$
Foods That You Should Never Combination With Honey: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை, ஆரோக்கியமான உணவுகள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். அதே சமயம், இயற்கையாகவே சில உணவுப் பொருள்களை வேறு சில உணவுப்பொருள்களுடன் கலந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். அந்த வகையில் தேனுடன் சில உணவுப்பொருள்களைச் சேர்ப்பது உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம். பொதுவாக தேன் இயற்கையான ஒட்டும் தன்மை கொண்ட உணவுப் பொருளாகும்.
தேன் ஆனது பூக்களின் அமிர்தத்திலிருந்து தேனீக்களால் தயாரிக்கப்படுவதாகும். இந்த இனிப்புப் பொருளான தேனை, தேனீக்களானது பூக்களிலிருந்து சேகரித்து அதை தேனாக மாற்றுகிறது. இந்த சுவையான தேன், இயற்கையான இனிப்பு சுவை கொண்டதாக உள்ளது. இந்த இனிமையான தேனை சுவைக்காக சேர்ப்பதுடன், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது. இந்த பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் தேனுடன், சில உணவுகளைச் சேர்த்து சாப்பிடக் கூடாது. ஏனெனில், இவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்.
தேனின் ஆரோக்கிய கலவைகள்
தேன் அதிகளவிலான கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இது தவிர மற்ற சில ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதன் படி, 100 கிராம் தேனில் 82.4 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும், 17 கிராம் தண்ணீர், 52 மி.கி பொட்டாசியம், 6 மிகி கால்சியம் மற்றும் 0.5 மிகி வைட்டமின் சி போன்ற மற்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Wrong Food Combinations: மறந்தும் இந்த 9 பொருட்களை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீங்க!!
தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
தேனை உட்கொள்வது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது மூக்கு மற்றும் தொண்டை பகுதியில் இருந்து அதிகப்படியான சளியை அகற்ற உதவுகிறது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கி, உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. தேனில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளதால், இவை நோய்த்தொற்றுக்களைத் தடுக்கவும், காயத்தைக் குணமாக்கவும் உதவுகிறது. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தேன் யார் சாப்பிட கூடாது?
பொதுவாக நீரிழிவு நோய்க்கு முந்தையவர்கள், நீரிழிவு நோயாளிகள், எரியும் உணர்வு மற்றும் அமிலத்தன்மை உணர்வு போன்ற அறிகுறிகளைக் கொண்டவர்கள் தேன் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தேனுடன் சாப்பிடக் கூடாத உணவுகள்
தேனுடன் சில உணவுகளைச் சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வெள்ளரியுடன் தேன்
சிலர் சாலட்டுடன் தேன் சேர்த்து உட்கொள்வது அதிக சத்தானதாக மாற்றும் என நினைக்கின்றனர். இவ்வாறு சாலட்டில் தேன் சேர்ப்பது நன்மை எனினும், வெள்ளரி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். வெள்ளரியில் குளிரூட்டல் மற்றும் டையூரிடிக் குணங்கள் நிறைந்துள்ளது. இவற்றைத் தேன் கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தேனுடன் குளிர்ந்த வெள்ளரியைச் சேர்ப்பது சரும பிரச்சனைகள் அல்லது செரிமான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Bad Food Combination: மறந்தும் தயிருடன் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க
சூடான நீருடன் தேன்
தேனை வெந்நீருடன் சேர்த்து உட்கொள்வது உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். ஆயுர்வேத ஆராய்ச்சியின் சர்வதேச காலாண்டு இதழ் 2010-ல் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் தேன் 140 டிகிரியில் நச்சுத்தன்மையுடையதாக மாறும் எனக் கூறப்படுகிறது. தேனில், இயற்கையான சர்க்கரைகள் நிறைந்திருப்பதால், இதை சூடாக்கும் போது HMF அல்லது 5-ஹைட்ராக்ஸிமெதைல்ஃபர்ஃபுரலை வெளியிட வாய்ப்பு உண்டு. இது புற்றுநோயை உண்டாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நெய்யுடன் தேன்
நெய் மற்றும் தேன் அல்லது தெளிக்கப்பட்ட வெண்ணெய் கலந்து கொள்வது நச்சுத்தன்மையை ஏற்படுத்தலாம். இது குறித்து, 2020 ஆம் ஆண்டு நச்சுயியல் அறிக்கைகளில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் எலிகளுக்கு நெய் மற்றும் தேனை சம விகிதத்தில் கொடுக்கப்பட்டது. இவை பொருந்தாதவையாகக் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் எலிகளில் எடையிழப்பு, காதுகளில் சிவப்பு திட்டுகள் மற்றும் முடி உதிர்தல் போன்றவை இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

பூண்டுடன் தேன்
தேனுடன் பூண்டு சாப்பிடும் போது, செரிமான கோளாறு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது சிலருக்கு இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். மேலும், பூண்டு வலுவான ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளதால், இதை தேனுடன் கலக்கும் போது உடல் கலவையை எவ்வாறு செயலாக்குகிறது என்பதைப் பாதிக்கிறது.
இனிப்பு பழங்கள்
மாம்பழம் போன்ற இனிப்புப் பழங்களை தேன் சொட்டுகளுடன் சேர்த்து சாப்பிடுவது மேலும் இனிப்பை அதிகரிக்கலாம். அதிக இனிப்பைத் தவிர்க்க அன்னாசி போன்ற இனிப்புப் பழங்களுடன் தேன் கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இவை ஏற்கனவே இனிப்பானதாக இருப்பதால், மக்களுக்கு சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் இதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இது போன்ற ஏராளமான உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதால், தேனுடன் இது போன்ற பொருள்களைச் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: மறந்தும் இந்த காய்கறிகளை தயிருடன் சாப்பிட்ராதீங்க! அப்றம் ஆபத்து உங்களுக்குத் தான்
Image Source: Freepik