வீட்டிலேயே மணக்க மணக்க சுவையான ஆம்லா துவையல் ரெசிபியை இப்படி செஞ்சி பாருங்க!

  • SHARE
  • FOLLOW
வீட்டிலேயே மணக்க மணக்க சுவையான ஆம்லா துவையல் ரெசிபியை இப்படி செஞ்சி பாருங்க!

இது தவிர நெல்லிக்காயைக் கொண்டு லேகியம் செய்து குழந்தைகளுக்குக் கொடுப்பது மிகவும் நன்மை பயக்கும். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இவை நரைமுடி பிரச்சனைக்கு பெரிதும் தீர்வு தருகிறது. இது தவிர நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இவை உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைத் தருகிறது. இதை தினமும் உட்கொள்வது செரிமான மண்டலத்திந் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Powder Benefits: நெல்லிக்காய் பொடியில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் இதோ!

நெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி

இந்த நெல்லிக்காயைத் தினமும் பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். அவ்வாறு வீட்டில் எளிமையாக நெல்லிக்காய் துவையல் செய்யும் முறை குறித்து காணலாம்.

தேவையானவை

  • நெல்லிக்காய் – 6
  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • வரமிளகாய் – 6
  • சீரகம் – அரை ஸ்பூன்
  • புளி – சிறிதளவு
  • இஞ்சி – ஒரு இன்ச்
  • தேங்காய் துருவல் – அரை கப்
  • உளுந்து – கால் கப்
  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
  • உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை

  • எண்ணெய் – கால் ஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • உளுந்து – கால் ஸ்பூன்
  • கடுகு – கால் ஸ்பூன்
  • வெல்லம் – அரை ஸ்பூன் (பொடித்தது)

இந்த பதிவும் உதவலாம்: Amla Benefits: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மை இருக்கா?

நெல்லிக்காய் துவையல் செய்முறை

  • முதலில் நெல்லிக்காயை வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை உரித்து விதைகளை நீக்கி நன்றாக ஆறவைக்கலாம்.
  • பிறகு கடாய் ஒன்றில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு உளுந்து சேர்க்கவேண்டும். அது பொன்னிறத்திற்கு மாறிய உடன் கறிவேப்பிலை, வரமிளகாய், இஞ்சி, சீரகம் மற்றும் புளி போன்றவற்றைச் சேர்த்து வதக்கவேண்டும்.
  • இவை வதங்கிய பிறகு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவேண்டும். இவை ஆறிய பிறகு அனைத்தையும் மிக்ஸிஜாரில் சேர்க்க வேண்டும். பின் இதனுடன் வேகவைத்த நெல்லிகாயையும் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • இவ்வாறு அரைக்கும் துவையல் பதத்திற்கு அதிகம் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவேண்டும். அரைக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு, கடுகு, உளுந்து சேர்த்து பொரிக்கும் போது உளுந்து சிவப்பு நிறத்தில் இருக்கும் பட்சத்தில் கறிவேப்பிலையை தூவவேண்டும்.
  • பின்னர் இதை அரைத்த துவையலில் சேர்த்து, சிறிது வெல்லம் சேர்த்து கிளறினால் சூப்பரான சுவையில் நெல்லிக்காய் துவையல் தயாரானது.
  • இந்த துவையலை சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவது சுவையுடன் கூடிய ஆரோக்கிய நன்மைகளையும் தருகிறது.

இவ்வாறு எளிமையான முறையில் சூப்பரான சுவையில் மணக்க மணக்க நெல்லிக்காய் துவையல் தயார் செய்யப்பட்டது.

இந்த பதிவும் உதவலாம்: Amla Salad: நெல்லிக்காய் சாலட் செய்முறையும், ஆரோக்கிய நன்மைகளும்!

Image Source: Freepik

Read Next

யாரெல்லாம் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது தெரியுமா.?

Disclaimer