மட்டன் குழம்பையே ஓரம் கட்டும் பாலக் பன்னீர்… எப்படி செய்யணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
மட்டன் குழம்பையே ஓரம் கட்டும் பாலக் பன்னீர்… எப்படி செய்யணும் தெரியுமா?


தேவையான பொருட்கள்:

மசாலா விழுது அரைக்க

பாலக்கீரை - 1 கட்டு.
வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
சீரகம் - 1 தேக்கரண்டி.
பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது.
பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது.
பூண்டு - 4 பற்கள்.
இஞ்சி - 1 துண்டு நறுக்கியது.
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது.

பாலக் பன்னீர் செய்ய

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி.
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி.
காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி.
கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி.
சீரக தூள் - 1 தேக்கரண்டி.
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி.
தண்ணீர் - 1கப்.
உப்பு - 1 தேக்கரண்டி.
பன்னீர் - 200 கிராம்.

பாலக் பன்னீர் செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து பாலக் கீரையை சேர்த்து 3 நிமிடம் வேகவைத்து, தண்ணீரை வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயை சூடாக்கி, சிறிது வெண்ணெய் சேர்த்து, வெண்ணெய் உருகியதும், சீரகம் சேர்த்து கிண்டவும்.
  • அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும். பின்பு மசாலாவை ஆறவிடவும்.
  • மசாலா ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து, வேகவைத்த பாலக் கீரையையும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
  • அதே கடாயில் சிறிது வெண்ணெய் ஊற்றி சூடாக்கி, மிதமான தீயில், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கிண்டவும்.
  • இதை அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்த்து, மிக்ஸியில் சிறிது தண்ணீர் ஊற்றி அதையும் சேர்த்து கலந்து விடவும். பின்பு உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • பிறகு பன்னீர் துண்டுகளை சேர்த்து கடாயை மூடி, குறைத்த தீயில் 5 நிமிடம் வேகவைக்கவும்.
  • பிரெஷ் கிரீம் கொண்டு பாலக் பன்னீரை அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

பாலக் கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

  • கீரை சாப்பிடுவதால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும்.
  • இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
  • பாலக்கீரை சாப்பிடுவது லிபிடோவை மேம்படுத்துகிறது மற்றும் பாலியல் ஆசையின் பற்றாக்குறையை நீக்குகிறது.
  • இது விந்தணுக்களை அதிகரிக்க உதவுகிறது மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
  • கீரை சாப்பிடுவதால் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் அளவும் அதிகரிக்கிறது.
  • ஆண்களுக்கு ஏற்படும் குழந்தையின்மை பிரச்சனையையும் நீக்குகிறது.
  • கீரை சாப்பிடுவது இரத்த நாளங்களை திறக்கவும், ஆண்குறிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Black Foods: உடல் எடையை உடனே குறைக்க இந்த 5 கருப்பு உணவுகளை சாப்பிடுங்க!

Disclaimer