Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!

  • SHARE
  • FOLLOW
Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!


உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பதில் மற்றொரு முக்கிய பங்கு வகிப்பது பால் ஆகும். வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து தயாரிக்கப்படும் வாழைப்பழ மில்க் ஷேக் உடலுக்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. ஆரோக்கியமான உணவுடன், இந்த வாழைப்பழ மில்க் ஷேக் குடித்துவர என்னென்ன பயன்களைப் பெறலாம் என்பதைக் காணலாம்.

இந்தப் பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க உதவும் 5 ஓட்டப் பயிற்சிகள்

வாழைப்பழ மில்க் ஷேக் நன்மைகள்

அற்புத சுவையுடன் கூடிய வாழைப்பழ மில்க் ஷேக் குடிப்பதால் உடலுக்குத் தேவையான பல வகையான நன்மைகளைப் பெறலாம்.

முடி உதிர்வு பிரச்சனைக்கு

உயர்ந்த தாதுக்களின் கலவையான வாழைப்பழம் மிகுந்த சத்துள்ளவையாகும். வாழைப்பழ மில்க் ஷேக்கை அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள முடி உதிர்வு பிரச்சனைகளை நீக்கி, முடி நீளமாகவும் மென்மையாகவும் வளர்வதற்கு உதவுகிறது. ஏனெனில் இது முடி வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது.

ஆற்றல் ஊக்குவிக்க

வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், உடலில் குளுக்கோஸின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சி போன்றவற்றிற்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. மேலும், இதில் உள்ள அதிக அளவு பொட்டாசியம், தசைப்பிடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.

இந்தப் பதிவும் உதவலாம்: முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

எடை அதிகரிப்பு மற்றும் குறைப்பிற்கு

எடை அதிகரிப்பிற்குத் தேவையான அதிக கலோரி அளவு வாழைப்பழ மில்க் ஷேக்கில் உள்ளது. மேலும், இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் எடை அதிகரிப்பில் பெரும் பங்கு வகிக்கிறது.

எடை குறைப்பிற்கும் வாழைப்பழ மில்க் ஷேக் உதவுகிறது. பொதுவாக உடல் குறைப்பு உணவு மற்றும் உடற்பயிற்சியை சார்ந்த அமையும். அதன் படி, வாழைப்பழ மில்க் ஷேக் எடுத்துக் கொள்வது உணவில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது உடல் எடை இழப்புக்கு ஒரு நிலையான வழியாக உள்ளது.

சரும பராமரிப்பிற்கு

வாழைப்பழ மில்க் ஷேக்கில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால் தோலில் ஏற்படும் சேதத்தை குணப்படுத்த உதவுகிறது. முகப்பருக்கள் நீக்குவதிலும் வாழைப்பழம் பயன்படுகிறது. மேலும், இது ஆன்டி ஏஜிங் ஆக செயல்பட்டு சுருக்கங்களைத் தடுக்கிறது.

இந்தப் பதிவும் உதவலாம்: க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

Image Source: Freepik

Read Next

Cucumber Raita Recipe: டேஸ்டியான, ஹெல்த்தியான வெள்ளரி ரைட்டா ரெசிபி!

Disclaimer