How To Prepare Kozhukattai: விநாயகர் சதுர்த்தி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கொளுக்கட்டை தான். இது விநாயகருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இது இனிப்பு மற்றும் காரம் என இரண்டு வகைகளும் தயார் செய்யலாம். அதன் படி, இந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் வீட்டிலேயே எளிதான முறையில் கொளுக்கட்டை ரெசிபி தயார் செய்யலாம். இதில் எளிதாக, சுவையான முறையில் வீட்டில் தயாரிக்கப்படும் கொளுக்கட்டை ரெசிபி தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கவனத்துடன் உணவு உண்ணுதல் மூலம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?
கொழுக்கட்டை செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- பச்சைப்பயறு பருப்பு - 1 கப்
- வெல்லம் பவுடர் - 1 கப்
- தேங்காய் - 1 கப்
- இஞ்சி தூள் - 1/4 டீஸ்பூன்
- ஏலக்காய் - 1/4 டீஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- நெய் - 1/2 டீஸ்பூன்
- அரிசி மாவு - 1 கப்
- தண்ணீர் - 2 கப்
- கேரட் - 2
- உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை
வழக்கமாக இல்லாமல், சிறிது வித்தியாசமான முறையில் கொழுக்கட்டை தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
முதலில் ஒரு கப் பச்சை பயிரை 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்து, பின் அதை குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
கொழுக்கட்டை பூரணம் செய்யும் முறை
- இதில் பச்சைப்பயிர் நன்கு வெந்ததும், அதனை அடி கனமான பாத்திரம் ஒன்றில் மாற்ற வேண்டும்.
- பிறகு அதில் ஒரு கப் வெல்லம், ஒரு கப் தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்துக் கொள்ளலாம்.
- அதன் பின் அரை ஸ்பூன் ஏலக்காய் பவுடர், அரை ஸ்பூன் சுக்கு பொடி, அரைச் சிட்டிகை உப்பு போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
- இப்போது கொழுக்கட்டைக்கு தேவையான பூரணம் தயாரானது.
இந்த பதிவும் உதவலாம்: Moong Dal Masala Puri: குழந்தைகளுக்கு பிடித்த பாசிப்பருப்பு மசாலா பூரி செய்முறை!
- இப்போது கேரட் இரண்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸ் ஜார் ஒன்றில் போட வேண்டும்.
- பிறகு அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கேரட்டை நன்கு அரைத்து, அதில் உள்ள சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் இந்த சாற்றை பாத்திரம் ஒன்றில் ஊற்றி அடுப்பில் வைத்து, கால் ஸ்பூன் உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
- ஒரு கொதி வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, அதில் கொழுக்கட்டை மாவைச் சேர்த்து நன்கு கெட்டியாக வரும் வரை கிண்ட வேண்டும்.
- அதன் பிறகு கொழுக்கட்டை மாவு பதத்திற்கு வருமாறு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
- பிறகு இந்த மாவை உருண்டையாக பிடித்து கொழுக்கட்டை வடிவத்தில் மாற்றி, பூரணத்தை அதன் உள்ளே வைத்து பிறகு மாவை மூடி விடலாம்.
- இவை அனைத்தையும் செய்து, கொழுக்கட்டை உருண்டைகளை இட்லி பாத்திரத்தில் 10 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
- இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான கொழுக்கட்டை தயாரானது.

இந்த கொழுக்கட்டை உட்கொள்வது உண்மையில் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த பயன்களைத் தருகிறது. இதில் சேர்க்கப்படும் பச்சைப்பயறு, வெல்லம், கேரட் போன்றவை உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப்பொருள்களாகும். இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகருக்கு படைத்து அனைவரும் உட்கொள்வோம். இது வித்தியாசமான சுவையைக் கொண்டதாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Ulunthu Milk: உளுத்தங்கஞ்சி குடிச்சி போர் அடிச்சிடுச்சா? உளுத்தம்பருப்பு பால் இப்படி செஞ்சி குடிங்க!
Image Source: Freepik