் தொற்றுநோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. ஏனெனில், இந்த காலநிலையில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும். இதனால் வைரஸ்கள் மற்றும் தொற்றுநோய்களை அதிகரிக்கிறது. மேலும் இத்தகைய சூழ்நிலையில், நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. எனவே, மழைக்காலத்தில் சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில், இதன் மூலம் நாம் பல்வேறு நோய்களைத் தவிர்க்க முடியும். மேலும் இந்த பருவத்தில், வாத தோஷம் அதிகரிக்கவும் அதிகளவு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், சில நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், மழைக்கால நோய்களைத் தவிர்க்கவும் முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Rainy Season: மழைக்காலத்தில் கட்டாயம் குடிக்க வேண்டிய பானங்கள்!

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

அவ்வாறு, இந்த மழைக்காலத்தில் நாம் நமது உணவுப் பழக்கம் மற்றும் அன்றாட வழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதன் படி, இலகுவான, ஜீரணிக்க எளிதான மற்றும் வாதத்தை சமநிலைப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும். இது தவிர, இஞ்சி, மஞ்சள், துளசி போன்ற ஆயுர்வேத மூலிகைகளை உட்கொள்வதும் அதிக நன்மை பயக்கும்.

இதில் எந்தெந்த உணவுகள் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பூனம் சாகர் அவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

துளசி மற்றும் இஞ்சி டீ

மழைக்காலத்தில் இதை அருந்துவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே, நிபுணர் உங்கள் தொண்டையைப் பாதுகாக்கவும், சுவாச நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இதை தினமும் பருக பரிந்துரை செய்கிறார். மேலும், கூடுதல் வலிமைக்கு தேன் அல்லது கருப்பு மிளகு சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும்.

பப்பாளி

இது அதிகளவிலான வைட்டமின் சி மற்றும் என்சைம்களைக் கொண்டுள்ளது. இந்த பருவகால பழமானது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது. இவை குடலுக்கு மென்மையான தீர்வாகவும், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. எனவே இதை மழைக்காலத்தில் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும்.

பாசிப்பருப்பு

இது புரதம் நிறைந்ததாகவும், குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகவும் அமைகிறது. மேலும் இதில் காணப்படும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், நமக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல, கனமான பருப்பு வகைகளைப் போலல்லாமல், பாசிப்பருப்பு எளிதில் ஜீரணமாகக் கூடியதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி டபுள் மடங்கு அதிகமாக இந்த 5 காய்கறிகளை சாப்பிடுங்க!

பூண்டு

இது இயற்கையான ஆன்டிபயாடிக் ஆக செயல்படுகிறது. தட்கா அல்லது சூப்களில் இதைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். மேலும், சிறிய பல் பூண்டு கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அன்றாட உணவில் பூண்டு சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது.

View this post on Instagram

A post shared by Dt Poonam Sagar (@dt.poonamsagar)

தயிர்

தயிர் புரோபயாடிக் நிறைந்த சிறந்த உணவாகும். இதை உணவில் சேர்ப்பது நல்ல குடல் பாக்டீரியாக்களை ஆதரிக்க வழிவகுக்கிறது. எனினும், புளிப்பு அல்லது பழைய தயிரைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக புதிய, வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிரை எடுத்துக் கொள்ளலாம். தயிர் போன்ற புளித்த உணவுகள் வலுவான நுண்ணுயிரியை உருவாக்க உதவுகின்றன.

அன்றாட உணவில் இந்த வகை உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் மழைக்காலத்தில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்கால நோய்களை தடுக்க உதவும் 5 அற்புத உணவுகள் – நிபுணர் பரிந்துரை!

Image Source: Freepik

Read Next

மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.. இந்த டீ குடிங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 21, 2025 22:38 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content