தைராய்டு உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிடலாமா? மருத்துவர் தரும் டிப்ஸ் இதோ

Can thyroid patients eat chia seeds: இன்று பலரும் தைராய்டு பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இந்நிலையில், மக்கள் பெரும்பாலும் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இது போன்ற சூழ்நிலையில், தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், சியா விதைகளை சாப்பிடலாமா என்ற கேள்வி எழுகிறது? இதில் தைராய்டு உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிடலாமா என்பது குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
தைராய்டு உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிடலாமா? மருத்துவர் தரும் டிப்ஸ் இதோ


Can thyroid person eat chia seeds: இன்றைய காலகட்டத்தில் தைராய்டு பிரச்சனையால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மக்கள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும் இது உடல் செயல்பாடுகளை பாதிக்கும் நிலை ஏற்படலாம். இந்நிலையில், தைராய்டு ஹார்மோன்களை சமநிலைப்படுத்த பல நேரங்களில் மக்கள் மருந்துகளை நாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனுடன், ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவதும் அவசியமாகக் கருதப்படுகிறது.

உணவுமுறையில் காய்கறிகள், பழங்கள் மட்டுமல்லாமல் ஆரோக்கியமான விதைகள் மற்றும் கொட்டைகளையும் சேர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிலையில் தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சியா விதைகளைச் சாப்பிடலாமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. இது போன்ற சூழ்நிலையில், யோகா, இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணர், மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஜெய்ப்பூர், பாபுநகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையின் மூத்த மருத்துவருமான டாக்டர் கிரண் குப்தா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு இருக்கும்போது நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் இங்கே..

தைராய்டு நோய் உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிடலாமா?

மருத்துவர் கிரண் குப்தாவின் கூற்றுப்படி, தைராய்டு உள்ளவர்கள் சியா விதைகளை சாப்பிடலாம். ஏனெனில், இதை உட்கொள்வது உடலில் உள்ள தைராய்டு ஹார்மோன்களின் அளவை சமநிலைப்படுத்தவும், அதன் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுவதாகக் கூறியுள்ளார். மேலும், இது பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதே சமயம், சியா விதைகளை ஊறவைத்தும், குறைந்த அளவிலும் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

சியா விதைகள் புரதம், கால்சியம், நார்ச்சத்து, துத்தநாகம், இரும்பு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதனுடன், சியா விதைகளில் நல்ல அளவிலான ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் காணப்படுகின்றன. இவை ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை வழங்குகிறது.

தைராய்டில் சியா விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தைராய்டை சமநிலைப்படுத்த

சியா விதைகளில் காணப்படக்கூடிய ஊட்டச்சத்துக்கள் தைராய்டு ஹார்மோனை சமன்படுத்துகிறது. இது தைராய்டுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவது உடலில் தைராய்டை சமநிலைப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் மற்றும் சோர்வு, பலவீனம், வீக்கம் மற்றும் அதனால் ஏற்படும் மற்ற பிற பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் தருகிறது.

செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க

சியா விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்நிலையில், தைராய்டு காரணமாக ஏற்படும் செல் சேதத்தைத் தடுக்கவும், செல்களை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவும் இவை உதவுகின்றன.

வீக்கத்தைக் குறைக்க

பெரும்பாலும் தைராய்டு பிரச்சனையின் காரணமாக உடலில் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இது போன்ற சூழ்நிலையில், சியா விதைகளை உட்கொள்வது தைராய்டு காரணமாக உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது உடலுக்கு ஊட்டமளிக்க உதவுகிறது. இதன் மூலம் தைராய்டு பிரச்சனைக்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுகள் தைராய்டு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்

தைராய்டு உள்ளவர்கள் சியா விதைகளை எவ்வாறு உட்கொள்ளலாம்?

தைராய்டு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற சியா விதைகளை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம்.

  • இரவு முழுவதும் சியா விதைகளை ஊறவைத்த பிறகு சாப்பிடுவது உடலுக்கு நன்மை பயக்கும். இதை தண்ணீர் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்.
  • இது தவிர, ஊறவைத்த சியா விதைகளை சூப் அல்லது ஸ்மூத்தியில் சேர்த்து சியா புட்டிங் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இவையும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
  • மேலும், சியா விதைகளைக் குறைந்த அளவில் சாப்பிட வேண்டும்.
  • இதை சாப்பிடும் முன்னதாக மருத்துவரை அணுக வேண்டும்.
  • சியா விதைகளை ஊறவைத்த பின்னரே சாப்பிட வேண்டும். இல்லையெனில், இவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

முடிவு

சியா விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இவை தைராய்டு அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. மேலும், இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. சியா விதைகளுக்கு உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருப்பின், அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதே சமயம், பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், தைராய்டின் ஏதேனும் அறிகுறிகளை கவனித்தாலோ அல்லது அது தொடர்பான ஏதேனும் பிரச்சனையை உணர்ந்தாலோ அல்லது சியா விதைகளால் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ அதைப் புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: தைராய்டு இருக்கும் போது என்ன செய்யனும்? என்ன செய்யக் கூடாது? எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க!

Image Source: Freepik

Read Next

தர்பூசணி விதைகள தூக்கி வீசாதீங்க... இப்படி சாப்பிட்டா இரண்டு மடங்கு நன்மைகள் கிடைக்கும்...!

Disclaimer