நிற்காத வயிற்றுப்போக்கால் அவதியா? மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க

Foods to avoid during diarrhea: வயிற்றுப்போக்கு இன்று பலரும் தங்களது அன்றாட வாழ்வில் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். வயிற்றுப்போக்கின் போது சில உணவுகளை எடுத்துக் கொள்வது அது மேலும் மோசமாக்கலாம். இதில் வயிற்றுப்போக்கு ஏற்படும் சமயத்தில் நாம் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நிற்காத வயிற்றுப்போக்கால் அவதியா? மறந்தும் இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க


What food should be avoided during loose motion: அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் உள்ளது. அதில் ஒன்றாக வயிற்றுப்போக்கும் அமைகிறது. இது தளர்வான இயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள், ஒவ்வாமை, மன அழுத்தம், இரைப்பை குடல் அழற்சி போன்ற அடிப்படை நிலைமைகளால் ஏற்படக்கூடியதாகும். இந்நிலை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அது உடலில் நீரிழப்பை ஏற்படுத்துவதுடன், பல்வேறு உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக, வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உணவுமுறையை அடங்கும். ஏனெனில், சில ஆரோக்கியமற்ற உணவுகள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எனினும், வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த சில உணவுகள் உள்ளது. அதன் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். எனினும், தளர்வான இயக்கங்களின் போது எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் வயிற்றுப்போக்கை மேலும் மோசமாக்கலாம். இது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் வயிற்றுப்போக்கின் போது நாம் சாப்பிடக்கூடாத சில உணவுகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Upset Remedy: மலச்சிக்கலை சரிசெய்ய உதவும் பெஸ்ட் வீட்டு வைத்தியம் இதுதான்!

வயிற்றுப்போக்கின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

பொதுவாக செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவே நார்ச்சத்து உணவுகள் உதவுகின்றன. இவை வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதன் படி, பீன்ஸ், பருப்பு, ப்ரோக்கோலி, கொண்டைக்கடலை, காலிஃபிளவர், முழு தானியங்கள் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றில் அதிகளவு கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த வகை உணவுகள் மலச்சிக்கல் ஏற்படும் போது மிகுந்த நன்மை பயக்கும். ஆனால், வயிற்றுப்போக்கின் போது இந்த உணவுகளை உட்கொள்வது தளர்வான இயக்கங்களை அதிகரிக்கலாம்.

பால் பொருள்கள்

பால், தயிர், பாலாடைக்கட்டி போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், இது தளர்வான இயக்கங்களின் போது உடலின் இயற்கையான எதிரியாகக் கருதப்படுகிறது. நம்மில் பலருக்கும் லாக்டோஸ் சகிப்புத் தன்மையற்றவர்கள். இதனால், பெரும்பாலான லாக்டோஸ் உறிஞ்ச முடியாமல் போகலாம். இது தளர்வான இயக்கங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகமாகும். லாக்டோஸை சகித்துக் கொள்ளக்கூடியவர்கள் கூட, அவர்களின் குடல் ஏற்கனவே மற்ற உணவுகளால் எரிச்சல் அடைந்திருப்பதால், தளர்வான இயக்கங்களின் போது பாலை ஜீரணிப்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம். மேலும், இதன் அறிகுறிகளாக வீக்கம், வாயு மற்றும் பிற தளர்வான இயக்க சிக்கல்கள் போன்றவை ஏற்படும்.

காஃபின் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள்

வயிற்றுப்போக்கு உள்ள சூழ்நிலையில் நாம் தவிர்க்க வேண்டிய பானங்களில் காபியும் அடங்கும். போதுமான அளவிலான காபி தேவையாகக் கருதப்பட்டாலும், அதில் உள்ள காஃபின் மலத்தைத் தளர்வடையச் செய்யக்கூடியதாகும். இது ஒருவரின் செரிமானத்தின் வேகத்தை அதிகரித்து வயிற்றுப்போக்கைத் தூண்டுகிறது. கூடுதலாக, கார்பனேற்றப்பட்ட பானங்கள் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம். எனவே இந்த வகை உணவுகளை வயிற்றுப்போக்கின் போது தவிர்ப்பது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Child Loose Motion: உங்க குழந்தைக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனையா? இந்த 7 பொருள் போதும்

கொழுப்பு உணவுகள்

பொதுவாக அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகும். அதன் படி, பொரித்த உணவுகள், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், அதிக எண்ணெயில் சமைத்த உணவுகள், கொழுப்புச் சத்துள்ள மாட்டிறைச்சி, இறைச்சிகள் மற்றும் முட்டைகள் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்ளலாம் அல்லது தவிர்க்கலாம். ஏனெனில், இந்த வகை உணவுகள் செரிமான அடைய அதிக நேரம் எடுக்கும். இந்நிலையில் ஏற்கனவே செரிமான அமைப்பு அதிக வேலை செய்யும் போது, இது நெரிசலான வயிறு, குமட்டல் போன்றவற்றிற்கு வழிவகுக்கலாம்.

காரமான உணவுகள்

பெரும்பாலான மசாலாக்கள் உடலில் வெப்பத்தைச் சேர்க்கக் கூடியாது. உதாரணமாக மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இவை செரிமானப் புறணியை எரிச்சலூட்டுவதுடன், எரியும் உணர்வை ஏற்படுத்தலாம். மேலும், இது தசைப்பிடிப்பை மோசமாக்குகிறது மற்றும் வயிற்றுப்போக்கைத் தூண்டுகிறது. இதனால், ஆசனவாய் எரிச்சலடையலாம். எனவே வயிற்றுப்போக்கின் போது இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

இவை அனைத்தும் வயிற்றுப்போக்கை மோசமடையச் செய்யும் உணவுகளாகும். எனவே இந்த வகை உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வயிற்றுப்போக்கு அடிக்கடி ஏற்பட்டால் அல்லது உடல் அதீத சோர்வு அடைந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Worst Foods For Diarrhoea: வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மாம்பழம் சாப்பிடலாமா? டாக்டர் கூறுவது என்ன?

Image Source: Freepik

Read Next

When To Eat Fruits: ஒரு நாளைக்கு எத்தனை முறை பழங்கள் சாப்பிட வேண்டும்?

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version