Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Expert

சுகர் லெவல் அதிகரிக்காம இருக்க உணவுக்கு முன் சூப் குடிக்கலாமா? மருத்துவர் தரும் விளக்கம்

இன்று நீரிழிவு நோய் மிகவும் பொதுவான நோயாக மாறிவிட்டது. பொதுவாக, உணவு உண்ட பிறகு நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அதிகரிக்கக் கூடும். இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று அடிக்கடி யோசிக்கின்றனர். இதில் உணவுக்கு முன் சூப் குடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுமா என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் உடல் எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் இன்னும் பல வகையான பிரச்சனைகள் எழுகின்றன. இதில் நீரிழிவு நோயானது இன்றைய காலகட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் ஒரு பிரச்சனையாகும். பலர் சாப்பிட்ட பிறகு திடீரென இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், அதை கட்டுப்படுத்துவது கடினமாக நினைக்கின்றனர்.

இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: உணவுக்கு முன் சூப் குடிப்பதால் இந்த இரத்த சர்க்கரை அளவு குறையுமா? மேலும் இது உண்மையில் உடலுக்கு நன்மை பயக்குமா? போன்ற கேள்விகள் ஆகும். பொதுவாக, சூப் குடிப்பது பெரும்பாலும் ஆரோக்கியமான உணவாகவும் ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகிறது. ஆனால் பலர் உணவுக்கு முன் அதை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை உணர்வதில்லை. மேலும், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளிலிருந்து தயாரிக்கப்படும் சூப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் தண்ணீர் நிறைந்துள்ளது.

இதில், ஜெய்ப்பூரில் உள்ள ஏஞ்சல்கேர் - ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையத்தின் இயக்குனர், உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் அவர்கள் உணவுக்கு முன் சூப் குடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் எடை குறைக்கும் போது செய்யக்கூடாத  பெரிய தவறுகள்.. நிபுணர் எச்சரிக்கை.!

உணவுக்கு முன் சூப் குடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுமா?

பொதுவாக, உணவுக்கு முன் சூப் குடிப்பது கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது என்று உணவியல் நிபுணரும் ஊட்டச்சத்து நிபுணருமான அர்ச்சனா ஜெயின் கூறுகிறார். ஏனெனில், காய்கறி மற்றும் பருப்பு சூப்களில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உணவை மெதுவாக ஜீரணிக்க உதவுகிறது மற்றும் சர்க்கரை அளவு விரைவாக அதிகரிப்பதைத் தடுக்கிறது.

சூப் என்பது ஒரு திரவ உணவாகும். மேலும், இது வயிறு நிரம்பியதாக உணர உதவுகிறது. இதன் மூலம் அதிகளவு உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து, உடல் சர்க்கரையை மெதுவாக உறிஞ்ச உதவுகிறது. உணவுக்கு முன் சூப் உட்கொள்ளும்போது, அது வயிற்றை பாதியிலேயே நிரப்பி, உணவுடன் தொடர்புடைய சர்க்கரை அளவு விரைவாக அதிகரிப்பதை மெதுவாக்குகிறது. எனவே, சாப்பிட்ட பிறகு வயிறு நிரம்புவதைத் தடுக்க இது உதவுகிறது. மேலும், உடலில் இன்சுலின் நிலை சமநிலையில் உள்ளது மற்றும் இரத்த சர்க்கரை திடீரென அதிகரிப்பதில்லை. எனவே இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருக்க, உணவுக்கு முன் சூப் அருந்துவது சிறந்த தேர்வாக அமைகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த சூப் சிறந்தது?

  • நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த சோடியம் மற்றும் அதிக நார்ச்சத்துள்ள சூப்கள் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.
  • கேரட், பெல் பெப்பர், தக்காளி மற்றும் கீரை சூப் - இவை சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.
  • டாலியா அல்லது பாசிப்பருப்பு சூப் - இந்த வகை சூப்பில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்ப உதவுகிறது.
  • சூப் செய்யும் போது, அதில் சேர்க்கப்படும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். உணவு சீராக இருக்கும் போது, இரத்த அழுத்தமும் சீராக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த உணவுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு விஷம்! – மருத்துவர் கார்த்திகேயன் எச்சரிக்கை

உணவுக்கு முன் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

  • சூப் காரணமாக, உணவு மெதுவாக ஜீரணமாகி, இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.
  • சூப் குடிப்பதால் முக்கிய உணவுகளின் அளவு குறைகிறது. இதனால் கலோரிகள் குறைகின்றன.
  • லேசான சூப் செரிமானத்தை எளிதாக்குகிறது மற்றும் வயிற்றில் கனத்தை அதிகரிக்காமலும் வைத்திருக்கிறது.
  • காய்கறி மற்றும் பருப்பு சூப்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன, அவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

முடிவுரை

உணவுக்கு முன் சூப் குடிப்பது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், பசியைக் குறைத்து செரிமானத்தை எளிதாக்கவும் உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவர்கள் இதை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளல வேண்டும். மேலும், எளிமையாகச் சொன்னால், சூப் ஒரு சுவையான மற்றும் சூடான பானமாக மட்டுமல்லாமல், இரத்த சர்க்கரையை நிர்வகிக்கவும், ஆரோக்கியமான உணவைப் பராமரிக்கவும் ஒரு சிறந்த வழியாகவும் கருதப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Soups for diabetes: எகிறும் சுகர் லெவல் மடமடனு குறைய இந்த சூப்களை எல்லாம் உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

வார இறுதியில் குப்பை உணவு அதிகமாக சாப்பிட்டீர்களா? உங்கள் உடலை சுத்தப்படுத்த 5 எளிய வழிகள் – உணவியல் நிபுணர் ஆலோசனை!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 02, 2025 23:20 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content