Palak paneer idli recipe: இன்று பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு நேரங்களில் சாப்பாடு உண்பதை விட, டிபன் ரெசிபிகளையே விரும்பி உண்ணுகின்றனர். அவ்வாறே தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான டிபன்களில் இட்லியும் ஒன்று. பெரும்பாலும் வீடுகளில் அரிசி, உளுந்து போன்றவற்றைச் சேர்த்து அரைத்த மாவை புளிக்க வைத்தே இட்லி தயார் செய்யப்படுகிறது. இட்லி தயார் செய்வதற்கு கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து இரண்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதில் வெள்ளை உளுந்து என்றால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளலாம். கருப்பு உளுந்தாக இருப்பின், அதன் தோலை நீக்கிவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பொருள்களைச் சேர்த்து தயார் செய்த மாவை புளிக்க வைக்கும் போது, அதன் மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சி நீக்கப்படுகிறது. இதனால், உடல் எளிதாக இதை செரிமானம் அடைகிறது. இட்லியானது ரவை, சேமியா மற்றும் ஜவ்வரிசி போன்ற பல்வேறு பொருள்களை வைத்தும் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறே, இட்லியை ஆரோக்கியமான உணவுப் பொருள்களான பாலக் கீரை மற்றும் பனீர் வைத்து தயார் செய்யப்படுகிறது. இதில் பாலக் பனீர் இட்லி தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் பாலக் பனீர் இட்லியைத் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Paneer Tandoori: வீடே மணக்கும் ருசியான தந்தூரி பனீர்! இப்படி செஞ்சா மிச்சமே இருக்காது
பாலக் பனீர் இட்லி தயார் செய்யும் முறை
தேவையானவை
- அரிசி – ஒரு கப்
- உளுந்து – கால் கப்
- சீரகம் - கால் ஸ்பூன்
- வெந்தயம் – கால் ஸ்பூன்
- பனீர் – அரை கப்
- பாலக் கீரை – அரை கப்
- இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
- பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
பாலக் பனீர் இட்லி தயாரிக்கும் முறை
- பாலக் பனீர் இட்லி தயார் செய்வதற்கு முதலில் இட்லி மாவைத் தயார் செய்து கொள்ள வேண்டும். அதற்கு அரிசி, உளுந்து போன்றவற்றை தனித்தனியே ஊறவைத்துக் கொள்ள வேண்டும்.
- இதில், உளுந்துடன் வெந்தயத்தையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளலாம்.
- பின்பு, ஊறவைத்த மாவை தனித்தனியாக மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரிலோ சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
- இவ்வாறு தனித்தனியாக, அரைத்த மாவை ஒன்று சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இந்த அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: ரெஸ்டாரண்ட் ஸ்டைல் அருமையான பனீர் பட்டர் மசாலா! இப்படி செய்யுங்க
- அதன் பின், கடாய் ஒன்றில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அது சூடான பிறகு சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கலாம்.
- பின், பொடியாக நறுக்கி வைத்த பாலக்கீரை, பச்சை மிளகாய், துருவிய பன்னீர், இஞ்சி போன்ற அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளலாம்.
- இதில் உப்பு சேர்த்து, அனைத்தும் வதங்கி திரண்டு வரும் வரை எடுத்துக்கொள்ளலாம். மேலும் இந்த கலவை தயாரான பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைத்துக் கொள்ளலாம்.
- பிறகு, இட்லி மாவை எடுத்து, இட்லி பாத்திரத்தில் சிறிது ஊற்றி, ஒரு ஸ்பூன் இந்த பாலக் பன்னீர் கலவை எடுத்து இட்லி மாவுக்கு உள்ளே வைக்க வேண்டும்.
- பின் இந்த மாவுக்கு மேல் சிறிது மாவை ஊற்றி மூடிவிட வேண்டும். இப்போது இதை வேக வைத்து எடுத்தால், சுவையான பாலக் பனீர் இட்லி தயாராகி விட்டது.
- பாலக் பனீர் இட்லியை தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவது அருமையான சுவையைத் தருகிறது.
பாலக் பனீர் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
பொதுவாக பாலக் பனீர் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது.
பாலக்கீரை: இதில் சேர்க்கப்படும் பாலக் கீரையில் இரும்பு, ஃபோலேட் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. இந்த இரும்புச்சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் உருவாவதற்கு இன்றியமையாததாகும். இதை வழக்கமாக உட்கொள்வது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது. கீரையில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் கே போன்றவை உள்ளது. இவை அனைத்துமே வலுவான எலும்புகளை பராமரிக்க முக்கியமானவையாகும். இந்த கீரையில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது திருப்தியை ஊக்குவித்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது.
பனீர்: இது புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த சிறந்த மூலமாகும். இது எலும்பு மற்றும் தசைகளை வலுவாக்க உதவுகிறது. இது தினசரி புரதத் தேவைகளைப் பூர்த்தி செய்து ஒட்டுமொத்த உடல் பராமரிப்பிற்கும் ஏதுவாக அமைகிறது. பனீரில் அதிகளவு கால்சியம் நிறைந்துள்ளதால், இது எலும்பு அடர்த்திக்கு உதவுகிறது. பனீரில் வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது நரம்பு செயல்பாடு மற்றும் டிஎன்ஏ உற்பத்திக்கு மிகவும் இன்றியமையாததாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Palak Keerai Benefits: பாலக் கீரையில் இவ்வளவு இருக்கா.? பாலக் கீரை கூட்டு செய்வோம் வாருங்கள்..
Image Source: Freepik