How To Make Cucumber Pachadi Step By Step: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை சீரான மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகும். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் வகையில் நிறைய அளவிலான பழங்கள், காய்கறிகள் போன்றவை உள்ளன. இதில் ஒன்றாக வெள்ளரிக்காய் உள்ளது. குறிப்பாக, கோடைக்காலத்தில் வெள்ளரிக்காய் உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கிறது. இது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன், பல தரப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதை நேரடியாக அப்படியே உட்கொள்ளலாம். இது தவிர, வெள்ளரிக்காய் பச்சடி வடிவில் உட்கொள்ளலாம்.
வெள்ளரிக்காயில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள்
வெள்ளரிக்காய் ஒரு புத்துணர்ச்சியூட்டும் காய்கறியாகும். இது மிக அதிகமான அதாவது 96 சதவீதம் நீர் உள்ளடக்கத்தை கொண்டதாகும். எனவே உடலை நீரேற்றமாக வைப்பதில் இது சிறந்த தேர்வாக அமைகிறது. எனினும், ஒப்பீட்டளவில் வெள்ளரியானது வைட்டமின்கள் பி, சி மற்றும் கே, தாமிரம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சில ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பினும், இது மற்ற காய்கறிகளை போல ஊட்டச்சத்து அடர்த்தியைக் கொண்டிருப்பதில்லை. மேலும், வெள்ளரிக்காயில் ஃபிளாவனாய்டுகள் போன்ற சில ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: அருமையான சுவையில் மணக்க மணக்க கொளுக்கட்டை ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க
வெள்ளரிக்காய் பச்சடி தயார் செய்யும் முறை
தேவையானவை
- வெள்ளரி – 2
- கெட்டி தயிர் – ஒரு கப்
அரைக்கத் தேவையானவை
- சீரகம் – ஒரு ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
தாளிக்கத் தேவையானவை
- எண்ணெய் – அரை ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- வர மிளகாய் – 1
- கறிவேப்பிலை – ஒரு கொத்து

வெள்ளரி பச்சடி செய்வது எப்படி?
- முதலில் தயிரை அடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அடிக்கும் போது மிக்ஸி பயன்படுத்தக்கூடாது. மாற்றாக, கையில் விஸ்க் வைத்து அடிக்க வேண்டும்.
- பின், அரைப்பதற்கு தேங்காய் துருவல், சீரகம், கடுகு, பச்சை மிளகாய் போன்றவற்றை எடுத்துக் கொண்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளலாம்.
- அதன் பிறகு கடாய் ஒன்றை எடுத்து, அதில் அரைத்த விழுது மற்றும் நறுக்கிய வெள்ளரிகளை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- இவ்வாறு கொதிக்க வைக்கும் போது, பச்சை வாடை போன பிறகு, கடாயை இறக்கி ஆறவைத்து விடலாம்.
- அதன் பின், தனியாக ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு, கடுகு சேர்த்து பொரிந்த உடன், உளுந்து சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வைக்கவும். பிறகு கறிவேப்பிலை, வரமிளகாயைச் சேர்த்து வதங்கிய வெள்ளரி, தேங்காய் மசாலாவில் சேர்க்கவேண்டும்.
- இவை அனைத்தும் நன்றாக ஆறிய பிறகு, அதில் அடித்து வைத்த தயிரைச் சேர்த்து கலக்க வேண்டும்.
- இப்போது சூப்பரான, சுவையான வெள்ளரி பச்சடி தயாரானது. இந்த பச்சடியை சாதம், பூரி, சப்பாத்தி, பரோட்டா உள்ளிட்ட உணவுகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ulunthu Milk: உளுத்தங்கஞ்சி குடிச்சி போர் அடிச்சிடுச்சா? உளுத்தம்பருப்பு பால் இப்படி செஞ்சி குடிங்க!
வெள்ளரி உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
வெள்ளரி உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல வித சிறப்பான நன்மைகளை அளிக்கிறது.
- வெள்ளரிக்காயை உட்கொள்வது உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதுடன், நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
- இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை மலச்சிக்கல்லைத் தடுக்கவும், வழக்கமான குடல் இயக்கத்தையும் அதிகரிக்கிறது.
- வெள்ளரிக்காயில் நார்ச்சத்துக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை வயிறு நிரம்பிய முழுமை உணர்வைத் தருவதால், பசியைக் கட்டுப்படுத்தி எடையிழப்பை ஆதரிக்கிறது.
- வெள்ளரிக்காயில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்தி, நாள்பட்ட நோயின் அபாயத்தையும் குறைக்கிறது.
- குளிர்ச்சி மிகுந்த வெள்ளரிக்காய் சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்களிக்கிறது. மேலும், இது பல்வேறு சரும பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

வெள்ளரிக்காயைத் தங்களது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இது போன்ற ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mushroom Donne Biryani: பெங்களூர் ஸ்பெஷல் காளான் தொன்னை பிரியாணி எப்படி செய்யணும் தெரியுமா?
Image Source: Freepik