$
பார்ப்பதற்கு முத்துக்கள் போல் பளபளளவென இருக்கும் ஜவ்வரிசியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உண்டு. மிக எளிதாக ஜீரணமாகக்கூடிய உணவுகளில் ஒன்று. இந்திய சமையலறைகளில் எளிதாக காணக்கூடிய இதை வைத்து, பாயசம், கிச்சிடி, வடைகள் போன்ற உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். சாதத்திற்கு மாற்றாகவும் ஜவ்வரிசியை எடுத்துக்கொள்ளலாம்.
ஜவ்வரிசியில் புரதம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனுடன், கலோரிகளின் அளவும் மிகக் குறைவு. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.
இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பீர்கள். உடலுக்குத் தேவையான அளவு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. வாயு பிரச்சனைகள் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளை உடனடியாக தடுக்கிறது.

மேலும் இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இவற்றில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி இருப்பதால், கர்ப்பிணிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவற்றில் உள்ள வைட்டமின் கே மூளைக்கு நல்லது.
ஜவ்வரிசி சாப்பிடுவதால் இந்த பிரச்சனைகள் வராது:
ஜவ்வரிசி சாப்பிடும் போது நமது இதயம் வால்வுகளில் அழுத்தம் ஏற்படாமல் இருக்க அதில் உள்ள சத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் சோம்பலாக இருப்பவர்கள், ஜவ்வரிசியை உட்கொண்டால், உடனடி ஆற்றல் கிடைக்கும். காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் ஜவ்வரிசி சாதத்தை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
எடை குறைப்பிற்கு ஏற்றதா?

சாதத்தை சாப்பிடுவதால் உடல் எடை கூடும். இதில் நல்ல அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன, இது எடை அதிகரிக்க உதவுகிறது. உடல் மெலிதாக இருந்தால், கண்டிப்பாக உங்கள் உணவில் ஜவ்வரிசியை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உடலை கட்டுக்கோப்பாகவும், திடகாத்திரமாகவும் மாற்ற உதவும்.
எலும்புகளை வலுவாக்கும்:

ஜவ்வரிசி சாதத்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொண்டால் எலும்புகள் வலுவடையும். இதில் நல்ல அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமையை ஊக்குவிக்கிறது. இது தவிர, இரும்புச்சத்தும் உள்ளது. இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்கிறது.
இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துகிறது:

உயர் இரத்த அழுத்த பிரச்சனையை நீங்கள் சமாளிக்க விரும்பினால், ஜவ்வரிசி சாப்பிடுவதை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் நார்ச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கின்றன.
மூளைக்கு நல்லது:
ஜவ்வரிசி மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதில் உள்ள ஃபோலேட் மூளை பிரச்சனைகளை தடுக்கிறது.
Image Source:Freepik