$
Tamarind Juice Health Benefits: புளிச்சாறு சுவையான பானமாகும். உணவுப் பொருளான புளியில் இருந்து தயாரிக்கப்படும் புளிச்சாறு உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. புளியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் சி, பி, மெக்னீசியம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளன. எனவே இவை மனித உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைத் தருகிறது. இது காரமான, சுவையான மற்றும் பல்வேறு நன்மைகளைத் தருவதாக அமைகிறது. தினமும் ஒரு டம்ளர் புளிச்சாறு அருந்துவது இதயம், செரிமானம், சரும ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கியத்தைத் தருகிறது. இப்போது புளிச்சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
புளிச்சாறு செய்யும் முறை
புளிச்சாற்றை கீழ்க்கண்ட முறையில் எளிமையாகச் செய்யலாம்.
தேவையான பொருள்கள்
- புளி
- தண்ணீர்
- தேன் அல்லது சர்க்கரை பாகு
- ஐஸ்கட்டி
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!
புளிச்சாறு செய்முறை
- முதலில் வழக்கம் போல் புளியைத் தண்ணீரில் கழுவ வேண்டும்.
- பின் புளியின் அனைத்து விதைகளையும் கவனமாக அகற்ற வேண்டும்.
- கடாய் ஒன்றில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- இந்த நீரில் விதையில்லாமல் எடுத்து வைத்த புளியைச் சேர்த்து அடுப்பைக் குறைக்கவும்.

- இவ்வாறு 10-15 நிமிடங்கள் வைத்து, புளி வெந்துவிட்டதா என்று சோதித்து, வேகவில்லையெனில் மேலும் 5-10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
- இந்த வேகவைத்த கலவையை மிதமான சூட்டிற்குக் கொண்டு வந்து, பின் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
- பிறகு இதை சல்லடையில் சளித்து, குளிர்விக்க விடவும்.
- இதில் தனியாக பிரிந்த சாற்றில் தேன் அல்லது சர்க்கரைப் பாகு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- பிறகு குளிர்ச்சியாக உட்கொள்ள ஐஸ் சேர்த்து சாற்றைக் குளிர்ச்சியாக உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?
புளிச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
புளிச்சாற்றைக் குடிப்பதால் உடல் நலத்திற்குக் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
நீரிழிவு நோயைத் தடுக்க
புளியில் மிகவும் லேசான அளவிலேயே சர்க்கரை உள்ளது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஏனெனில் இவை இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது. மேலும் புளியில் உள்ள பொருள்கள் உடலில் குளுக்கோஸை சமன் செய்வதற்கு இன்சுலின் அளவைக் குறைக்கிறது.

செரிமானத்தை அதிகரிக்க
மலச்சிக்கல், பிடிப்புகள், வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள், புளிச்சாற்றைக் குடிக்கலாம். ஒழுங்கற்ற குடல் அசைவுகளால் அவதிப்படுபவர்கள் புளிச்சாற்றைக் கட்டாயம் குடிக்க வேண்டும். இதில் லேசான டையூரிடிக் பண்புகள் இருப்பதால், இவை செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும், இது அனைத்து வகையான வயிற்றுப் பிரச்சனைகளையும் நீக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of mango juice: மாம்பழ ஜூஸில் இத்தனை நன்மையா?
எடை இழப்பை ஊக்குவிக்க
கொழுப்பைக் கொண்ட சில உணவுப் பொருள்களில் புளியும் அடங்கும். மேலும், இது நார்ச்சத்து நிறைந்த மூலமாகும். வழக்கமாக, புளிச்சாற்றை இரண்டு மாதங்களுக்குள் குடித்து வர உடல் எடையைக் குறைக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு புளிச்சாற்றில் உள்ள பாலிபினால்கள், ஹைட்ராக்ஸிசிட்ரிக் அமிலம், ஃபிளவனாய்டுகள் போன்றவை உள்ளதே காரணமாகும். இது பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
சரும பிரச்சனைக்கு
பொதுவாக பெரும்பாலானோர் அரிக்கும் தோலழற்சி என்ற தோல் பிரச்சனையால் பாதிக்கப்படுவர். இது புளியால் எளிதில் குணமாகலாம். மேலும், இந்த புளிச்சாற்றை தழும்புகள் அல்லது தீக்காயங்களைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றை சருமத்தை சுத்தப்படுத்துகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு
புளிச்சாறு குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவது போலவே, உடலில் கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை இதய செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்கு, தமனிகளைச் சுற்றி கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது. இந்தச் சாற்றைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.
Image Source: Freepik