மறந்தும் இந்த உணவுகளை சியா விதைகளுடன் சாப்பிட்ராதீங்க!

  • SHARE
  • FOLLOW
மறந்தும் இந்த உணவுகளை சியா விதைகளுடன் சாப்பிட்ராதீங்க!

மேலும் சியா விதைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை வயதான மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களுக்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனினும், சியா விதைகளை உட்கொள்வதற்கான சரியான வழியைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். அவ்வாறே, இதனால் ஏற்படும் பெரிய பக்க விளைவுகளைத் தவிர்க்க முடியும். கூடுதல் ஊட்டச்சத்துக்களைப் பெற சியா விதைகளுடன் வேறு சில உணவுப்பொருள்களைச் சேர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Mango Chia Seeds: மேங்கோ ஜூஸ் உடன் இந்த ஒரு விதையை சேர்த்து குடிங்க. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!

சியா விதைகளின் நன்மைகள்

பொதுவாக சியா விதைகள் நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்த ஊட்டச்சத்து மிக்க உணவாகும். ஆய்வின் படி, சியா விதைகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வலுவான எலும்புகளை ஆதரிக்கவும் மற்றும் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவுகிறது. அதே போல, பல உணவுகளுடன் சியா விதைகளை எளிதில் சேர்த்துக் கொள்ளலாம். எனினும், சியா விதைகளுடனான சில உணவு சேர்க்கைகள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இவை செரிமான பாதிப்பு, அசௌகரியம் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

சியா விதைகளுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்

சியா விதைகளுடன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

நார்ச்சத்து உணவுகள்

சியா விதைகள் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இந்நிலையில், இந்த நார்ச்சத்துக்கள் நிறைந்த சியா விதைகளுடன் மற்ற நார்ச்சத்து உணவுகளைச் சேர்த்து உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே சியா விதைகளுடன் டு, ஓட்ஸ் போன்ற பிற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் ஆப்பிள், பேரிக்காய் போன்ற குறிப்பிட்ட பழங்களுடன் இணைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்த அதிகப்படியான நார்ச்சத்து உட்கொள்ளல் காரணமாக வீக்கம், வாயு மற்றும் வயிற்று அசௌகரியம் போன்றவை ஏற்படலாம். மேலும் இது உணவை செரிமானம் அடையச் செய்ய போராடுவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.

ஆக்சலேட் உணவுகள்

பொதுவாக, கீரை, இனிப்பு உருளைக்கிழங்கு போன்ற உணவுகள் ஆக்சலேட்டுகள் நிறைந்த உணவுகளாகும். இவை கால்சியம் மற்றும் பிற தாதுக்களுடன் பிணைக்கக்கூடியவையாகும். இதனால், எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் ஏற்படலாம். மேலும் சியா விதைகளில் ஒப்பீட்டளவில் ஆக்சலேட்டுகள் நிறைந்துள்ளது. இதை மற்ற ஆக்சலேட் நிறைந்த உணவுகளுடன் இணைப்பது சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தலாம். மேலும் இந்த அதிகப்படியான ஆக்சலேட் உட்கொள்ளலால், சிறுநீரகங்களில் கால்சியம் ஆக்சலேட் கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric With Chia Seeds: செரிமானம் முதல் சர்க்கரை வியாதி வரை. மஞ்சளுடன் சியா விதை தரும் சூப்பர் நன்மைகள்

பைடிக் அமில உணவுகள்

பைடிக் அமிலம் ஆனது பீன்ஸ், பருப்பு, பருப்புகள் மற்றும் சில தானியங்கள் போன்ற உணவுகளில் நிறைந்துள்ளது.  சியா விதைகளிலும் பைடிக் அமிலம் காணப்படுகிறது. இந்நிலையில் இதை மற்ற மற்ற பைடிக் அமிலம் நிறைந்த உணவுகளுடன் இணைப்பதால் கால்சியம், இரும்பு போன்ற அத்தியாவசிய தாதுக்களை உறிஞ்சுவதற்கு உடலின் தன்மையைக் குறைக்கிறது. இதனால் தாது உறிஞ்சுதல் குறைக்கப்பட்டு கால்சியம் குறைபாடுகளுக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, தாவர அடிப்படையிலான ஆதாரங்களை மட்டும் உண்பவர்களுக்கு இது சிக்கலானதாக இருக்கலாம்.

பால் பொருள்கள்

சில சமயங்களில் தயிர், பால் போன்ற பால் பொருட்களுடன் சியா விதைகளை இணைப்பது செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக லாக்டோஸ் சகிப்புத்தன்மை அல்லது பால் உணர்திறன் கொண்டவர்களுக்கு இது பாதுகாப்பற்றதாக அமைகிறது. மேலும், சிலருக்கு பால் செரிமானம் அடைவதில் சிரமம் ஏற்படும் போது அவர்கள் சியா விதைகளைச் சேர்ப்பது நிலைமையை மேலும் மோசமாக்கலாம். இதற்கு முக்கிய காரணம் சியா விதைகளில் உள்ள நார்ச்சத்துக்களே காரணமாகும். சியா விதைகள் திரவத்தை உறிஞ்சும் போது ஜெல் போன்ற நிலைத்தன்மையை அடைகிறது. இந்நிலையில் இதை பாலுடன் உட்கொள்வது வீக்கம், வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

எனவே இது போன்ற பல்வேறு உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடுபட நாம் கட்டாயம் சியா விதைகளுடன் இந்த உணவுகள் சேர்த்து உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Chia Seed Water Side Effects: தினமும் சியா விதை தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Pineapple Biryani: சுவையான பைனாப்பிள் தம் பிரியாணி செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Disclaimer