How to make curry leaves gravy In Tamil: நம்மில் பலருக்கு கறிவேப்பிலை பிடிக்காது. சாப்பிடும் போது உணவில் ஒரு கறிவேப்பிலை கிடந்தாள் கூட அதை ஓரமாக எடுத்து வைத்துவிடுவோம். ஆனால், கறிவேப்பிலை ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நம்மில் பலருக்கு தெரியும். குறிப்பாக, முடி வளர்ச்சிக்கு ஆகச்சிறந்தது. முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உங்கள் உணவில் கறிவேப்பிலையை சேர்ப்பது மிகவும் நல்லது. அந்த வகையில், அட்டகாசமான கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முக்கிய கட்டுரைகள்
காய்ந்த மிளகாய் - 7.
மல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்.
மிளகு - 1 ஸ்பூன்.
சீரகம் - 1 ஸ்பூன்.
கடுகு - ½ ஸ்பூன்.
வெந்தயம் - ½ ஸ்பூன்.
புளி - நெல்லிக்காய் அளவு.
வெல்லம் - 1 ஸ்பூன் (பொடித்தது).
உப்பு - தேவையான அளவு.
கறிவேப்பிலை - 1 கைப்பிடியளவு.
நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.
கடுகு - ¼ ஸ்பூன்.
பூண்டு - 1 கப்.
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்.
இந்த பதிவும் உதவலாம் : Ragi Halwa: ஒரு கப் ராகி மாவு இருந்தா போதும் நாவில் வைத்ததும் கரையும் அல்வா ரெடி!!
கறிவேப்பிலை குழம்பு செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், வரமிளகாய், புளி சேர்த்து வறுக்கவேண்டும்.
- இதையடுத்து, வரமல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இவை நன்றாக வாசம் வரும் வரை வதங்கியவுடன், இதை இறக்கி ஆறவைக்கவேண்டும்.
- வறுத்து ஆறவைத்த அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் பொடித்த வெல்லம், உப்பு, 2 கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், கடுகு சேர்த்து பொரிந்ததும், இடித்த பூண்டு சேர்த்து வதக்கவேண்டும்.
இந்த பதிவும் உதவலாம் : Benefits Of Tulsi Water: காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளர் துளசி வாட்டர் குடிப்பது இவ்வளவு நல்லதா?
- பின்னர், அரைத்த அனைத்தையும் அதில் சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு தேவைப்பட்டால் சேர்த்து நன்றாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவேண்டும்.
- நன்றாக கொதித்தவுடன் வாசம் வரும். அப்போது இறக்கிவிடவேண்டும்.
இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட சுவை அட்டகாசமாக இருக்கும். இதை இதை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகள்

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
கறிவேப்பிலை உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Tomato Rice Recipe: சுவையில் பிரியாணியை மிஞ்சும் தக்காளி சாதம்… செய்முறை இங்கே!
சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
கறிவேப்பிலை சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த மூலிகைக்கும் குறையாது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். சர்க்கரையை சமநிலையில் வைத்திருப்பது நமது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
செரிமான அமைப்பு பாதுகாப்பாக இருக்க வேண்டும்
கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் நீங்கும். இதில் காணப்படும் என்சைம்கள் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கும், இதன் காரணமாக அனைத்தும் எளிதில் ஜீரணமாகும்.
இந்த பதிவும் உதவலாம் : வீட்டிலேயே மணக்க மணக்க சுவையான ஆம்லா துவையல் ரெசிபியை இப்படி செஞ்சி பாருங்க!
முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவுகிறது
வைட்டமின்கள், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த கறிவேப்பிலை உங்கள் முடியின் வேர்களை வலுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும்.
Pic Courtesy: Freepik