தைராய்டு நோயாளிகள் ஜவ்வரிசி சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?

Can thyroid patients safely eat sabudana: தைராய்டு நோயாளிகளுக்கான உணவுமுறையைப் பொறுத்த வரை பல வகையான குழப்பங்கள் எழலாம். அதில் ஒன்றாக ஜவ்வரிசி சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து விரிவாக இந்த பதிவில் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
தைராய்டு நோயாளிகள் ஜவ்வரிசி சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?


Is sabudana beneficial or harmful for thyroid health: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக தைராய்டு நோயும் அடங்குகிறது. ஆம். உண்மையில் இன்று ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் வாழ்க்கை முறையையும் பாதிக்கும் ஒரு கடுமையான பிரச்சனையாக தைராய்டு மாறிவிட்டது. தைராய்டு சுரப்பியானது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. ஆனால் இந்த தைராய்டு உடலில் ஏதேனும் காரணத்தால் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உருவாகும் போது, அது உடலுக்கு பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இந்த சூழ்நிலையில், தைராய்டு நோயாளிகள் அவர்களின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உணவுமுறையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பல்வேறு உணவுப் பொருள்கள் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பாதிக்கிறது. சில நேரங்களில் தைராய்டு நோயாளிகள் நிச்சயமாக ஜவ்வரிசி சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. இதில் தைராய்டில் ஜவ்வரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பதைக் காணலாம்.

ஜவ்வரிசி (சபுதானா) என்றால் என்ன?

இது மரவள்ளிக்கிழங்கு என்ற தாவரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் மரவள்ளிக்கிழங்கு ஸ்டார்ச்சிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் தானியங்கள் சிறிய வெள்ளை முத்துக்கள் போல காணப்படும். முக்கியமாக, இது விரதம் இருக்கும் போது எடுத்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இதில் பசையம் இல்லை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

இந்த பதிவும் உதவலாம்: Javvarisi kichadi recipe: மஹா சிவராத்திரி ஸ்பெஷல் ஜவ்வரிசி கிச்சடி ரெசிபி! அருமையான சுவையில் இப்படி செய்யுங்க

ஜவ்வரிசியின் ஊட்டச்சத்து மதிப்பு

100 கிராம் ஜவ்வரிசியில் கீழ்க்கண்ட ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

  • கலோரிகள்: 350-360
  • கார்போஹைட்ரேட்: 85-88 கிராம்
  • புரதம்: 0.2 கிராம்
  • ஆரோக்கியமான கொழுப்பு: 0.1 கிராம்
  • நார்ச்சத்து: 1 கிராம்
  • பொட்டாசியம்: 11 மி.கி
  • கால்சியம்: சுமார் 20 முதல் 22 மில்லிகிராம்

தைராய்டுக்கு ஜவ்வரிசி சாப்பிடுவது பாதுகாப்பானதா?

தைராய்டு நோயாளிகள் ஜவ்வரிசியை குறைந்த அளவிலும் சரியான முறையிலும் சாப்பிடலாம் என டெல்லியின் மூத்த மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் உணவியல் நிபுணர் ரக்ஷிதா மெஹ்ரா அவர்கள் கூறியுள்ளார்.

தைராய்டில் ஜவ்வரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

செரிமான ஆரோக்கியத்திற்கு

தைராய்டு நோயாளிகளுக்கு செரிமானம் பலவீனமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சபுதானாவை ஊறவைத்து சமைத்த பிறகு அது லேசாகவும் எளிதில் ஜீரணமாகவும் மாறுகிறது. இதை கிச்சடி, கீர் அல்லது உப்மா வடிவில் சேர்த்துக் கொள்ளலாம். இது செரிமான நரம்புகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. மேலும் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

உடனடி ஆற்றலை வழங்க

தைராய்டு நோயாளிகளுக்கு, குறிப்பாக ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்கள் சோர்வு, சோம்பல் மற்றும் மெதுவான வளர்சிதை மாற்றம் ஏற்படுவது பொதுவானதாகும். இந்நிலையில் ஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

பசையம் இல்லாத விருப்பம்

தைராய்டுடன் சேர்ந்து பசையம் உணர்திறன் கொண்டவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இது பசையம் இல்லாத தானியம் என்பதால், இதை உட்கொள்வது வயிற்றில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது.

இந்த பதிவும் உதவலாம்: Food For Thyroid: மருந்து மாத்திரை இல்லாம தைராய்டை கட்டுப்படுத்த இவற்றை சாப்பிடுங்க!

உடலை குளிர்விக்க

ஆயுர்வேதத்தில், ஜவ்வரிசியின் விளைவு குளிர்ச்சியானது எனக் கூறப்படுகிறது. அதன் படி, தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் வீக்கம் மற்றும் வெப்பப் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்நிலையில், ஜவ்வரிசி சாப்பிடுவது உடலுக்கு உட்புற குளிர்ச்சியைத் தருகிறது.

தைராய்டு இருக்கும் போது ஜவ்வரிசி சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

  • சவ்வரிசியில் அதிகம் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாக உணவியல் நிபுணர் ரக்ஷிதா மெஹ்ரா கூறுகிறார். இந்நிலையில், அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகள் எடை அதிகரிக்க வழிவகுக்குகிறது.
  • ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கும். இந்நிலையில், ஜவ்வரிசி சாப்பிடுவது எடை அதிகரிப்பு பிரச்சனையை ஏற்படுத்தும்.
  • தைராய்டு தைராய்டின் செயல்பாட்டிற்கு அயோடின், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவை அவசியமாகும். ஜவ்வரிசியில் இந்த ஊட்டச்சத்துக்கள் கிட்டத்தட்ட இல்லை. இதைச் சேர்ப்பது தைராய்டு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
  • இதில் கிளைசெமிக் குறியீடு மிக அதிகமாக இருப்பதால், தைராய்டு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

தைராய்டில் ஜவ்வரிசியை சாப்பிடும் முறை

தைராய்டு இருக்கும் போது ஜவ்வரிசி சாப்பிட விரும்புபவர்கள் பின்வரும் முறைகளில் சேர்க்கலாம்.

  • சாப்பிடுவதற்கு முன், ஜவ்வரிசியை குறைந்தது 6-8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதனால் அது எளிதில் செரிமானம் அடையும்.
  • சபுதானா கிச்டி தயார் செய்ய முட்டைக்கோஸ், கேரட், குடைமிளகாய் மற்றும் வேர்க்கடலை போன்ற காய்கறிகளைச் சேர்க்கலாம். இதனால் அதில் புரதம் மற்றும் நார்ச்சத்து சமநிலையில் இருக்கும்.
  • சபுதானா குளிர்ச்சியான தன்மையைக் கொண்டதால், இதை மிகவும் காரமான மசாலாப் பொருட்களுடன் கலந்து சமைக்க வேண்டாம். இதை லேசான உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து மட்டும் சமைக்கலாம்.
  • தினமும் ஜவ்வரிசி சாப்பிடுவது யாருக்கும் நன்மை பயக்காது. வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகளவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.

முடிவுரை

தைராய்டு நோயாளிகளுக்கு சபுதானா முற்றிலும் தடைசெய்யப்படவில்லை. எனினும், இதை எச்சரிக்கையுடனும் குறைந்த அளவிலும் உட்கொள்வது நல்லது. மேலும் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருப்பின், வாரத்திற்கு 1-2 முறை ஜவ்வரிசியை சாப்பிடலாம். இதை நார்ச்சத்து மற்றும் புரதத்துடன் சமநிலைப்படுத்த வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு நோயாளிகள் உருளைக்கிழங்கு சாப்பிடலாமா? இதன் தீமைகள் இங்கே!

Image Source: Freepik

Read Next

முருங்கை இலையை சமையலில் இந்த வழிகளில் பயன்படுத்துங்கள்.. பல நன்மைகள் கிடைக்கும்..

Disclaimer