Itchy Skin: தோல் அடிக்கடி அரிக்கிறதா? காரணமும், வீட்டு வைத்தியமும்!

  • SHARE
  • FOLLOW
Itchy Skin: தோல் அடிக்கடி அரிக்கிறதா? காரணமும், வீட்டு வைத்தியமும்!


Itchy Skin: சில நேரங்களில் தோலில் அரிப்பு என்பது பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். கூட்டத்தில் இருக்கும் போதும் தூங்கும் போதும் திடீரென ஒரே இடத்தில் அதிகமாகவும் அடிக்கடியும் அரிப்பு ஏற்படும். இதனால் பலர் பல சிரமங்களை சந்திப்பார்கள்.

தோல் அரிப்பு என்பது குறிப்பிட்ட காலத்தில் தான் ஏற்படும் என்பதில்லை. ஆனால் வெக்கை நேரத்தில் அதிகமாக ஏற்படும் என்பதே உண்மை. ரசாயன அடிப்படையிலான தோல் தயாரிப்புகளான பவுடர்கள் அல்லது மாய்ஸ்சரைசர்களை பயன்படுத்துவதாலும் அரிப்பு பிரச்சனை ஏற்படலாம்.

அரிக்கும் தோல் அழற்சியானது அடோபிக் டெர்மடிடிஸ் என கூறப்படுகிறது. தலை முதல் கால் வரை நமைச்சல் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். தொடர்ந்து சொறிவதால் தோல் வெடிப்பு மற்றும் புண் உள்ளிட்டவைகள் ஏற்படலாம். இது சிவந்த, வறண்ட மற்றும் அரிப்பு சருமத்திற்கு வழிவகுக்கிறது.

அரிப்பு பிரச்சனைக்கான வீட்டு வைத்தியம்

அலோவேரா ஜெல்

கற்றாழை ஜெல் சருமத்திற்கான பல பலன்களை கொண்டிருக்கிறது. இதில் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து வறட்சியை குறைக்கிறது. வறட்சி இல்லாவிட்டால் அரிப்பு பிரச்சனை தானாகவே குறையும்.

கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது சருமத்திற்கு நன்மை பயக்கும். அலோவேரா ஜெல் பயன்படுத்துவது என்பது மிகவும் எளிதானது, விரும்பினால் சந்தையில் ஆரோக்கியமான கற்றாழை ஜெல் வாங்கலாம். அல்லது நேரடியாக செடியில் பறித்தும் அதிலிருந்து ஜெல் பிரித்தெடுத்து அரிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

ஐஸ்கட்டி வைத்தல்

அதிக அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டால், அரிப்பு உள்ள இடத்தில் ஐஸ் கட்டியை பயன்படுத்தலாம், ஐசிங் செய்ய ஒரு நல்ல துணியில் ஐஸ் கட்டி வைத்து அரிப்பு ஏற்படும் இடத்தில் மெதுவாக ஒத்தடம் கொடுக்கவும். இதை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம்

வெக்கையால் வியர்வை ஏற்பட்டால், அரிப்பு சொறி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுப்பது முக்கியம். இதற்கு நீங்கள் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதால் சருமம் மிருதுவாகி, அரிப்பு பிரச்சனையை குறைக்கிறது. நல்ல ஆரோக்கியமான மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டியது மிக முக்கியம்.

பேக்கிங் சோடோ பயன்படுத்தலாம்

பேக்கிங் சோடாவிலும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பேக்கிங் சோடாவில் பூஞ்சை தோல் பிரச்சினைகள் மற்றும் தோல் அரிப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முதுகில் அடிக்கடி அரிப்பு இருந்தால், நீங்கள் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம்.

உங்கள் குளியல் நீரில் ஒரு கப் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தினால் நல்லது. நீங்கள் விரும்பினால், பேக்கிங் சோடாவை பேஸ்ட் செய்யலாம். பேஸ்ட் செய்ய, சிறிது பேக்கிங் பவுடரை எடுத்து, அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பொடியை பேஸ்ட் செய்ய வேண்டும். இப்போது இந்த பேஸ்ட்டை நீங்கள் அரிப்பு உள்ள இடத்தில் நேரடியாக தடவவும். அரிப்பிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

தேங்காய் எண்ணெய் தடவலாம்

தேங்காய் எண்ணெயும் அரிப்புகளைப் போக்க சிறந்த வழியாகும். முக்கிய விஷயம் என்னவென்றால், தேங்காய் எண்ணெய் எந்த எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாது. கடுமையான அரிப்பு இருந்தால், தேங்காய் எண்ணெயை அரிப்பு உள்ள இடம் முழுவதும் தடவலாம். தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கூறுகள் உள்ளன, அவை அரிப்புகளைத் தணித்து, சொறியைக் குறைக்கவும் உதவுகின்றன.

Image Source: FreePik

Read Next

மதுவால் நேர்ந்த சோகம்.. நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்..

Disclaimer

குறிச்சொற்கள்