Cucumber Raita Recipe: டேஸ்டியான, ஹெல்த்தியான வெள்ளரி ரைட்டா ரெசிபி!

  • SHARE
  • FOLLOW
Cucumber Raita Recipe: டேஸ்டியான, ஹெல்த்தியான வெள்ளரி ரைட்டா ரெசிபி!

பொதுவாக நம் அன்றாட உணவில் வெள்ளரிக்காயை பல்வேறு வழிகளில் உட்கொள்ளலாம். அந்த வகையில் வெள்ளரிக்காய் ரைத்தா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான விருப்பங்களில் ஒன்றாக அமைகிறது. இந்த வெள்ளரிக்காய் ரைத்தா உடலுக்கு குளிர்ச்சியுடன் கூடிய மிகுந்த நன்மை பயக்கும். இதில் சேர்க்கப்படும் தயிர் உடலுக்குக் கூடுதல் நன்மைகளைத் தரக்கூடியதாகும். இதில் வீட்டிலேயே எளிமையான முறையில் வெள்ளரிக்காய் ரைதா தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் தயாரிக்கும் முறை குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பற்களுக்கு பலம் தரும் பொரிவிளங்கா உருண்டை! உங்க வீட்டில் இப்படி ஈஸியா செய்யுங்க

வெள்ளரிக்காய் ரைத்தாவை செய்வது எப்படி?

தேவையானவை

  • வெள்ளரி - 2 கப் (துருவியது)
  • கெட்டியான தயிர்/ சாதாரண தயிர் – 1 1/2 கப் (விரும்பினால் மேலும் சேர்க்கலாம்)
  • வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

மசாலா செய்ய தேவையானவை

  • எண்ணெய் – 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
  • கடுகு – 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிதளவு

வெள்ளரி ரைத்தா தயார் செய்யும் முறை

வெள்ளரி ரைத்தாவை வீட்டிலேயே எளிதான முறையில் தயார் செய்யலாம்.

  • முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெள்ளரிக்காய்யைத் துருவி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடம் வைக்க வேண்டும். இது தண்ணீரை வெளிவிடும். இந்தத் தண்ணீரை பிழிந்து அல்லது வடிகட்ட வேண்டும்.

(இந்த நீரை வீணாக்காமல், வெள்ளரி மோர் செய்ய பயன்படுத்தலாம்)

  • பிறகு இதனுடன் தயிர் சேர்க்கலாம்.
  • கடாய் ஒன்றில் டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு சேர்க்கலாம்.
  • கடுகு வதங்கிய பிறகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
  • பின் இந்தக் கலவையை வெள்ளரி, தயிர் கலந்த கலவையில் ஊற்ற வேண்டும்.
  • அதன் பிறகு, வறுத்த சீரகப் பொடியைத் தூவி, கொத்தமல்லி இலையால் அலங்கரிக்கலாம்.
  • இப்போது சூப்பரான மற்றும் சுவையான வெள்ளரிக்காய் ரைதா தயாரானது.
  • இதனை வெஜிடபிள் புலாவ், காலிஃபிளவர் புலாவ் மற்றும் புதினா புலாவ் உள்ளிட்ட அரிசி உணவுகள் மற்றும் அனைத்து வகை பிரியாணிகளுக்கும் வெள்ளரி ரைத்தாவைச் சேர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தேங்காய், தக்காளி சட்னியை மிஞ்சும் சுவையில் சூப்பரான புதிய சட்னி ரெசிபி!

வெள்ளரி ரைதா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும், தயிர் கார்டிசோலின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் கூறுகளைக் கொண்டுள்ளது. எனவே ரைதா உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது.
  • அதிக காரமான மற்றும் சூடான உணவை உட்கொள்வது வயிற்றுக் கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே காரமான உணவை நீர்த்துப்போகச் செய்ய வெள்ளரிக்காய் ரைதாவை உட்கொள்ளலாம். இவை செரிமானத்தை மேம்படுத்தவும், குடலியக்கத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
  • நிறைவுற்ற கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட எண்ணெய் உணவுகளை உண்பது இருதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதைத் தவிர்க்க, வெள்ளரிக்காய் ரைதாவைச் சேர்த்துக் கொள்ளலாம். இது எளிதில் செரிமானம் அடைய உதவுவதுடன், உயர் இரத்த அழுத்தம் அபாயத்தைக் குறைக்கிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் வெள்ளரிக்காய் ரைத்தா உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, அன்றாட உணவில் வெள்ளரிக்காய் ரைத்தாவைச் சேர்த்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடலுக்குக் குளிர்ச்சி மட்டுமல்ல! இந்த நன்மைகளையும் அள்ளித் தரும் வெள்ளரிக்காய் பச்சடி

Image Source: Freepik

Read Next

குடல் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

Disclaimer