வயிற்றுப்போக்கால் அவதியா? உடனே நிற்க இந்த ட்ரிங்ஸ் குடிங்க

  • SHARE
  • FOLLOW
வயிற்றுப்போக்கால் அவதியா? உடனே நிற்க இந்த ட்ரிங்ஸ் குடிங்க


Best Juice To Stop Loose Motion: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை காரணமாக இன்று பலரும் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இதில் வயிற்றுப்போக்கு மிகவும் சங்கடமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இது உடலிலிருந்து ஆற்றலை வெளியேற்றுவதுடன், அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு நோய்த்தொற்றுக்கள், உணவு சகிப்புத்தன்மை என பல காரணங்கள் இருக்கலாம்.

சிலர் லேசான முதல் கடுமையான வயிற்றுப்போக்கு வரை அனுபவிப்பர். இதில் கடுமையான வயிற்றுப்போக்கிற்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. அதே சமயம், லேசான வயிற்றுப்போக்கை வீட்டிலேயே சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நிர்வகிக்க முடியும். இதில் வயிற்றுப்போக்கிற்கு உதவும் சில ஆரோக்கியமான பானங்கள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Heat Rashes Remedies: கோடையில் ஏற்படும் வியர்க்குருவை நீக்க இந்த ஐந்து பொருள்களை மட்டும் யூஸ் பண்ணுங்க

வயிற்றுப்போக்குக்கான ஆரோக்கியமான பானங்கள்

வயிற்றுப்போக்கின் போது, உடலில் இருந்து அதிகளவு தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை இழக்க நேரிடலாம். இதில் உடல் பலவீனம் மற்றும் நீரிழப்பைத் தடுக்க உடலில் இழந்த திரவங்களை நிரப்புவது முக்கியமாகும். இதில் வயிற்றுப்போக்கிலிருந்து உடனடியாக நிவாரணம் பெறவும், உடலை நீரேற்றமாக வைக்கவும் குடிக்க வேண்டிய ஆரோக்கியமான பானங்கள் சிலவற்றைக் காணலாம்.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் நீர் செரிமான பிரச்சனைகளுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இது பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த ஆதாரமாகும். இது வயிற்றுப்போக்கினால் ஏற்படும் நீரிழப்புக்கு திறம்பட சிகிச்சையளிப்பதுடன், உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. இது செரிமான அமைப்புக்கு சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளையும் தருகிறது. ஒரு கிளாஸ் தேங்காய் தண்ணீரில் எலக்ட்ரோலைட்டுகளுக்காக ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சியாக அருந்த விரும்புபவர்கள் சில ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கலாம்.

மோர்

இது வயிற்றுப்போக்குக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியமாகக் கருதப்படுகிறது. இதில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. புரோபயாடிக்குகள் என்பது ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கும் நன்மை தரும் பாக்டீரியா ஆகும். மோரில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இது வயிற்றுப்போக்கின் போது இழந்த நீரிழப்பை சரி செய்ய உதவுகிறது. சில பேருக்கு தயிர் அல்லது மோர் உட்கொள்வது வயிற்றுப்போக்கு மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி அறிகுறிகளை மோசமாக்கும் என்பதால், லாக்டோஸ் சகிப்புத் தன்மை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மோரில் ஒரு சிட்டிகை உப்பு, நறுக்கிய புதினா இலைகள் அல்லது கொத்தமல்லி சேர்த்து அருந்தலாம்.

எலுமிச்சை நீர்

கோடைக்காலத்தில் சிறந்த பானமான எலுமிச்சை நீர் வயிற்றுப்போக்கிற்கு உதவுகிறது. இதில் அதிகளவு வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இது குடலில் உள்ள pH அளவை சமப்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்சனைக்கு உதவுகிறது. கூடுதலாக, இதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது. எலுமிச்சைச் சாற்றில் இனிப்புக்காக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Asthma Home Remedies: ஆஸ்துமாவை நிர்வகிக்க சூப்பர் வீட்டு வைத்தியம் இங்கே…

அரிசி நீர்

இது வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தும் இயற்கையான சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இதில் மாவுச்சத்து நிறைந்துள்ளது. இது தளர்வான மலத்தை பிணைக்கவும், செரிமான மண்டலத்தில் இனிமையான விளைவை அளிக்கிறது. இது வயிற்றுப்போக்கை மெதுவாக நிறுத்த உதவுகிறது. வேக வைத்த அரிசி நீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குடிக்கலாம்.

வாழைப்பழ ஸ்மூத்தி

இது செரிமானத்தை எளிதாக்கும் சிறந்த பானமாகும். இதில் பொட்டாசியம், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வாழைப்பழத்தில் உள்ள இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் செரிமான அமைப்பில் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், வாழைப்பழத்தில் பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை குடலில் உள்ள அதிகப்படியான நீரை உறிஞ்சி குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. ஒரு பழுத்த வாழைப்பழத்தை ஒரு கப் பால் மற்றும் தயிர் சேர்த்து, இனிப்புக்காக ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து மென்மையாக்கும் வரை கலவையை கலந்து அருந்தலாம்.

வீட்டிலேயே எளிதான முறையில் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்தவும், இதனால் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்கவும் இந்த பானங்களை அருந்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Stomach Pain Oil Massage: வயிற்று வலிக்கு இந்த எண்ணெய்ல மசாஜ் பண்ணுங்க. டக்குனு குணமாகிடும்

Image Source: Freepik

Read Next

Asthma Home Remedies: ஆஸ்துமாவை நிர்வகிக்க சூப்பர் வீட்டு வைத்தியம் இங்கே…

Disclaimer

குறிச்சொற்கள்