Immunity Boosting Foods: மழைக்காலத்தில் குழந்தைகளின் இம்யூனிட்டியை அதிகரிக்க இந்த உணவுகளைக் கொடுங்க

  • SHARE
  • FOLLOW
Immunity Boosting Foods: மழைக்காலத்தில் குழந்தைகளின் இம்யூனிட்டியை அதிகரிக்க இந்த உணவுகளைக் கொடுங்க


இல்லையெனில், குழந்தைகளுக்கு இந்த காலகட்டத்தில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சிக்கான சரியான சூழல் உருவாகிறது. இதனால் சளி, காய்ச்சல் மற்றும் செரிமான பிரச்சினைகள் போன்ற பொதுவான நோய்கள் ஏற்படலாம். எனவே மழைக்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

இந்த பதிவும் உதவலாம்: Immunity Boosting Foods: உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

மழைக்காலத்தில் குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் உணவுகள்

குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதன் மூலம், அவர்களை பல்வேறு வகையான நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்க முடியும். இதில் மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க என்ன வகையான உணவுகளைக் கொடுக்கலாம் என்பதைக் காணலாம்.

இஞ்சி மற்றும் தேன்

இஞ்சி ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், தேனிலும் நோயெதிர்ப்பு ஊக்கி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளது. இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து உட்கொள்வதன் மூலம் ஒரு சக்திவாய்ந்த இயற்கை தீர்வை உருவாக்க முடியும். அதன் படி, குழந்தைக்கு ஒரு டீஸ்பூன் தேனுடன் இஞ்சி டீ கொடுக்கலாம் அல்லது துருவிய இஞ்சியை உணவில் சேர்த்துக் கொடுக்கலாம்.

மஞ்சள்

பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சள், உணவுப் பொருளாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறந்த மசாலா பொருளாகும். மஞ்சளில் குர்குமின் கலவை நிறைந்துள்ளது. மேலும் இதில் வலுவான அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே குழந்தையின் உணவில் மஞ்சளைச் சேர்ப்பதன் மூலம் அவர்களின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க முடியும்.

தயிர்

வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு தயிர் பெரிதும் உதவுகிறது. இதற்கு தயிரில் காணப்படும் புரோபயாடிக்குகளே ஆகும். இவை ஆரோக்கியமான குடலை பராமரிக்க உதவக்கூடிய நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் ஆகும். தயிரைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான செரிமானத்தை மேம்படுத்துவதுடன், உடலின் இயற்கையான பாதுகாப்பை மேம்படுத்தலாம். எனினும், குழந்தைகளுக்குத் தயிர் கொடுக்கும் போது சர்க்கரை மற்றும் குளிர்ச்சி மிகுந்ததாக இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இதை செய்யுங்கள்

பாதாம்

பாதாம் வைட்டமின் ஈ நிறைந்த சிறந்த மூலமாகும். இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் போன்றவை குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களாகும். அதன் படி, தினமும் ஒரு கைப்பிடி அளவிலான ஊறவைத்த பாதாம் பருப்பை குழந்தைகளுக்கு வழங்குவது மழைக்காலத்தில் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

பொதுவாக எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவக்கூடிய ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இந்த வைட்டமின் சி உடலில் இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இவை நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது. குழந்தைகளுக்கு புதிய ஆரஞ்சு சாறு கொடுப்பது அல்லது தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தைச் சேர்த்து சாறு தயார் செய்யலாம்.

முட்டை

முட்டையில் அதிக அளவு புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த ஆற்றல்மிக்க உணவாகக் கருதப்படுகிறது. மேலும் முட்டையில் உள்ள வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இவ்வாறு குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வகையில், மழைக்காலத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையிலும் குழந்தைகளுக்கு இந்த வகை உணவுகளைக் கொடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Immunity Boosting Tea: உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 மூலிகை டீகள்!

Image Source: Freepik

Read Next

Paneer Pakoda: வெறும் 20 நிமிடம் போதும் சுவையான பன்னீர் பிரட் பக்கோடா செய்யலாம்!

Disclaimer