Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Expert

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தயிர் சாப்பிடுவது நல்லதா? நிபுணர் தரும் விளக்கம்

இன்று பலரும் சைனஸ் பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இது போன்ற சூழ்நிலையில், சில உணவுகளைத் தவிர்க்க மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு, இந்த நேரத்தில் தயிர் ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ள தகவல்களைக் காணலாம்.

Should you eat curd if you have sinus problems: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் சைனஸ் சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. இன்னும் பலர் மூச்சுக்குழாய் அழற்சி பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இது அடிக்கடி சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, சளி அடைப்பு மற்றும் மூக்கில் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் வைரஸ்கள், ஒவ்வாமை அல்லது பாக்டீரியா போன்றவை இருக்கலாம்.

எனவே, மக்கள் பெரும்பாலும் குளிர்ந்த உணவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவர்கள் சரியான உணவுமுறையைக் கையாள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், ஒரு கேள்வி அனைவருக்கும் எழுகிறது. அதாவது, சைனஸ் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் தயிர் சாப்பிடலாமா? என்பதாகும். இது குறித்து, ஜெய்ப்பூர், ஏஞ்சல்கேர்-ஏ ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையம், உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர், இயக்குநரான அர்ச்சனா ஜெயின் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: சைனஸ் பிரச்னை பாடாபடுத்துதா.? இத சிம்பிளா ஹாண்டில் பண்ணலாம்.. வீட்டுல இத மட்டும் பண்ணுங்க..

சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தயிர் சாப்பிடலாமா?

உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் கூற்றுப்படி, தயிரில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆனால் சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தயிர் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். சைனஸ் பிரச்சனைபிரச்சனையும் அதன் விளைவுகளும் அதிகரிக்கக்கூடும்.

சைனஸில் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

சைனஸ் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள், ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், சில உணவுகளை கட்டுப்படுத்துவதும் அவசியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இது போன்ற சில உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் சைனஸ் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது.

அதிகரித்த வீக்கம்

தயிரை அதிகமாக உட்கொள்வதன் காரணமாக சைனஸ் நெரிசல், வீக்கம் அதிகரிப்பு மற்றும் பிற சைனஸ் அறிகுறிகளும் ஏற்படக்கூடும். எனவே, சைனஸ் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் குறைந்த அளவிலான தயிரையே உட்கொள்ள வேண்டும்.

சளி குவிவது

சைனஸ் பிரச்சனையைக் கொண்டிருக்கும் போது தயிர் உட்கொள்ளும் நபர்கள் நியாசினை அதிகமாக உட்கொள்ளக்கூடும். இது சளியின் தடிமனையும் குவிப்பையும் அதிகரிக்கிறது. மேலும் இது மூக்கடைப்பு, சுவாசிப்பதில் சிரமம், சளி தக்கவைத்தல் மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

முடிவுரை

எனவே, சைனஸ் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் தயிரைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் சில நேரங்களில் குறைந்த அளவிலான தயிரை சாப்பிடலாம். மேலும், சைனஸ் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தயிரைத் தவிர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், இதை அதிகமாக உட்கொள்வதால் சைனஸ் அறிகுறிகளான தடித்தல் அல்லது சளி குவிதல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இது உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே, சைனஸ் பிரச்சனைகளால் ஏற்படும் அறிகுறிகள் கணிசமாக அதிகரித்தால், அவற்றைப் புறக்கணிக்காமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Runny Nose : மூக்குல சளி நிக்காம ஒழுகுதா? - இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க, பட்டுன்னு நிக்கும்...!

Image Source: Freepik

Read Next

சுகர் லெவல் அதிகரிக்காம இருக்க உணவுக்கு முன் சூப் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 02, 2025 23:25 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content