Heat Rashes Remedies: கோடையில் ஏற்படும் வியர்க்குருவை நீக்க இந்த ஐந்து பொருள்களை மட்டும் யூஸ் பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Heat Rashes Remedies: கோடையில் ஏற்படும் வியர்க்குருவை நீக்க இந்த ஐந்து பொருள்களை மட்டும் யூஸ் பண்ணுங்க

மோசமான சுகாதாரம் மற்றும் அதிகப்படியான வியர்வை போன்றவையே வெப்ப வெடிப்புகளின் வளர்ச்சிக்குக் காரணமாகிறது. இது பெரும்பாலும் அதிகம் ஈரப்பதம் உள்ள பகுதிகளிலேயே ஏற்பட வாய்ப்புள்ளது. எனினும், இந்த வெப்பத் தடிப்புகள் பொதுவாக கடுமையானவை அல்ல. இது சில நாள்களுக்குள் தானாகவே போய் விடலாம். இதனைத் தவிர்க்க கிருமி நாசினி மற்றும் பூஞ்சை காளான் நிறைந்த பொடிகளைப் பயன்படுத்துகிறார்கள். இந்த வியர்வை பிரச்சனையிலிருந்து வெளியேற சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Breast Milk Home Remedies: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் டாப் 7 உணவுகள் இதோ!

வியர்க்குருவை நீக்கும் வீட்டு வைத்தியங்கள்

கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் வியர்க்குருவை நீக்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.

முல்தானி மிட்டி

வியர்க்குருவை நீக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறைகளில் ஒன்று முல்தானி மிட்டி ஆகும். முல்தாணி மிட்டி சருமத்தில் உள்ள மாசுபடுத்தும் செல்களை அகற்றுவதற்கு சிறந்த தீர்வாக உள்ளது. இது பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல்படுகிறது. இதை ஒரு சிறந்த ஆன்டி பயாடிக் என்றே கூறலாம். 1 டேபிள் ஸ்பூன் முல்தானி ம்ட்டியுடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்க வேண்டும். பின் இந்த கலவையை சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். முல்தானி மிட்டி குளிர்ச்சியான விளைவைக் கொண்டுள்ளது. இதன் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.

ஐஸ் க்யூப்

சருமத்திற்கு ஐஸ் க்யூப் பயன்படுத்துவது சரும அழற்சி, அரிப்பு மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது தவிர, சருமத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, துளைகளை சுருக்கி, சருமத்தை பளபளப்பாக வைக்கிறது. இதற்கு 5-6 ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் மூடி, பாதிக்கப்பட்ட இடங்களில் ஐஸ்கட்டிகளைத் தேய்க்க வேண்டும். இது படிப்படியாக எரியும் உணர்வு, அரிப்பு, வியர்க்குரு மற்றும் இதனால் உருவாகும் சிவத்தல் போன்றவற்றை நீக்குகிறது.

கற்றாழை

இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகிறது. இவை முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. புதிய கற்றாழையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஜெல்லை முகத்தில் தடவி 30 நிமிடங்கள் வரை வைக்கவும். இந்த ஜெல் இனிமையான மற்றும் மென்மையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. கற்றாழ ஜெல்லை தூங்கும் முன் முகத்தில் தடவி, பின் காலையில் குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இதனை வழக்கமாக பயன்படுத்துவது சருமத்தில் தோன்றும் வெடிப்புத் தடிப்புகளைத் தணிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Uric Acid Level Remedies: யூரிக் அமிலத்தால் இத்தனை பிரச்சனையா? தவிர்க்க என்ன செய்வது?

தயிர்

தயிரில் வைட்டமின் பி6, பி12 மற்றும் சி, கால்சியம், புரதம், துத்தநாகம், பாந்தோதெனிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது பல்வேறு தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தருவதாக அமைகிறது. தயிரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி சிறிது நேரம் விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் பாக்டீரியாக்களை அகற்றுவதுடன், உஷ்ணத்தால் ஏற்படும் வியர்க்குரு பிரச்சனையைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் தயிர் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்கி பளபளப்பாக வைக்க உதவுகிறது.

வேப்பிலை

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் காணப்படுகிறது. இவை முகப்பரு மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற பல்வேறு வகையான பூஞ்சை தொற்றுக்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இதற்கு 15-20 வேப்ப இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, பின் ஆற வைத்து பாதிக்கப்பட்ட சருமத்தை சுத்தம் செய்யலாம். இவை வியர்க்குருவை நீக்க உதவும் பண்புகளைக் கொண்டுள்ளது.

கோடைக்காலத்தில் ஏற்படும் வியர்க்குருவை நீக்க இந்த வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Skin Itching Remedies: கொளுத்தும் வெயிலில் சருமத்தில் எரிச்சலா? சிம்பிளான இந்த வீட்டு வைத்தியங்கள் போதும்

Image Source: Freepik

Read Next

Remedies For Eye Bags: கண் வீக்கத்தை போக்க இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க!

Disclaimer