Itchy Skin Remedies: கோடைக்காலத்தில் சரும அரிப்பைத் தடுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் இதோ

  • SHARE
  • FOLLOW
Itchy Skin Remedies: கோடைக்காலத்தில் சரும அரிப்பைத் தடுக்க உதவும் வீட்டு வைத்தியங்கள் இதோ


சரும அரிப்பைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைகள்

வீட்டிலேயே உள்ள சில எளிய பொருள்களைப் பயன்படுத்தி, கோடைக்காலத்தில் ஏற்படும் சரும அரிப்பைத் தடுக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

முடி பராமரிப்பிற்கு உதவும் தேங்காய் எண்ணெய் சரும பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கோடைக்காலத்தில் முகத்தில் ஏற்படும் நமைச்சல், அரிப்பு போன்றவற்றிற்கு இது ஒரு நல்ல தீர்வாக அமைகிறது. தினமும் குளிக்கும் முன்பாக முகம், கை, கால்கள் மற்றும் கழுத்து போன்ற இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவி, அரை மணி நேரம் குளித்து வந்தால் சரும அரிப்பிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Oil On Feet: பாதங்களில் இந்த பிரச்சனையா? தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் பண்ணுங்க

துளசி இலைகள்

துளசி இலைகளில் உள்ள மருத்துவ குணங்கள் சருமத்தில் ஏற்படும் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. இதற்கு ஒரு கைப்பிடி அளவிலான துளசி இலைகளை, நீரில் நன்கு அலசி பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ள வேண்டும். முகத்தை கழுவி, இந்த கலவையை முகம், கழுத்து மற்றும் கைகளில் தேய்த்துக் கொள்ள வேண்டும். இதன் குளிர்ச்சியான பண்புகள் சரும அரிப்பை நீக்குகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்

இதில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை தொற்றுநோய்களைத் தடுக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு குளிக்கும் போது, தண்ணீரில் சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகரைச் சேர்க்க வேண்டும். இவ்வாறு கலந்து அரை மணி நேரம் கழித்து இந்த தண்ணீரில் குளித்து வர சரும அரிப்பு சரியாகும். அல்லது ஒரு டம்ளர் நீரில் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து அதை காட்டன் துணி மூலம் அரிப்பு இருக்கும் தடவலாம். இதனால், சரும அரிப்பு சரியாகும்.

ஓட்ஸ்

ஓட்ஸ் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது சரும அரிப்பு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும், இது சரும எரிச்சலைத் தடுக்கிறது. குளிக்கும் நீரில் இரண்டு ஸ்பூன் சேர்த்து, அந்த நீரை 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். பின் இந்த நீரில் குளித்தால், சருமத்திற்கு நன்மையைத் தரும்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Face Scrub: வெயில் காலத்தில் வீட்டில் ஃபேஸ் ஸ்க்ரப் செய்வது எப்படி?

தயிர்

முகத்தில் ஏற்படும் அரிப்பைத் தவிர்க்க தயிர் சிறந்த தேர்வாகும். இதற்கு, முகத்தை வெறும் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் சுத்தமான தயிரை, முகம், கழுத்து, கை மற்றும் கால்களில் தடவ வேண்டும். அதன் பிறகு 15 நிமிடம் கழித்து முகம், கை மற்றும் கால்களச் சோப்பு கொண்டு அலச வேண்டும். இது சரும அரிப்பு மற்றும் எரிச்சலை விரைவில் குணமாக்குகிறது.

வெந்தய விதைகள்

வெந்தயத்தின் குளிர்ச்சியான பண்புகள் சரும அரிப்பு மற்றும் தோல் அழற்சியிலிருந்து நிவாரணம் தருகிறது. இந்த சிறிய விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் தடிப்புகள் அல்லது தோல் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் தன்மை கொண்டதாகும். இதற்கு வெந்தயத்தை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பேஸ்ட் செய்ய வேண்டும். இந்த பேஸ்ட்டை அரிப்பு இருக்கும் தடவி உலர வைக்க வேண்டும். அதன் பிறகு சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேன்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.

இந்த வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தி கோடைக்காலத்தில் ஏற்படும் சரும அரிப்பு மற்றும் எரிச்சலிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Tea Tree Toner: சரும பொலிவை அதிகரிக்கும் டீ ட்ரீ டோனர். இதை வீட்டிலேயே எளிதாக இப்படி தயார் செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Summer Cold Remedies: கொளுத்தும் வெயிலிலும் சளித்தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

Disclaimer

குறிச்சொற்கள்