$
Superfoods For Immunity Boost: காலநிலைகளுக்கு ஏற்ப உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக, மழைக்காலங்களில் அதிக தொற்றுகள் பரவி காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த கால கட்டங்களில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, தொற்றுக்களுக்கு எதிர்த்துப் போராடும் வண்ணம் உடலைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் வைட்டமின் சி ஆகும். மேலும் இதனுடன் பல்வேறு ஊட்டச்சத்துக்களுடன் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்
அன்றாட வாழ்வில் நாம் சேர்க்கும் சில உணவுப் பொருள்கள் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதில் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளைக் காணலாம்.

வெங்காயம், பூண்டு
உடலுக்குத் தேவையான நுண்ணுயிர்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட எண்ணெய்கள் வெண்ணெய், பூண்டு போன்றவற்றில் உள்ளது. இது உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களில் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பூண்டில் கருப்பு பூண்டு எடுத்துக் கொள்வது இரு மடங்கு ஆற்றல் தரும். மேலும் பூண்டில் உள்ள சில கலவைகள், சளி மற்றும் காய்ச்சல்களை ஏற்படுத்தும் வைரஸ்கள் வெள்ளை இரத்த அணுக்களைச் சந்திக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Warm Water Benefits: தினமும் காலையில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் மூலமாகும். இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி உடலில் இயற்கையாக உற்பத்தியாகாது என்பதால், இதை தினசரி உட்கொள்வது அவசியம். அதன் படி, எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி அதிகளவு உள்ள பழங்களை உட்கொள்ள வேண்டும்.
இஞ்சி
சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகளை இஞ்சி கொண்டுள்லது. இது மூட்டு வலி, அழற்சி குடல் நோய் போன்றவற்றின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

உலர் பழங்கள்
உலர் பழங்களில் இயற்கையாகவே பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், துத்தநாகம் வைட்டமின்கள் மற்றும் இன்னும் பிற ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் உலர் பழங்கள் அதிக அளவிலான அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இவை நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. எனவே தினமும் ஒரு சில வகையான உலர்பழங்கள், நட்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலை ஆரோக்கியமாகவும், உடலில் ஆற்றல் மட்டத்தை அதிகமாகவும் வைத்திருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு அதிக அளவிலான வைட்டமின் ஏ சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றை வழங்குகிறது. இவை கண் பார்வையை பலப்படுத்தும். மேலும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. இது இதயம் மற்றும் சிறுநீரகத்தின் வேலையைச் சீராகச் செய்கிறது.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இவற்றில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் பெரிதும் உதவுகிறது. இது உடலில் இரத்த ஓட்டத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது.

தயிர்
தயிரில் ஆரோக்கியமான புரோபயாடிக்குகள், வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளன. நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது. மேலும் இது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்திற்கும் உதவுகிறது. குறிப்பாக தயிரை நம் உணவில் சேர்த்துக் கொள்ள சிறந்த வழியாக, மதிய உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்
Image Source: Freepik