How to prepare peanut rice recipe at home: சிற்றுண்டி என்றால் யார்தான் விரும்ப மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே சிற்றுண்டிகள் மீதான நாட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. ஆனால் நாம் சாப்பிடும் சிற்றுண்டிகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பதை சிந்தித்ததுண்டா? ஆம். உண்மையில் சிற்றுண்டிகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில ஆரோக்கியமானதாக இருக்கலாம். சில சிற்றுண்டி வகைகள் ஆரோக்கியமற்றதாகக் காணப்படலாம்.
அதன் படி, வேர்க்கடலை நல்ல சுவையான சிற்றுண்டியாக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தரக்கூடியதாகும். ஆனால் வேர்க்கடலையை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவாகவும் எடுத்துக் கொள்ளலம். இதில் வேர்க்கடலையைக் கொண்டு வேர்க்கடலை சாதம் தயார் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்யும் முறை குறித்து காணலாம்.
வேர்க்கடலை ஊட்டச்சத்துக்கள்
வேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்றே கூறலாம். இதில் அளவுக்கு அதிகமான புரதச்சத்து நிறைந்துள்ளது. வேர்க்கடலையில் 13 வகையான வைட்டமின்களும், 26 தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Benefits of Eating Nuts Everyday: தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?
வேர்க்கடலை சாதம் தயார் செய்யும் முறை
தேவையானவை
- உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
- வர மிளகாய் - 5 முதல் 7
- எள் - 2 டீஸ்பூன்
- வேர்க்கடலை - அரை கப்
- கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
- துருவிய தேங்காய் - அரை மூடி
சாதம் செய்யத் தேவையான பொருள்கள்
- கடலை எண்ணெய் - 2 டீஸ்பூன்
- கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
- வர மிளகாய் - 2
- நெய் - 4 டேபிள்ஸ்பூன்
- பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
- அரைத்த வேர்க்கடலைப் பொடி
- வேகவைத்த சாதம்
- உப்பு - தேவையான அளவு
வேர்க்கடலை சாதம் தயார் செய்யும் முறை
- முதலில் அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து, ஊற வைக்க வேண்டும். இப்போது ஊறவைத்த அரிசியை சட்டியில் சாதமாக வடித்து எடுத்துக் கொள்ளலாம்.
- சாதம் சற்று உதிரியாக இருந்தால் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
- பிறகு வேர்க்கடலை பொடி செய்ய முதலில் வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றாமல் இந்த வேர்க்கடலையை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதே கடாயில் வர மிளகாய், மிளகு, உளுத்தம் பருப்பு, எள் போன்றவற்றைச் சேர்த்து வறுக்க வேண்டும்.
- பின் இதில் தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளலாம். இவை அனைத்தையும் நன்கு வறுத்தெடுத்த பிறகு, ஆற வைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இந்த பொடி கொரகொரப்பாக இருக்கும் வேளையில் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையும் சேர்த்து இதில் அரைக்க வேண்டும். இப்போது வேர்க்கடலை சாதத்திற்கான பொடி தயாராகிவிட்டது.
இந்த பதிவும் உதவலாம்: இனி ஈஸியான முறையில் கடலை மிட்டாய் செய்யலாம்..
- இந்நிலையில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
- பின்பு அதில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு, வற மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.
- மேலும், நாம் தனியாக எடுத்து வைத்திருக்கும் சிறிதளவு வேர்க்கடலையையும் அதில் போடலாம்.
- இவை அனைத்தையும் நன்றாக கிளறி, நாம் வேகவைத்த சாதத்தை சேர்க்க வேண்டும். இதில் தேவையான அளவு நெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விடலாம்.
- பின்னர் நாம் அரைத்து வைத்த வேர்க்கடலை பொடியையும் இதில் சேர்த்து நன்றாக கிளறி விடலாம். இப்போது சுவையான வேர்க்கடலை சாதம் தயாராகி விட்டது.
வேர்க்கடலை சாப்பிடுவதன் நன்மைகள்
வேர்க்கடலையில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
- வேர்க்கடலையில் போதுமான அளவு புரதம் நிறைந்திருப்பதால் இதை போதுமான அளவு உட்கொள்வதன் மூலம் எடை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தலாம்.
- வேர்க்கடலையில் உள்ள மக்னீசியம், தாமிரம் மற்றும் அதிக அளவு நிறைவுறா கொழுப்புகள் போன்றவை இதய ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இது கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களைத் தடுக்கிறது.
- வேர்க்கடலையில் குறைந்த அளவிலான கிளைசெமிக் குறியீடு உள்ளது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல், நீரிழிவு நோய் அபாயத்தைக் குறைக்க வழிவகுக்கிறது.
- இதில் உள்ள ஆரோக்கியமான நார்ச்சத்துக்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இது மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Peanut Ladoo: வெறும் 3 பொருள் இருந்தால் போதும் சுவையான வேர்க்கடலை லட்டு செய்யலாம்!