Itchy Skin Remedies During Summer: நாம் அனைவரும் பல நேரங்களில் எரிச்சல் உணர்வை அனுவிப்போம். எனினும், இதன் நீடித்த தாக்கம் பல்வேறு கடுமையான நோய்களை ஏற்படுத்தலாம். அரிக்கும் தோலழற்சி, ரிங்வோர்ம், சொரியாசிஸ் போன்ற பல்வேறு காரணங்களால் சரும அரிப்பு ஏற்படலாம்.
ஆனால், சிலருக்கு கோடைக்காலங்களில் சரும அரிப்பு ஏற்படலாம். ஏனெனில் கோடைக்காலம் வந்துவிட்டாலே பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படும். இவை வலுவான சூரிய ஒளி மற்றும் வியர்வை காரணமாக ஏற்படுகிறது. இதனால், உடலில் அரிப்பு உண்டாகலாம். சில சமயங்களில் வியர்வை காரணமாக ஏற்படும் அரிப்பால் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயமும் நிறைந்துள்ளது. இந்த அரிப்பிலிருந்து நிவாரணம் பெற சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Breast Milk Home Remedies: தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும் டாப் 7 உணவுகள் இதோ!
சரும அரிப்பு நீங்க வீட்டு வைத்தியங்கள்
தேங்காய் எண்ணெய் மசாஜ்
வறண்ட சரும பிரச்சனை காரணமாக, உடலில் அரிப்பு உண்டாகலாம். இந்த சூழ்நிலையில் முழு உடலையும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்வது சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை குணமாக்கலாம். கூடுதலாக, தேங்காய் எண்ணெய் கொண்டு வாரம் இருமுறை மசாஜ் செய்வது சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும்.
வேப்பம்பூ நீரில் குளிப்பது
உடலில் அரிப்பு பிரச்சனை இருப்பின், வேப்ப இலைகளை தண்ணீரில் சேர்த்து குளிக்கலாம். இதன் மூலம் உடல் அரிப்பு பிரச்சனையை நீக்கலாம். வேம்பில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இந்த நீரில் குளிப்பது பூஞ்சை, சொறி பிரச்சனையைத் தவிர்க்கலாம்.
ஐஸ் பேக் தடவுவது
கோடையில் சூரிய ஒளி, வியர்வை போன்றவற்றால் உடலில் அரிப்பு உண்டாகலாம். இதற்கு அரிப்பு இருக்கும் இடத்தில் குளிர்ந்த அல்லது ஈரமான துணியைப் பயன்படுத்தலாம். எனவே சரும அரிப்புக்கு ஐஸ் பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரிப்பு நீங்க 5 முதல் 10 நிமிடங்கள் சருமத்தில் ஐஸ்கட்டியைப் பயன்படுத்தலாம்.
பருத்தி ஆடைகள் அணிவது
தற்போதெல்லாம் மக்கள் பல்வேறு வகையான துணிகளால் செய்யப்பட்ட ஆடைகளையே அணிய விரும்புகின்றனர். இவை சருமத்திற்கு அரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில், கோடையில் அரிப்பு ஏற்படுமாயின், பருத்தி ஆடைகளை மட்டும் அணிய வேண்டும். இது போல தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதன் மூலம், அரிப்பிலிருந்து நிவாரணம் பெறலாம். கோடைக்காலத்தில் பருத்தி துணி அணிவது பல்வேறு சரும பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Burning Feet:பாதத்தில் எரிச்சலா? 5 நாட்களில் சரி செய்ய அசத்தலான வீட்டு வைத்தியங்கள்!
கற்றாழை தடவுவது
கற்றாழையில் நிறைந்துள்ள இயற்கையான மற்றும் குளிர்ச்சி மிகுந்த பண்புகள் சருமத்தை குளிர்வித்து, ஈரப்பதத்தை பராமரிக்கிறது. கோடைக்காலத்தில் அரிப்பு நீங்க கற்றாழை சிறந்த தேர்வாகும். இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து அதை அரிக்கும் சருமத்தில் தடவ வேண்டும். இது சருமத்தில் ஏற்படும் அரிப்பு, வெடிப்பு மற்றும் எரியும் உணர்வைத் தணிக்கிறது.
சருமத்தை ஈரப்பதமாக வைப்பது
பெரும்பாலும் மக்கள் கோடையில் சருமத்தை ஈரப்பதமாக்குவதில் கவனம் செலுத்துவதில்லை. இதனால், சருமம் வறண்டு, உயிரற்றதாக மாறுகிறது. இதன் காரணமாக, சருமத்தில் அரிப்பு, எரிச்சல் மற்றும் எரியும் உணர்வு ஏற்படலாம். இதிலிருந்து விடுபட, கோடைக்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குவது அவசியமாகிறது. இதற்கு இரசாயனம், வாசனை இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
மன அழுத்தத்தைக் குறைப்பது
பதற்றம், மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை சருமத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே சருமத்தைப் பாதுகாப்பாக வைக்க, மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியமாகும். ஏனெனில், மன அழுத்தம் சரும அரிப்பை ஏற்படுத்தலாம்.
சரும அரிப்பு ஏற்பட்டால் சொறிவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது சருமத்தில் தொற்று ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். அரிப்பு தீவிரமான, மிதமான பிரச்சனையாக இருப்பின், இதை புறக்கணிக்கக் கூடாது. ஆரம்ப காலத்திலேயே அரிப்புக்கான சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்யலாம். எனினும், இந்த அரிப்பு நீண்ட காலமாக நீடித்திருப்பின் உடனடியாக தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Bloating Home Remedies: வயிறு உப்புசத்தால் அவதியா? இந்த 6 பொருளில் ஒன்னு போதும்
Image Source: Freepik