How to make sabudana khichdi for fast: மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, பக்தர்கள் பலரும் உண்ணாவிரதத்தை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் அனைத்து இந்திய வீடுகளிலும் உண்ணாவிரதம் மற்றும் பண்டிகைகளின் போது சபுதானா கிச்சடி ஒரு ஸ்பெஷல் ரெசிபியாக தயார் செய்யப்படுகிறது. இது சுவையைத் தருவதுடன், மிகுந்த ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியதாகும். ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்திருப்பதால், இது நல்ல ஆற்றலுடன், செரிமானம் அடைய எளிதான வழியாகவும் அமைகிறது.
ஜவ்வரிசி கிச்சடியானது காய்கறிகள் மற்றும் வேர்க்கடலையுடன் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு விருப்பமாகவும் அமைகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கிச்சடியை உட்கொள்வது மிகுந்த நன்மை பயக்கும். மகாசிவராத்திரியை முன்னிட்டு, பக்தர்கள் உண்ணாவிரதம் இருந்து ஜவ்வரிசி கிச்சடியை பிரசாதமாகத் தயாரிக்கின்றனர். இதில் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஜவ்வரிசி கிச்சடி தயார் செய்வதற்குத் தேவையான பொருள்கள் மற்றும் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Javvarisi Benefits: ஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? - உண்மையான ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன?
ஜவ்வரிசி கிச்சடி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 2 கப்
உருளைக் கிழங்கு - 2
தேங்காய் துருவல் - 4 ஸ்பூன்
வேர்க்கடலை - 1/2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
நெய் - 5 ஸ்பூன்
கொத்தமல்லி - 1 கொத்து
எலுமிச்சை சாறு - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஜவ்வரிசி கிச்சடி செய்முறை (How to make Sabudana khichdi)
- முதலில் பாத்திரம் ஒன்றில் ஜவ்வரிசியை எடுத்துக் கொண்டு, அதில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து 4-5 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
- இதனிடையில், உருளைக்கிழங்கை தோல் நீக்கி சுத்தம் செய்து பின் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதே போல, பச்சை மிளகாயையும் நறுக்கிக்கொள்ளலாம்.
- பிறகு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்துக் கொண்டு, அதில் வேர்க்கடலையைச் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். பின், இதை தனி ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து, மாற்றி தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- அதன் பின்னர், பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் நன்கு உருகியதும் சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்க வேண்டும்.
- இதில் உருளைக்கிழங்கை நிறம் மாறும் நிலையில், ஊறவைத்த ஜவ்வரிசி, வறுத்த வேர்கடலை மற்றும் தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து 7-8 நிமிடங்களுக்கு நன்கு வதக்க வேண்டும்.
- இந்தக் கலவையில் போதுமான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும். இல்லையெனில் ஜவ்வரிசி அடிபிடித்து விடலாம்.
- இப்போது ஜவ்வரிசி நன்கு வெந்த பிறகு, சேர்மங்கள் திடமான நிலையில் அதாவது பதத்திற்கு மாறும் நிலையில் அதில் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ஜவ்வரிசி கிச்சடி தயாராகி விட்டது.
இந்த பதிவும் உதவலாம்: Javvarisi Idli: ஒரு கப் ஜவ்வரிசி இருந்தால் போதும் பஞ்சு போல இட்லி செய்யலாம்!
ஜவ்வரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
ஜவ்வரிசியில் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் பி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளது. இதை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது.
செரிமான ஆரோக்கியத்திற்கு
இது செரிமானம் செய்ய எளிதான ஒன்றாகும். இதனை விரத காலங்களில் உட்கொள்வது செரிமான கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது. இது அஜீரணம் மற்றும் மலச்சிக்கலுக்கு உதவக் கூடியதாகும்.
குளிரூட்டும் பண்புகள்
ஆயுர்வேதத்தில் ஜவ்வரிசி குளிர்ச்சித் தன்மையைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது உடல் சூட்டைக் குறைக்க உதவும் இயற்கையான தீர்வாகக் கருதப்படுகிறது.
பசையமற்றது
ஜவ்வரிசி இயற்கையாகவே பசையம் இல்லாததாகும். எனவே இது பசையம் உணர்திறன் அல்லது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு சிறந்த பாதுகாப்பான தேர்வாக அமைகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
ஆய்வக சோதனை ஒன்றில் ஜவ்வரிசி உட்கொள்வது உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கலாம்.
ஆற்றல் மேம்பாட்டிற்கு
ஜவ்வரிசியில் அதிக கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு விரைவான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. எனவே இதை உடற்பயிற்சிக்கு முந்தைய சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வது சிறந்த தேர்வாகும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: சிவராத்திரி விரதம் இருக்கீங்களா? நீங்க சாப்பிடக்கூடிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்னு தெரிஞ்சிக்கோங்க
Image Source: Freepik